(Reading time: 38 - 75 minutes)

 

தை மென்மையாக பற்றியதும் அவளின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது... அவன் அவளை இடையோடு சேர்த்து தூக்கியபோது அவளுக்குள் இந்த பட்டாம்பூச்சி பறந்தது தான்... ஆனால் அப்பொழுது வலி இருந்ததால்அது பறந்த சுகம் அவளுக்கு முழுமையாக கிட்டிடவில்லை... இப்போதும் வலி இருந்தது... அவன் பொண்டாட்டி என்று அழைத்ததில், இருந்த வலி அனைத்தும் மாயமாகிவிட அவன் விரல் ஸ்பரிசத்தில் தன்னை மறந்தாள் அவள்...

வெட்கம் ஒரு பக்கம் போட்டி போட்டு வர, அதை மறைக்க அவள் படாத பாடு பட்டாள்... அதே போன்று அவன் அடுத்துவந்தநாட்களும்மருந்திட அவளுக்குள் இனம் பிரித்து சொல்ல முடியாத உணர்வு உண்டானது...

அந்த நாளின் நினைவில் மெல்லசிரித்துக்கொண்டிருந்தவள், அவன் வந்து தன் அருகே அமர்ந்து தன்னையேப்பார்த்துக்கொண்டிருப்பதை கூட உணரவில்லை... மெல்ல அவள் கால் விரல்களில் அவன் ஸ்பரிசம் உணர்ந்து, இன்ப அவஸ்தையுடன் கண் மூடிக்கொண்டாள், நடப்பது கனவென்ற நினைவில்...

அவனோ, அவளின் வெட்கத்தை இப்போது நேரே கண்டான் மிக அருகே...அவள் மேல் அதுநாள் வரை இருந்த காதல் மரம் இன்று விருட்சமானதை அவனே உணர்ந்தான்...

இன்னும் வலிக்குதாடா... என்ற குரல் தனதருகே கேட்க, திடுக்கிட்டு கண் விழித்தவள், அவன் தனது எதிரே அமர்ந்திருப்பதையும், தன் கால்கள் அவனின்கரத்தினால்சுற்றப்பட்டு அவன் மடி மீது இருப்பதையும்கண்டவள்கால்களைஇழுத்துக்கொள்ளமுயன்றாள் வேகமாக...

அவன் பிடி தளர்த்தவில்லை... ப்ளீஸ்... விடுங்க... என்ற அவள் கெஞ்சல் குரல் கொஞ்சியது அவனை...

ஹ்ம்ம்... நான் கேட்டதற்கு நீ பதில் சொல்லலையே... பதில் சொல்லு... விடறேன்.... என்றான் அவனும்....

என்ன கேட்டீங்க?...

வலிக்குதான்னு கேட்டேன்...

ஹ்ம்ம்... காலைவிடுங்க பதில் சொல்லுறேன்...

ஹ்ம்ம்... என்றவன் பிடி தளர, சட்டென கால்களைஉருவிக்கொண்டவள், நின்று நிதானமாக அவனைப் பார்த்தபடி, வலிக்குதுன்னு நான் சொன்னா என்ன பண்ணுவீங்க என்று கேட்டாள்...

மருந்து போடுவேன்.... என்றான் அவன்...

அப்படி நீங்க மருந்து போடுறதாஇருந்தா, நான் என் இன்னொரு காலையும்புண்ணாக்கிப்பேன்... என்று அவள் சொன்ன பதிலில் அவனுக்கு உரைத்தது ஒன்று தான்... அது அவள் தன்னை நெருங்கி வருகிறாள் என்று...

ஹேய்... உண்மையாகவா... என்று அவன் உற்சாகத்துடன் கேட்ட போது அவள் அங்கு இல்லை...

அதன் பின் அவனுக்கு நல்ல தோழியாக இருக்க ஆரம்பித்தாள் அவள்... அவனுடன் சகஜமாக பேசி சிரித்துபழகினாள் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு நன்றாகவே சிரித்து பேசி பழகினாள்...

