(Reading time: 38 - 75 minutes)

 

ரு தினங்கள் கழித்து அவன் அதே போல் காலையில் கிளம்பி சென்றுவிட, அவள் மதிய சமையலை கவனித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று அவள் கைபேசிஅலர, எடுத்துப் பேசியவள் வருத்தத்துடன் போனை வைத்தாள்...

பேசியது அவனின் அன்னை தான்... பொதுவான நலவிசாரிப்புக்கு பின் அவர் கேட்டது என்னம்மா விஷேசம் எதாவது உண்டா என்று தான்... என்ன சொல்லுவாள் அவள்... இல்லை நான் இன்னும் உங்கள் மகனுடன் வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லை என்றா??? இந்த கேள்வி இன்று நேற்றல்ல, கடந்த ஆறு மாதங்களாகவேகேட்கப்படுகின்ற ஒன்று தான்... ஆனால் அவளிடம் தான் அதற்கான பதில் இல்லை...

அடுப்பை அணைத்துவிட்டு, மெல்ல தன் அறைக்குள் நுழைந்தவள், மெத்தையில் அமர்ந்த போது அவள் கண்ணில் தட்டுப்பட்டது அவளும் அவள் கணவனும் இருக்கும் புகைப்படம்...

அதையேப்பார்த்துக்கொண்டிருந்தவள் அதை கையிலெடுத்தாள்.. அதில் சிரித்த முகத்துடன் இருந்த கணவனை இமைக்காது பார்த்தவள், நீங்க சிரிக்கும்போதுஅழகாஇருக்கீங்க... என்றவள், இப்பவும் நீங்க சிரிச்சமுகத்தோட தான் இருக்கீங்க... அது எப்பவும் இருக்கணும்... சரியா?... அன்... என்று அவன் பெயர் உச்சரித்தவள்பாதியிலேயே நிறுத்தி, புருஷன் பேர் சொல்லி கூப்பிடக்கூடாதோ?... ஹ்ம்ம்... பரவாயில்லை... இங்க தான் யாரும் இல்லையே... என்றவள், உங்களை எல்லாரும் சுதன்னு தானே கூப்பிடுவாங்க... ஹ்ம்ம்... நானும் அப்படியே கூப்பிட்டாநல்லா இருக்காது... அதனால... ஹ்ம்ம்... ஷார்ட்டாகூப்பிடவா... அன்ஷு என்று....

அன்ஷு.... அன்ஷு.... அன்ஷு... என்று அதையே சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு, அவள் அவனை இருதினம் முன்புஎன்னங்க என்று அழைத்தது நினைவுக்கு வந்தது... அதற்கே அவ்வளவு மகிழ்ந்தாரே, இன்று இப்படி பெயர் சுருக்கி கூப்பிடுவதை கேட்டால், அவர் முகத்தில் சிரிப்பை பார்க்கலாமில்லை... என்றெண்ணியவளுக்குஉடனேயே, இதழ்களில் புன்னகை விரிந்தது...

அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்தாள்... மதியம் அவன் வந்த போதுபுன்னகையுடனே பரிமாறினாள்... அதைக்கண்டவனுக்கோ இது தன் மனைவி தானா என்ற எண்ணமும் வந்தது...

அவன் சாப்பிட தொடங்கியதும், என்னங்க.. சாப்பாடு நல்லாயிருக்கா?... என்று அவள் மெல்லமாக நிறுத்தி நிதானமாக கேட்க...

அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அவன் அவளையேப் பார்க்க, அவளோ, நல்லா இல்லையா... அதான் எதுவும் சொல்ல மாட்டிக்கிறீங்களா?? என்று வருத்தமாக கேட்டதும்,

அச்சோ... இல்லடா... ரொம்ப நல்லாயிருக்கு... என்றான்...

ஹ்ம்ம்... அப்போ ஏன் நான் கேட்ட உடனே சொல்லலை?

ஹேய்... நிஜமா நீதான் பேசுறியாடா?... என்னாலநம்பவேமுடியலை... என்று அவன் உண்மையாகவே ஆச்சரியத்தை முகத்தில் காட்ட...

ஹ்ம்ம்... பின்னே வேற ஒரு பொண்ணை நான் வாடகைக்கா கொண்டு வந்து விட்டிருக்கேன்உங்ககிட்ட பேச... என்னங்க நீங்க... என்று அவள் சலுகையாய் கேட்க... அவன் அவள் பேச்சில் மயங்கினான்...

ஹ்ம்ம்... இது கூட நல்ல ஐடியாவாஇருக்கே... எனக்கும் பேச்சுத்துணைக்கு ஒரு ஆள் இருந்தாநல்லாஇருக்கும்னு தான் தோணுது... நீ என்ன சொல்லுறடா?... நீ சொன்ன மாதிரி செய்திடலாமா?... என்று அவன் கேட்டதும், அவள் மீண்டும் மௌனமானாள்...

அதன் பின் ஒரு வாரம் வரை, அவள் அந்த மௌனத்தை தொடர்ந்தாள்... அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை... வழக்கம் போல் அவன் அவளிடம் பேசும் அந்த ஓரிரு வார்த்தையையும் அவன் அந்த வாரத்தில் பேசவில்லை...அவனின் மௌனம் அவளைக்கொல்லாமல்கொன்றது... அதுவும் அவன் ஒருநாளைக்கு ஒரு தடவை என்றாலும் மை டியர் பொண்டாட்டி என்றழைத்துவிடுவான்... ஆனால் இப்பொழுதோபேசவே இல்லை எனும்போது அந்த உரிமையான அழைப்பு மட்டும் எப்படி வருமாம்???...

