முகத்தை பார்க்க கூட அவரோட பேமிலில அலோ செய்யலை... என்னை விட்டுட்டு வந்து வாய்க்கரிசி போடுன்னு சொன்னாங்க... அவர் முடியாதுன்னு சொல்லிட்டு தள்ளி நின்னு எல்லாத்தையும் பார்த்துட்டு வந்தார்... எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது... ஆனால் அப்போதும் அவர் நீ தான் எனக்கு அம்மாவா, தோழியா, மனைவியா இருக்கீயேன்னு சொன்னார்...”
சௌபர்ணிகா அமைதியாக கஸ்தூரி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நேத்து அவரை அங்கே பார்த்த போது எனக்கு கோபம் வந்தது... அவர் எப்படி என்னை ஏமாத்தலாம்னு ஆத்திரம் வந்தது... இப்போதும் கூட இருக்கு... அவர் என்னிடம் சொன்னது ஒன்னே ஓன்னு தான்... ஐ ஜஸ்ட் நீடட் அ கம்பானியன்... அப்போ எனக்கு கண் மண் தெரியாமல் கோபம் வந்தது... ஆனால் அப்புறம் யோசிச்சு பார்த்தேன்... இதை எப்படி சொல்வது... நாம ரொம்ப நேசிக்கும் பொருள் நமக்கே நமக்கா இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை... அப்புறம் தான் தெரியுது... அவருடைய பிஸ்னசில் லாஸ்... கொஞ்சம் வருத்தமா இருந்தார் தெரியும் பட் அவரோட பேசி நேரம் ஸ்பென்ட் செய்ய முடியலை... ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் இட் டிட் நாட் ஹேப்பன்... ஆனால் அத்தனை வருத்தத்திலும் கூட அவர் என்னோட பேசும் அந்த ஒரு போன் காலை மிஸ் செய்ததே இல்லை... ஹி ஹாஸ் பீன் மோர் தான் அ குட் ஹஸ்பன்ட்... ஆனால் நான் ஒரு நல்ல மனைவியான்னு கேட்டால் ஆன்சர் இஸ் ஆப்வியஸ்...”
“பட் மேடம் அதற்காக அவர் அப்படி தப்பு செய்யலாமா? இப்போ ஒரு கணவன் வேலை அதிகம்னு மனைவியை கண்டுக்காமல் இருப்பது மனைவி தப்பான ஒரு வழியில் போவதற்கு நல்ல காரணம்ன்னு சொன்னால் சரின்னு சொல்வோமா?”
“ரைட்... யூ ஹாவ் அ வேலிட் பாயின்ட்... ஆனால் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் பார்த்து குடும்பம் நடத்த முடியாதே...”
“ப்ச்... எனக்கு இது சரியா படலை...”
“ஏன் சௌபர்ணிகா, உனக்கு உங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும் தானே?”