(Reading time: 38 - 75 minutes)

 

வள் சொன்னதைக்கேட்டவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது... அவள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறாள் என்று... நியாயமாக அவளின் கதை கேட்டு அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்... ஆனால் வரவில்லை... மாறாக, துள்ளிக்குதிக்காத குறை தான்... ஏனெனில் அவனைப் பொறுத்தவரை, திருமணத்திற்கு முந்தையை காதலை விட திருமணத்திற்குப் பிந்தைய காதல் தான் வலுவுடையது, ஆழமானது, ஆத்மார்த்தமானது...

அதை அவளிடத்திலும் சொன்னான்.... மேலும், எனக்கு இப்போதான் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு... ஹ்ம்ம்... எனக்கென்று நீயும் உனக்கென்று நானும் பிறந்திருக்கும்போது நீஏண்டாஅழணும்???... உன் வாழ்க்கையில் இப்போஇருக்குற நானும், என்னுடனானவருங்காலமும் தான் நிஜம்.... அதை நீ கூடிய சீக்கிரமே புரிஞ்சிப்ப.... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு... நல்ல நட்பு தான் எல்லா உறவுக்கும் அடிப்படை... அதை நான் உனக்கு முழுசாதரேன்இன்றிலிருந்து.... சரியா... மை டியர் பொண்டாட்டி..... இப்போ நீ தூங்கலாம்.... குட்நைட்டா.... என்றவன் அமைதியாக சென்று படுத்துக்கொள்ள, அவளோ அவனை அதிசயத்தைப்பார்ப்பதை போல் பார்த்துக்கொண்டிருந்தாள்...

பொதுவாக மனைவியின் பழைய காதல் கதை கணவனுக்கு தெரிந்தால் அவன் அவளை அடித்து, வார்த்தைகளால்சாகடிப்பான் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்... ஏன், அவள் தோழிகளின் வாழ்க்கையிலும் கண்கூடாக பார்த்திருக்கிறாள்... அதனாலே அவளின் தோழிகள் உன் கணவனிடம் நீயும் எங்களைப் போல் சொல்லி உன் வாழ்வைகேள்விக்குறிஆக்கிக்கொள்ளாதே என்று அறிவுரை கூறி விட்டு சென்றனர்...

ஆனால், அவளுக்கு தான் மனது கேட்கவில்லை... அவனிடம் சொல்லாமல் இருப்பது மனதை அரிக்க, எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் அவன் தானாக அவளிடம் பேசினான்... அதுதான் சமயம் என்று அவள் உடனே சொல்லவும் எண்ணவில்லை... ஆனாலும் அவன் பார்வை அவளை சொல்ல வைக்க, மடை திறந்த வெள்ளமாய்அனைத்தையும்கொட்டிவிட்டாள்...

அவள் எதிர்பார்த்தது ஒன்று அடி விழும்... இல்லை என்றால் விவாகரத்து... இந்த இரண்டும் செய்யாமல் அவன் நட்பாக இருக்கலாம்... உன் மனம் மாறும் வரை நான் காத்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி சென்றதை நம்ப முடியாஅதிர்ச்சியுடன் உள்வாங்கி கொண்டாள் அவள்...

அதன் பின், ஒரு வருடம் கண் மூடி இமைத்த உடன் செல்வது போல் சென்றுவிட, அவனும் அவளிடம் அதிக நெருக்கம் காட்டாமலும், அதே நேரம் வார்த்தைகளில் நெருக்கம் காட்டியும் அவளை மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றான்... அன்றும் வழக்கம் போல் மனைவி போட்டகோலத்தைரசித்தவன் எதிர்பார்க்காத ஒன்று அவளின் இழுத்து செறுகியிருந்தசேலையும், அவள் கணுக்கால் மச்சமும் தான்...

தலையை குலுக்கி அதிலிருந்து வெளிவந்தவன், என்ன நல்லவனா இருக்க விடுடா செல்லம்... என்று தூரத்தில் செல்லும் மனைவியைப் பார்த்துக்கொண்டு சொல்லியவன், பின், ஹ்ம்ம்... என்னைக்குதான்டாஎன்னைப்புரிஞ்சிக்கப்போற நீ??... என தன் அதிகாலை ஜாக்கிங்கை தொடர ஆயத்தமானான்...