நாட்கள் அப்படியே நகர்ந்து கொண்டிருந்த போது, அந்த மாத இறுதியில், அவளுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக, அவன் தான் அருகிலிருந்து தாய் போல் பார்த்துக்கொண்டான் அவளை கண்ணுக்குள் வைத்து...

அவன் வார்த்தைகளால் முதலில் அவளை நெருங்கியது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை தற்போது அவன் தாயாக மாறி அவளை நெருங்குவது...

அவளின் குழந்தைத்தனம், அவள் செய்கை, பேச்சு என அனைத்தும் அவனை கொஞ்ச கொஞ்சமாய் அவள் பக்கம் ஈர்த்தது...

ருவரிடம் ஒருவர் கரைந்தும் மனதில் உள்ளதை வெளிப்படுத்தாமல் சென்று கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள், அவள் வழக்கம் போல் எழுந்து கோலமிட்டு முடித்து அவன் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாள்... அவன் இன்னும் வராமல் இருக்கவே, என்னாயிற்று என்ன எண்ணத்துடன் மேலே அறைக்குள் சென்றவள், அவன் இன்னும் எழுந்து கொள்ளாமல் இருப்பதை பார்த்து, சிரித்தபடி, என்னங்க வேலைக்கு போகலையாஇன்னைக்கு?... ஹ்ம்ம்.... என்று கேட்க அவனிடம் அசைவு இல்லை... மீண்டும் அவள் கூப்பிட, அவன் முணகல் மட்டும் கேட்டது மெல்ல...

பதறியபடிஅவனருகில் அமர்ந்தவள், அவன் நெற்றியில் கைவைத்துப் பார்க்க, அது நெருப்பெனசுட்டது... என்னங்க.. இங்கபாருங்க... பாருங்க... என்று கூப்பிட கூப்பிடஅவனின்முணகல் மட்டுமே பதிலாய்... உடனே மருத்துவரை அழைத்து அவனுக்கு சிகிச்சை செய்தவள், அவர் அவனுக்கு வைரஸ்ஃபீவர் தான்... பயப்பட வேண்டாம்... ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தால் போதும்... சீக்கிரம் சரியாகிடும்என்று கூற, அவள் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே நன்றி சொன்னாள் மருத்துவரிடம்...

நேர நேரத்துக்கு அவனுக்குஉணவளித்து, அவனை தாய்க்குப் பின் தாரம் தான் என்ற பழமொழிக்கேற்பகவனித்துக்கொண்டாள்...

அவனுக்கே ஆச்சரியம் தான்... அவளின் கவனிப்பு...

குழந்தை என நினைத்திருந்தவனின் நெஞ்சில் முதன் முறையாக அவள் தாயாக தெரிந்தாள்...

எல்லா குணங்களும்அவளுள் அடக்கம் என்பதை அறிந்து கொண்டவன், அவள் மனைவி என்பதையும்அவளுக்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருப்பதை மேலும் அதிகமாக்க வேண்டும் என எண்ணிக்கொண்டான்...

அந்த சமயத்தில் அவளின் பிறந்த நாள் வர, அவன் தனக்கு வாழ்த்து சொல்வானா என்ற எதிர்பார்ப்புடன் அவள் 12 மணியை எதிர்நோக்கி காத்திருந்தாள்... அவனும் ஏமாற்றாமல், சரியாக 12 மணிக்கு அவளுக்கு வாழ்த்து சொன்னான்...

மெனி மோர் ஹேப்பிரிட்டர்ன்ஸ்ஆஃப் த டே... மை டியர் ஸ்வீட் பொண்டாட்டி என்றவன், ஒரு சிறிய பரிசை கொடுத்தான்...

அவள் அதைப் பிரித்து பார்த்தபோது, நுண்ணிய வேலைப்பாடு அமைந்த கொலுசு இருந்தது... முகம் எல்லாம் பூரிப்பாக, அதை எடுத்துப் பார்த்தவள், சந்தோஷத்தில் தேங்க்ஸ் என்றாள்...

