"தேங்க் யூ மேடம்! தேங்க் யூ ஸோ மச்!"
🌼🌸❀✿🌷
சௌபர்ணிகா அலுவலகத்தில் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று, அவர்கள் அவளுக்காக தந்த அன்பு பரிசையும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய போது, மனம் சந்தோஷமும் வருத்தமும் கலந்த ஒரு விதமான வித்தியாசமான கலவையில் இருந்தது...
மூன்று மாதங்களில் பல வருடங்களுக்கான அனுபவத்தை கற்றுக் கொண்டதாக தோன்றியது... கஸ்தூரியின் மீது மதிப்பு மேலும் அதிகரித்திருந்தது... அவள் மிகவும் வித்தியாசமானவள் தான்...
கோமதி டி.வியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாடலை கேட்ட படி இரவு உணவிற்கு காய் நறுக்கி கொண்டிருந்தாள்...
“வீடாளும் பெண்மை இன்று நாடாளும் காலம் வந்தும்....”
சுஹாசினியின் நடிப்பில் லயித்திருந்த கோமதி, சௌபர்ணிகாவை பார்த்து புன்னகைத்தாள்.
“ஒருவழியா உன்னுடைய ட்ரெயினிங் முடிஞ்சுதா? மூணு மாசத்தில ரொம்பவே இளைச்சு போயிட்ட! உங்க அம்மாவும் அப்பாவும் நாங்க தான் உன்னை கவனிக்கலைன்னு நினைக்க போறாங்க...”
“அதெல்லாம் இல்லை சித்தி... திங்கள் தானே கிளம்ப போறேன், உங்க சமையலை இரண்டு நாள் ஒரு வெட்டு வெட்டினால் எல்லாம் சரியா போகும்...”
“அப்புறம் என்ன சொன்னாங்க உங்க மேடம்? இப்படியும் ஒரு பொம்பளை இருப்பாளா? நேத்து தான் அவளுக்கு அவள் புருஷனோட கீப் பத்தி தெரியும், ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் அவள் பாட்டுக்கு வேலைக்கு போறா... நானும் கூட மனசு ஒடைஞ்சு போயிடுவான்னு தப்பா நினைச்சேன்... சரி தான் நீ சொல்வது போல ஏதோ புரட்சி செய்ய போறான்னு பார்த்தால்