அப்போது அவன் காதுகளில் அவன் மனைவியின் இனிய குரலோசை விழுந்தது... சுப்ரபாதமாய்...

அதைக்கேட்டுக்கொண்டேஜாக்கிங்க் முடித்தவன், வந்து குளித்து முடித்து தயாராகி கீழே வந்த போது, அவன் மனைவி பூஜையறையிலிருந்துகற்பூரத்தட்டோடுவெளிவந்தாள்...

மௌனமாக அவளையேப்பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் அருகில் வந்ததை கூட உணராமல் அவளையேரசித்தபடி நின்றிருந்தான்... அவள் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தும் புரியாமல் ஹ்ம்ம்....ஹ்ம்ம்.... என்றபடி தொண்டையை சரி செய்ய, அவன் சிரித்துக்கொண்டே, சாரி, கடவுளே, உங்க முன்னாடியே என் மனைவியை சைட்அடிச்சிட்டிருந்திருக்கிறேன்.... சாரி.... என்றபடி மனதினுள் சொல்லியவன், இப்போக்கூடஹ்ம்ம்தானா?.... என்றபடி அவளைப் பார்க்க... அவள் விழி நிலம் நோக்கி செல்ல முயல, அவன் சட்டென்று, அச்சச்சோ, இது என்ன என் முகத்தில், இப்படி இருக்கு?... அய்யோ ஷர்ட் ல கூட என்னவோ இருக்கே... என்றபடி புலம்ப, அவள் தட்டை கீழே வைத்துவிட்டு, அவனை ஆராய்ந்தாள்...

அவள் விழியோடு விழி கலக்க விட்டவன், பார்வையாலே அவளை அணைத்தான்.... அவனின் விழிகளை விட்டு பார்வையை அகற்ற முடியாமல் தவித்தவள், அப்படியே நின்றாள்...

அவள் தவிப்பை அவள் விழி சொல்ல, அவன் மெல்ல சிரித்து, என்னடா, ஆஃபீசுக்கு லீவு போட்டுடவா?... ஹ்ம்ம்.... என்றபடி கண்ணடிக்க.... அவள் அவன் செயலில் கிளர்ந்தாள்...

அவன் சொன்ன செய்தியின் அர்த்தம் என்ன?.... என்று அவள் யோசித்தபோது அவளுக்கு கிட்டியது ஒன்று தான்... அது அவனுக்கு ஆஃபீஸ் போக விருப்பமில்லை இன்று... ஹ்ம்ம்... உடம்புக்கு எதுவோ செய்கிறது போலும்... அதனால் தான் பாவம்... லீவு போட்டுடவான்னுகேட்குறார்.... என்றெண்ணிய அந்த அதிபுத்திசாலி மனைவி, அதை அவனிடம் கேட்டும் விட்டாள்...

கேட்டவனுக்கோ அவளின் குழந்தைத்தனத்தைரசிப்பதா?, இல்லை, தன் நிலையை எண்ணி சிரிப்பதா என்று தெரியவில்லை...

அவள் அவனுக்கு எதுவோ என்று பயந்தவாறு இருக்க, அவனுக்கு அவளை இறுக்கி அணைத்து அய்யோ, என் செல்ல பெண்டாட்டி, இப்படி குழந்தையா இருந்து என்னை மேலும் பைத்தியமாக்குறியே என்று சொல்லி அவள் நெற்றியோடு தன் நெற்றி முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அவளுக்கு வலிக்காமல்...