ஹ்ம்ம்... வெல்கம்டா... பட்... நீ எனக்கு வேறவிதமாதேங்க்ஸ்சொல்லுவேன்னு பார்த்தேன்... எனவும், அவள் உண்மையில் புரியாமல் விழித்தாள்...

சரி... நீ சொல்ல வேண்டாம்... நானே சொல்லுறேன்... பட் அதுக்கு முன்னாடி கொலுசு எப்படியிருக்குன்னு சொல்லு... எனவும், அவள் பதில் சொல்லாமல் இருந்தாள்...

அவன், மெதுவாக அவள் தாடையில் ஒரு விரல் வைத்து நிமிர்த்தி, பிடிச்சிருக்காடா?... என்று கேட்க, அவள் மொத்தமாக அவன் வசமானாள்...

தன்னையும் அறியாமல் ரொம்ப பிடிச்சிருக்கு... என்று அவள் வெட்கப்படவும், அவனுக்குள் சொல்ல முடியாத உற்சாகம் உருவானது...

ஹ்ம்ம்... நான் கொலுசை மட்டும் கேட்கலை என்று அவன் சொல்லவும், அவளும் சட்டென்று நானும் அதை மட்டும் சொல்லலை என்றாள் வெட்கம் தோய்ந்த முகத்தை மறைத்துக்கொண்டே...

அவனுக்கும் அவளை பிடித்திருந்தது... அவளைப் பெண் பார்க்கும் போது... ஆனால் அப்போது அவனுக்கு காதல் வந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லியிருப்பான்... அது போல் இப்போது அவள் பிடித்திருக்கிறது என்று சொல்ல, அவன் அவளுக்கு தன் மேல் காதல் இன்னும் வரவில்லையா?... இல்லை வந்துவிட்டதா என்று தெரியாமல் குழம்பிப்போனான்...

சரி... அடுத்த கட்டத்திற்குமுன்னேறுவோம் என நினைத்தவாறு, கொலுசைபோட்டுக்கலையா?... என்று அவன் கேட்க...

நான் சொன்னாதப்பா நினைக்க மாட்டீங்கல்ல என்று அவனிடம் பீடிகை போட்டவள், அவன் இல்லை என தலை அசைக்கவும், நீங்களே போட்டு விடுறீங்களா எனவும், அவனின் முயற்சி வெற்றி அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மிக...

இதுக்கா இவ்வளவு தயக்கம்... என்றவன், கொடு, என்று அதை வாங்கி, அவள் கால்களை தன் மடியில் தூக்கி வைத்து, கொலுசைஅணிவித்தான் மிக மென்மையாக அவசரமே இல்லாது...

மடியிலிருந்து அவள் பாதங்களைஇறக்கவேமனமில்லாது ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டுஅவன் கரங்களைதளர்த்தினான்...

ஹ்ம்ம்... நான் உனக்கு இன்னொரு பரிசும்கொடுக்கணும்னுஆசைப்படுறேன்... தரவா?... என்று அவள் கண்களைப் பார்த்து கேட்க... அவளும் சரி என்று தலை அசைத்தாள்...

சரி கண் மூடு... என்று அவன் சொல்லியதும் கண் மூடினான் அவள்...

அவளருகில் அவன் நெருங்கி, அவள் நெற்றியில் சுருண்டிருந்த கற்றை முடியை ஒதுக்கிவிட்டு மென்மையாக இதழ் பதித்தான்... சட்டென்று விழித்தவளின் பார்வை அவன் பார்வையை எதிர்கொள்ள, அவள் விழிகள் சொன்ன சேதி என்னவென்று புரியாமல் தவித்தான் அவன்...

“இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து...”

காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வை உண்டு... ஒன்று காதல் நோயை தரும் பார்வை... இன்னொன்று அந்த நோய்க்கு மருந்தாகும் பார்வை...

இப்போது இவள் தருவது, என் காதல் நோயை மேலும் பெரிதாக்குவது போல் தெரிகிறதே... ஹ்ம்ம்... எனில் விரைவிலே, மருந்தாகவும் மாறுவாளா என்னவள்???...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.