“நான் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு கோழை இல்லைம்மா...”
“மேடம்!” என்ற சௌபர்ணிகாவின் குரலில் அதிர்ச்சி இருந்தது... கண்கள் லேசாக கலங்கி இருந்தது...
சிறியவளின் கையை ஆதரவாக தட்டிய கஸ்தூரி,
“உனக்கு ரொம்ப மென்மையான மனசு சௌபர்ணிகா...” என்றாள்.
“...”
“நான் ஏன் இன்னைக்கு ஆபிஸ்க்கு சீக்கிரம் வந்தேன் தெரியுமா?”
“வேலை இருந்ததால்...” தயக்கத்துடன் பதில் சொன்னாள் சௌபர்ணிகா...
“கரெக்ட்... வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்ப தான்...”
எங்கே என்று கேட்க ஆர்வம் இருந்தாலும் இங்கிதம் இடம் கொடுக்கவில்லை... எனவே என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாக இருந்தாள் சௌபர்ணிகா.
“எங்கே போகன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இல்லையா?” என்றாள் கஸ்தூரி ஒரு புன்னகையுடன்.
குழம்பி போனாலும் கஸ்தூரியின் முகத்தில் தோன்றி இருந்த புன்னகை அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது...
“சொல்லுங்க மேடம்... கேட்டா தப்பா எடுத்துப்பீங்களோன்னு தான் அமைதியா இருந்தேன்...”
“என் கணவரை மீண்டும் வீட்டுக்கு அழைக்க தான்...”
“மேடம்!”