இரு தினங்கள் கழித்து, அவன் வீட்டிலிருந்த படி வேலை பார்த்துக்கொண்டிருந்தான்... அப்போது அவனைத் தாண்டி சமையலறைக்குசென்றவள், காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்த அவனின்சிகையை பார்த்து புன்னகைத்தபடி அவள் சென்ற போதுகாலிங்க் பெல் சத்தம் கேட்க, அவள் அவசரமாக தன்னுணர்வு பெற்றாள்.... என்ன இது எதுக்கு இப்படி அவரைப் பார்த்துட்டிருக்கேன்...???... சே... என்றபடி அகன்றவள், அவனின் சத்தமான அழைப்பில் மகிழ்ந்து அவனருகே வந்தாள்...

பின்னே ஒரு வாரம் கழித்தல்லவா பேசுகிறான்...

என்னங்க... சொல்லுங்க... கூப்பிட்டீங்களா?... என்று புன்னகையுடன் கேட்க...

ஹ்ம்ம்... காலிங் பெல் சத்தம் கேட்டுச்சே... அதான் போய் கதவைத்திறன்னு சொன்னேன்...

ஹ்ம்ம்... சரிங்க... என்றவள், தன்னை வேலை ஏவுகிறானே என்ற எண்ணம் கூட இல்லாது மாறாத புன்னகையுடன் சென்று கதவைத் திறந்தாள்...

அங்கு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்... இது சுதன் வீடு தானே... எனவும், அவனின்ஸ்வரமேகாவிற்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது... அதென்ன மரியாதை இல்லாமல் இவள் அவரை பெயர் சொல்லி அழைக்கிறாள் என்ற கோபத்துடன், நீங்க யார்?... என்று இவள் கேட்டு முடிக்கும் முன்பு, இவள் என் பி.ஏ. திவ்யா என்றான் அங்கு வந்த சுதன்...

ஹாய்... சுதன்... சாரி... ரொம்ப லேட்டா வந்துட்டேனோ?.. ஹ்ம்ம்வொர்க் எல்லாம் முடிச்சிட்டீங்களா என்ன?...

இல்ல திவ்யா... இன்னும் முடிக்கலை... உனக்காக தான் வெயிட்டிங்க்... என்றவன், உள்ளே வாடா... என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான் மனைவி என்ற ஒருத்தி அங்கே இருக்கிறாள் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல்...

திவ்யாவும், சுதனும், வேலை விஷயமாக பேசிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது பொதுவான பேச்சு வார்த்தைகளையும் பேசி சிரிக்க தவறவில்லை... அந்த சிரிப்பு அவளை நார்மலாக இருக்க விடாது செய்ய, மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்வதாய்நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாள்...

ஒரு வாரமா எங்கிட்ட மட்டும் பேச தோணலை... அவகிட்ட மட்டும் என்ன சிரிச்சுசிரிச்சு பேச வேண்டிருக்கு?... சே... என்று கடுப்பில்இருந்தவள், கொதிக்கும் பாலை எடுத்து டம்ளரில் ஊற்றுகிறேன் என்ற பெயரில் காலில் ஊற்றிக்கொண்டாள்...

அம்மாஆஆஆஆஆஆஆஆ................. என்ற அலறலுடன் பால் பாத்திரத்தை அவள் நழுவ விட, சுதனும், திவ்யாவும் அங்கே ஓடி வந்தனர்...

ஒரு கணம் கூட தாமதிக்காமல் அவளை சட்டென்று கைகளில் ஏந்தியவன், மருத்துவமனைக்கு விரைந்தான்... பின், காயம் ஆற மருந்து போட்டு அவளை வீட்டிற்கு அழைத்து வந்தவன், காரிலிருந்து அவள் இறங்க கூடஅனுமதியாமல், அவளை மீண்டும் கைகளில் ஏந்தியவன், அவர்களது அறைக்கு சென்று அவளை படுக்க வைத்தான்...

அவளை இரண்டு நாட்கள் எந்த வேலையும் செய்ய விடாது வீட்டிலேயே இருந்து பார்த்துக்கொண்டான் அந்த அருமை கணவன்...

நொடிக்கொரு தரம், வலிக்குதாடா?... என்று கேள்வி கேட்பவன், சீக்கிரம் சரியாகிடும்டா... என்று அவளுக்கு சொல்வதாகநினைத்துக்கொண்டுஅவனுக்கே ஆறுதல் சொல்லிக்கொள்வான் அந்த வார்த்தைகளின் மூலம்...

அவளுக்கு நன்கு குணமான பின்பு ஒருநாள், அவர்களது அறையில், அமர்ந்து அவள் பாதங்களையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்...

முதல் நாள் மருந்து போட்டு வீட்டிற்கு வந்ததும், மதிய வேளையில், தாயாக இருந்து அவனே அவளுக்காக சமைத்து அவளை சாப்பிட வைத்த பின், மருந்து போடுறநேரமாச்சுடா என்றவன், பேசிக்கொண்டே அவள் பாதங்களை பற்ற, அவள் தடுத்தாள்...

அவன் ஏன் என்றவாறு புருவம் உயர்த்த, இல்ல, நீங்க... வந்து.... என் காலை... என்று இழுத்தபோது, நீ என் பொண்டாட்டிடா... என்று சொல்ல, அந்த ஒரு வார்த்தை அவளுக்கு போதுமானதாய் இருந்தது... எத்தனை நாட்களாச்சு... அவன் இந்த வார்த்தையை சொல்லி... என்றவள் உள்ளம் கூத்தாட ஆரம்பிக்க, கால்கள் தானாக அவன் பக்கம் நீண்டது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.