அது சரி... அவ தான் புரியாம அப்படி கேட்டான்னா... நீ அதை சரி செய்யாம, நீயும் அவ நெற்றியில் முட்டி விளையாடனும்னுஆசைப்படுறியே... இது தான் நீ அவளை மாற்றுறலட்சனமா?... விளங்கிடும்டா டேய்... இப்படியே நீ பண்ணிட்டிருந்தா... ஹ்ம்ம்... இதுக்கு அவளே மேல்... என்று அவன் மனம் அவனை கேலி பண்ணி சிரிக்க,

ஹ்ம்ம்... போடா... உனக்கு ஒண்ணும் தெரியாது... என்று அவன் சொல்ல, அதற்கு அவன் மனமோ, யாருக்கு எனக்கு?... ஹ்ம்ம்... எல்லாம் என் நேரம் டா... நீயெல்லாம்... நல்லாவருவடா... என்று சொல்லி அவனுள் மறைந்தது...

தான் கேட்டதற்கு பதில் சொல்லாது தனக்குள்ளே சிரித்துக்கொண்டிருக்கும் தன் கணவனை இமைக்காது பார்த்தவள், என்னங்க... என்னாச்சு.... என்றாள்...

என்ன சொன்ன நீ?... மறுபடி சொல்லு.... என்று அவன் குதூகலிக்க,

அவள் என்னாச்சுன்னு.... என்று இழுத்தாள்...

அதில்லைடா... எதோஎன்னங்கன்னு....?.... ஹ்ம்ம்... என்று அவன் சொல்லிக்காட்ட, அவள் ஆம் என்பது போல் தலைஅசைத்தாள்...

சாரி உங்களை வேற எப்படி கூப்பிட??... அதனால் தான்.... இனி அப்படி சொல்லமாட்டேன்.... என்று அவள் ஏதோ தவறு செய்தவள் போல் கைபிசைய...

அட மக்கு... நீ என்னை எப்படி வேணும்னாலும்கூப்பிடலாம்... உனக்கு அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு... இன்ஃபாக்ட் உனக்கு மட்டும் தான் உரிமையே இருக்கு... என்றவன், அவள் புன்னகைப்பதை பார்த்துவிட்டு, ஹ்ம்ம்.... நீ சொன்னது எனக்கு பிடிச்சிருக்குடா... இன்னொரு முறை சொல்லுவியா? ப்ளீஸ்.... என்று அவன் கெஞ்ச....

அவளுக்கு அவன் நடவடிக்கைகள் இன்று புதிதாய் தெரிந்தது... ஆனால் அத்தனையும் அவளுக்குப்பிடித்தமாயும் இருந்தது... அது ஏன் என்ற காரணம் அவளுக்கு விளங்கவில்லை... வழக்கமாக அவன் மட்டும் தான் பேசுவான்... தன்னை பேச வைக்க அவன் முயற்சித்த போதும், தான் ஒரு வார்த்தை கூட பேசாததும் நினைவு வந்தது... ஆனால் இன்று தானும் அவனுடன் ஓரிரு வார்த்தைகள் பேசுவது வியப்பாய் இருப்பினும், அவனிடம் பேச மனம் விழைந்தது கொஞ்சம்...

அவனின் கெஞ்சல் அவள் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது... அதை கண் குளிரரசித்துக்கொண்டிருந்தவன் மனம் அவளிடத்தில் இடம் பெயருவதைமுழுமையாய் உணர்ந்தான்... ஏனோ அவளிடம் இப்போழுதெல்லாம் தன் மனம் அதிகமாக ஈர்க்கப்படுவதைஉளமாற அறிந்தும் அவன் அவளிடம் அதைப் பற்றி சொல்லிக்கொள்ளவில்லை... ஏற்கனவே மௌனத்திரையின் பின் ஒளிந்து கொண்டிருப்பவள் இப்பொழுது தான் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறாள், அதையும் தன் மனதில் இருப்பதை சொல்லி வீணாக கெடுத்துக்கொள்ளவிரும்பவில்லைஅவன்...

அமைதியாக நின்றிருந்தவன் சரிடா கிளம்புறேன்... என்றபடி செல்கையில், சாப்பிடலையா?... என்ற குரல் அவனை தடுத்தது...

அவளைக் கூர்ந்து ஒரு நிமிடம் பார்த்தவன், இல்லடா, நேரமாச்சு, முக்கியமான மீட்டிங்க் இருக்கு... கிளம்பணும்... என்றவாறுசென்றுவிட்டான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.