(Reading time: 20 - 39 minutes)

னி பெய்யுது நதிமா…பழக்கம் இல்லாதவங்களுக்கு ஒத்துக்காது…வா உள்ள போகலாம்…” அவன் தான் அழைக்கிறான்.

“நீங்க அடிக்கடி இங்க வருவீங்களா ?” நிலவிலிருந்து கண்ணை எடுக்க முடியாமல் ஏதோ கேட்டு வைத்தாள்.

“ம்….ஆமா….சின்ன வயசிலிருந்தே டியூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வரவும் இங்கதான் வந்துடுவேன்….தூங்க மட்டும் தான் திரும்ப ரூம்க்கு போவேன்….”

“அப்ப ஆரம்பத்துல உங்களுக்கு சளி பிடிக்கலியாமா?” நாள் நீள பழக்கத்தில் வந்திருந்த இலகுத் தன்மையில் கேட்டு வைத்தாள்.

“எல்லா நாளும் டிசம்பரா என்ன பனி பெய்றதுக்கு….? அதோட அப்பா செகண்ட் மேரேஜ் செய்தது மே மாசம்…..இருந்த சூடுக்கு அப்ப நான் இப்படி வந்து நிக்க ஆரம்பிச்சப்ப பெட்டராத்தான் ஃபீல் ஆச்சுது…அப்றம் அப்படியே பழகிட்டுது” படு கேஷுவலாய் அவன் சொல்லிக் கொண்டு போக தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

அது அவனது அம்மா இல்லை என்ற விஷயத்தை கூட இவள் தெரிந்து வைத்திருக்கவில்லை….இதில் இவள் கனவுகளை அவன் புரிந்து வைத்திருக்கவில்லை என்று எப்படி நொந்தாள்….?

“கிட்டதட்ட 20 வருஷமா தினம் மொட்டை மாடி தான்…என் 6 வயசுல அம்மா இறந்துட்டாங்க….அப்பாவுக்கு ரெண்டாவது மேரேஜ்…சித்தி குணத்துக்கு என் நிலமை மோசமாகிடக் கூடாதுன்னு சித்தியவிட்டு என்னை விலக்கியே வச்சுறுப்பாங்க அப்பா….ஆக என் அப்பா கூட ஒரே வீட்ல இருந்தாலும் அவங்கல்லாம் கீழ, நான் மாடின்ற மாதிரிதான் வளந்தேன்….”

அவன் சுயபட்சாதாபத்தில் பேசவில்லை….

“தங்கை ரெண்டு பேருக்கும் படிப்பிலயோ வேலை செய்றதுலயோ பிஸினஸிலயோ இஷ்டம் இல்லை…..+2 க்ளியர் செய்யவே படாதபாடுபட்டாங்க…. அவங்க  பொண்ணுங்க படிக்கலை… ஆனால் நீ படிச்சிறுக்க…வேலைக்கெல்லாம் போயிருக்கன்னதும் சித்தி  பொண்ணுங்க வேலைக்கு போறதை அப்படி மட்டமா பேசிட்டாங்க…..நான் அப்ப எல்லோர் முன்னாலையும் அவங்கள மறுத்து பேசி இருக்கலாம்…பட் அதுல சித்தி ஈகோ ப்ரவோக்காகி நம்ம வெட்டிங்கை நிறுத்த என்னலாம் உண்டோ அதெல்லாம் செய்வாங்க….

சோ அவன் க்ரவ்ண்ட் ரியாலிட்டியை சொல்லிக் கொண்டு இருக்கிறான்.

“எந்த காரணத்தைக் கொண்டும் உன்னை இழக்க எனக்கு மனசில்லை….அரேஞ்ச்ட் மேரேஜ்தான்னாலும் உன் ஃபோட்டோவைப் பார்த்ததும் வைஃப்னுதான் உன் நம்பரை சேவ் செய்தேன்….என் ஃபர்ஸ்ட் லவ் அண்ட் ஒன்லி லவ் நீதான்…..அதான் அப்ப அமைதியா இருந்துட்டு தனியா உன்ட்ட பேசிக்கலாம்னு நினச்சேன்….அடுத்து உன்ட்ட பேச ட்ரைப் பண்றப்பல்லாம் ஃபார்மல் பேச்சை தாண்டி கான்வெர்ஷேஷனை நீ நகரவிட்டதே இல்லை…..சரி வெட்டிங்கு பிறகு நம்ம வீட்டு சிச்சுவேஷனை விளக்கமா பேசலாம்னு இருந்துட்டேன்…”

