(Reading time: 38 - 75 minutes)

ம்மாடி மேகா... இதோ இந்த புடவையைக் கட்டிக்கம்மா... இந்த நகையைப் போட்டுக்கோம்மா... என்று மருமகளை அனுப்பி வைத்தார் சுதனின் அம்மா...

தனதறைக்கு வந்தவள் இன்னமும் அயர்ந்து உறங்கி கொண்டிருக்கும் கணவனை நின்று நிதானமாக பார்த்தாள்...

அவனருகில் நெருங்கி அமர்ந்து அவனது சிகை கோதி விட்டாள்... தன் பிறந்தநாள் அன்று அவன் தந்த அந்த முத்தம் இப்போது நினைத்தாலும் தித்திப்பாக அவளுள்... வெட்கம் கொண்டு சிரித்தவள் மெல்ல, அவன் நெற்றியில் முத்தமிடப் போக, சட்டென்று அவனின் அன்னை சத்தம் கேட்டு பதறி எழுந்து புடவை மாற்ற சென்றாள் வேகமாக...

வழக்கம் போல் அவன் எழுந்து மனைவியை எதிர்பார்த்து வாசல் கோலம் அருகே நிற்க, அவள் அங்கு இலை... எங்கு சென்றிருப்பாள் என்ற எண்ணத்துடன் அவன் உள்ளே வந்து தேட, இன்னும் என்னடா பண்ணிட்டிருக்கிற?... போ... போய் குளி... இந்தா இதை பிடி என்று அவனுக்கு பட்டுவேட்டி சட்டையை கொடுத்துவிட்டு, சீக்கிரம் வா... போ... என்று அவன் அன்னை அவனை அனுப்பி வைத்தார்...

அவன் தயாராகி கீழே வந்த நேரம், அவள் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள் கையில் இனிப்புடன்... அந்த இளஞ்சிவப்பு நிற புடவை அவளை தேவதையாக மிளிர வைக்க,

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு...”

எனை வாட்டும் அழகோ!!!! வண்ண மயிலோ... இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்...

அய்யோ... என் பொண்டாட்டி... என்னை இப்படி கொல்லுறீயே... இப்பவே உன்னிடம் காதல் சொல்லிடணும்னு தோணுதேடி.... என்று அவன் மனதிற்குள் புலம்பிய போது,

யாரு நீதானே... சொல்லிட்டாலும்... போடா இவனே... உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்?... இந்த லட்சனத்துல உனக்கும் கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருஷம் ஆச்சு... இன்னும் லவ் தான் பண்ணிட்டிருக்குற... அதை அவகிட்ட சொல்லவாச்சும் உனக்கு வாய் வருதா?... நீயும் உன் காதலும்... போடா... என்று அவன் மனம் அவனைத் திட்ட...

சரிடா..சரிடா... திட்டாதே... காதல் வந்தா தாண்டா தெரியும்... அதோட தவிப்பு... காதல் வந்தாலும் அதை சொல்ல முடியாம படுற அவஸ்தை இருக்கே அது நரக வேதனைடா... ஹ்ம்ம்.... என்று மனதிற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவன்,

சுதா, சாமி கும்பிடு... அங்கே யாரைப் பார்த்துட்டிருக்க நீ?... என்று அவன் அன்னை அதட்ட, அவன் பார்த்த திசையில் அவள் இல்லை... வேறெங்கே போயிருப்பாள் என்றெண்ணத்துடன் அவன் யோசிக்க, என்னங்க, சாமி கும்பிடுங்க... என்றபடி அவன் முன்னே நின்றாள் அவள்...

இப்படி பார்த்தே என்னைக்கொல்லுறீயேடி..... என்றவன் பார்வையே அவன் காதலை சொல்ல, அவள் அதை கவனிக்காது விழி தாழ்த்திக்கொண்டாள்...

இரண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டுவாங்க... இனியாச்சும் நல்லது நடக்கட்டும்... என்றபடி சென்றார் அவனின் அன்னை...

அவர் சொன்னதற்கான அர்த்தம் அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ அவளுக்குப் புரிந்தது நன்றாகவே...

கோவிலில் அருகருகே நின்று மனமார தெய்வத்தை தரிசித்ததும் இருவரின் உள்ளங்களிலும் அமைதி உண்டானது... அந்த நிம்மதியுடனே வீடு திரும்பி கொண்டிருந்த போது, எதிரே ஒரு லாரி கட்டுப்பாடில்லாமல் தறிகெட்டு வர, சுதன் சரியான சமயத்தில் அதன் மேல் மோதாமலிருக்கும்படி காரை ஒடித்து திருப்ப, அது ஒரு மரத்தின் அருகே சென்று நின்றது, அதுவும் அவன் சடன் பிரேக் போட்டதால்... இல்லையென்றால் இந்நேரம் மரத்தின் மீது மோதியிருக்கும் அவனது கார்...

அவன் கார் ஸ்டியரிங்க் மீது தலை சாய்த்திருக்க, அவள் பதறி, அவனை உலுக்கினாள்... அன்ஷுமா, என்னைப் பாருங்க... அன்ஷுமா.... என்று கதற, அவன் அவளது அழைப்பில் மயங்கி கிறங்கினான்...

ஹேய்... என்ன சொன்ன நீ?... சொல்லு மறுபடியும்.... என்று அவன் சந்தோஷத்தில் குதிக்க,

அன்ஷு, உங்களுக்கொன்னும் இல்லல்ல... என்றபடி அவள் அவன் முகம் பற்ற,

அவன், இல்லடா... எனக்கொன்னும் இல்லை... என்றபடி சமாதானம் செய்ய முயல...

அவள் அவனுக்கு அடிபட்டிருக்கிறதா என்று உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தாள்... ஒன்றுமில்லை அவனுக்கு அடிபடவில்லை என்று தெரிந்ததும், கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள் சட்டென்று...

ஹேய்... பொண்டாட்டி இங்கே பாரு... எனக்கொன்னும் இல்லை... அழாதடா... என்று அவன் சொல்லி அவள் கரம் விலக்க, அவள் முகத்தைப் பார்த்தவனோ திகைத்தான்...

சில நிமிட அழுகையில் அவள் துவண்டு போயிருந்தாள்...

ஹேய்... ஸ்வரா... என் செல்ல பொண்டாட்டி... அழாதடி... ப்ளீஸ்... என்று சொல்லவும் அவளின் அழுகை நீண்டது...

அவளின் முகம் பற்றி அவன் பார்க்க... இருவரின் பார்வையும் தங்கள் காதலை உணர்ந்து பார்வைகளில் வெளிப்படுத்திய அதே நேரம், இருவரின் இதழ்களும் தங்களது காதலை தெரிவித்துக்கொண்டது ஒரே நேரத்தில்...

ஸ்வரா... நான் உன்னை விரும்புறேண்டி ரொம்ப... என அவனும்

அன்ஷுமா... நான் உங்களை விரும்புறேன் ரொம்ப... என அவளும் ஒருங்கே சொல்ல,

அங்கே இருவருக்குமே சிரிப்பு வந்தது...

ஸ்வரா.... என்ற அழைப்புடன் அவன் கண்களினால் அவளை அழைக்க, அவன் நெஞ்சம் இரு கை விரித்து அவளுக்காக காத்திருந்தது...

என் அன்ஷு.... என்ற கதறலுடன் அவள் அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்...

இத்தனை நாள் உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்... சாரி அன்ஷுமா... உங்களுக்கு எதுவும்னா என்னால தாங்கவே முடியாது... நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது... நான் உங்களை மனப்பூர்வமா காதலிக்கிறேன்... உங்களோட சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறேன்... என்னை ஏத்துப்பீங்களா?... என்று அவள் தவிப்போடு முகம் நிமிர்த்தி கேட்க,

அவன் வார்த்தைகளால் அதற்கு பதில் சொல்லாது முத்தங்களால் பதில் சொன்னான்... வேகமாக அவள் முகம் பற்றி மூச்சுத்திணர முத்தமிட்டான் அவள் முகமெங்கும்...

நீண்ட நேர திணறலுக்குப் பின் அவளை விடுவித்தவன், உன் கேள்விக்கு பதில் கிடைச்சுட்டா ஸ்வரா?... என்று கேட்டான்...

ஹ்ம்ம்... என்று சிணுங்கியவள், கைகளினால் முகம் மறைத்துக்கொள்ள, அவன் அந்த கையை விலக்கி, அதென்ன சொன்ன... அன்ஷுமா வா?... அப்படின்னா?... என்று தெரியாதவன் போல் கேட்க,

ஹ்ம்ம்... அங்கே மட்டும் என்னவாம்.. ஸ்வரா... சொல்லலை நீங்க... அப்படித்தான் இதுவும்... என்றாள் அவளும்...

ஓஹோ... ஹ்ம்ம்... சரி... அன்ஷுமா ன்னு ஏன் பேரு வச்ச எனக்கு?... சொல்லுடா பொண்டாட்டி ப்ளீஸ்... என்று அவன் கெஞ்ச...

உங்களுக்கு அன்ஷுன்னு நான் பேரு வச்சது எப்போ தெரியுமான்னு கேட்டவள், அந்த கதையை சொல்லிவிட்டு, ஹ்ம்ம்.. நீங்க என்னை அம்மா மாதிரி கவனிச்சுக்கிட்டீங்களா என் காலில் கொதிக்கும் பால் பட்டபோதும், அப்பறம் நான் உடம்பு சரி இல்லாம இருந்தப்பவும்... அதான் அன்ஷு கூட மா சேர்த்து உங்களுக்கு அன்ஷுமா-ன்னு பேர் வைச்சேன்... ஹ்ம்ம்... என் அன்ஷுமா... நல்லாயிருக்குல்ல... பேர்?... என்று சொல்லி சிரித்தவளை, ஆசைதீர பார்த்துவிட்டு மீண்டும் அவள் முகம் பற்றி முத்தமிட்டான் அவன் வேட்கையுடன்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.