இதை அவள் கண்களைப் பார்த்தோ கைகளைப் பிடித்தோ சொல்லி இருந்தானானால் கூட அவளுக்கு இப்படி இருந்திருக்குமா என்று தெரியவில்லை. அவன் முந்திய விஷயங்களை பேசியது போல் நிலா மீதே கண் வைத்து சொல்லிக் கொண்டு போக….ஏதோ எனக்கு உன் மேல் காதலிருப்பதால் நீயும் என்னை காதலித்தாக வேண்டும் என அவள் மீது காதலை கூட திணிக்காதது போல் ஒரு உணர்வு அவளிடம்.

“அவங்க பேசுன எல்லாத்துக்காகவும் சாரி….வெட்டிங் டைம்ல அவங்க உள்ள வராம தவிர்க்க முடியாது…உறவு முறை அப்படி….மத்தபடி நம்ம இடத்துக்கு அவங்க எதுக்காகவும் வரமாட்டாங்க….அப்பா இறக்கவும் எல்லாவகையிலும் அவங்களுக்கு எல்லா செட்டில்மென்டும் செய்தாச்சு… நீ விரும்புற மாதிரி இருக்கலாம்….”

இதை இவளைப் பார்த்துதான் சொன்னான்.

கேட்டிருந்தவளுக்கு அப்படியே அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லைதான் ஆனால் அதன் பின் அவனை விலக்கி நிறுத்தவும் தோன்றவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அன்று வழக்கம் போல் ப்ரபல்யனோடு ஷோரூமிலிருந்து இரவு வீடு திரும்பிய தேவநதி, இரவு உணவுக்குப் பின் அவன் படுக்க சென்ற போது, பெட்டில் அருகில் அமர்ந்து இவள் புற நைட் லேம்பை ஆன் செய்து கையிலிருந்த எப்படி சொல்வேன் வெண்ணிலவே புத்தகத்தை வாய்விட்டு வாசிக்க தொடங்கினாள்.

“ஷாலு சரித்ரன்

ரித்ரன் ஷாலு வீட்டில்….” தேவநதி ஆரம்பிக்க

“என்ன நதிமா புதுப் பழக்கம்…? வழக்கமா புக்கை மைன்ட்ல தான ரீட் பண்ணுவ…? இன்னைக்கு என்னாச்சு?”

“”இல்ல இப்படி வாய்விட்டு படிச்சா எஃபெக்ட் நல்லாருக்கும்னு தோணிச்சு அதான்….ட்ரை பண்ணி பார்க்கனே…”

“ஓகே உன் இஷ்டம்…..அப்டியே நீ என்ன தான் படிக்றனு நானும் பார்த்துகிறேன்…வாசி…” ப்ரபல்யன் சொல்ல….மீண்டுமாய் சத்தமாய் வாசிக்க தொடங்கினாள் தேவநதி.

“எப்டியோ ஆதிக் ரேயா ரீச் ஆகுறதுக்குள்ள அவங்க ஃபர்ஸ்ட் நைட் ரூம் டெகரேஷனை முடிச்சாச்சு….”

“ஆமா சார்…இதுலெல்லாம் நீங்க படு ஃபாஸ்ட்….” சொல்லியபடி தன்னவன் தோளில் சாய்ந்தாள் ஷாலு. 5 வருடங்கள் முன் நடந்த தங்களது கல்யாண  இரவுகள் இருவர் மனதிலும் காட்சியாய்.

அன்று அவர்கள் வெட்டிங் சென்னையில் நடந்திருந்தது. மறுநாள் காலை அவர்கள் மும்பை கிளம்ப வேண்டும். நாளை மறுநாள் அங்கு ரிஷப்ஷன். இன்று  இரவு ஃபர்ஸ்ட் நைட் சரித்ரனது சென்னை வீட்டில் தான்.  கசின்ஸ் யார் செய்தார்கள் என தெரியவில்லை இவன் அறை பூக்களால் நிரம்பி இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.