(Reading time: 20 - 39 minutes)

பின்னிரவில் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் கேட்டாள் “ எதை வச்சு  எனக்கு இஷ்டமில்லைனு முடிவுக்கு வந்தீங்க?  என்னை அவாய்ட் பண்றீங்களோன்னு தான் நினைச்சேன்..…அப்றம்தான் யோசிச்சுப் பார்த்தா டே ல ரொமான்டிக் ஹீரோ நைட்ல விரத சாமியார்னு எல்லாம் சேர்ந்து விஷயம் புரிஞ்சுது….அதுவும் நேத்து என்னைப் பார்த்ததும் கண்ணை இறுக மூடிக் கிட்டீங்க…”

அவன் காரணத்தை சொன்னான். வாய்விட்டு சிரித்தாள் அவள். “எனக்கு என் ட்ரெஸ்ஸை யார் கூட ஷேர் செய்றதும் பிடிக்காது…என் கசின் பிங்கி எப்பவும் என் ட்ரெஸ் எதையாவது கேட்டு வம்பிழுப்பா….. புதுசு வாங்கலாம்னு சொன்னாலும் மாட்டேன்னு சொல்லிட்டு என்னோடதை போட்டு அதுல நாலு ஸ்டெய்ன்…ஒரு ஓட்டைனு போட்டு கொண்டு வந்து கொடுப்பா……அன்னைக்கும் நம்ம ரிஷப்ஷன்ல டேன்ஸாட போறேன்னு என் ஃபேவ் காக்ரா செட்டை கேட்டுகிட்டு இருந்தா..….அதான் கத்திகிட்டு இருந்தேன்…”

“ உன் கசின் அந்த பிங்கி என்ன கிறுக்கா ?” கேட்ட பின் தான் அவளது கசினை இவன் திட்டிவிட்டதே இவனுக்கு உறைத்தது. இப்பொழுது இவள் என்ன நினைப்பாள்?

நொடியில் அவன் மனம் உணர்ந்த மனையாளோ

 “எனக்கு சிஸ்டர்னா உங்களுக்கும் அவ சிஸ்டர் தான்….தாராளமா திட்டலாம்” என்றபடி இலகுவாய் அவனை திரும்பிப் பார்த்தாள்.

“நம்ம ரெண்டு பேரும் ஒன்னு, நமக்குள்ளது எல்லாமே நம்மோடது….அன்ட் அதுல எதுவும், யாரும் நம்மை விட நமக்கு முக்கியம் கிடையாது….அது எனக்கும் புரிஞ்சிட்டு…” ஷாலு விளக்கினாள்.”

இதுவரை வாசித்த தேவநதி அருகிலிருந்த கணவனை திரும்பிப் பார்த்தாள்.

“நாளைக்கு நம்ம மேனேஜர்ஸ் கூட உள்ள மீட்டிங்க்கு நானும் கேக்கோட வரலாம்னு ப்ளான் இருக்குது….உங்களுக்கு எப்படி வசதி….இல்லைனா ஆள் வச்சு கிட்நாப் எதாவது செய்தால் சரியா இருக்குமா??”

ஏற்கனவே சற்று ஏதோ சரி இல்லை என்ற ரீதியில் பார்த்திருந்த ப்ரபல்யன் முகத்தில் இப்பொழுது ஆனந்த அதிர்வும் குறும்பும்.

“அந்த சரித்ரனாவது ஹாஃப்டே சாமியாராம்…நீங்க ஹோல் டே துறவி…என்னமோ ஃபர்ஸ்ட் லவ் அது இதுன்னு சொன்னதோட சரி….அப்றம் ரெண்டு மாசமாச்சு…..நான் விழுந்து விழுந்து லவ் பண்றேன்….உங்களுக்கு கண்ணுக்கு அது தெரியவே இல்லை…”

“ஹேய்….உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு தெரியும் நதிப் பொண்ணு…..நாளைக்கு என் பெர்த் டே ல்ல அப்ப கவனிச்சுகலாம்னு நினச்சுறுந்தேன்….”

மறுநாள் கணவனுடன் ஹனிமூன் கிளம்பிப் போனாள் தேவநதி.

மூன்று வருடங்கள் கடந்திருந்தன. கணவனும் ஆறு மாத குழந்தை அவனியும் தான் தேவநதியின் உலகம் இப்போது. மேலும் இரண்டு நகரங்களில் அவர்களது ஷோரூம் திறக்கப் பட்டு பாடு சந்தோஷமும் பிஸியுமாய் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. நபார்டிலிருந்து மீண்டும் அதே ப்ரொஃபைலுக்கு கால் ஃபார் செய்திருந்தார்கள்…

“அவனி குட்டிய முன்ன பின்ன தெரியாத இன்னொருத்தர்ட்ட விட்டுட்டு நான் வேலைக்கு போகவா?.,,,நோ வே” என மறுத்தது இவளே தான். மனதின் ப்ரயாரிட்டி…விருப்பங்கள் மாறி இருந்தன..

கடையில் மிஞ்சும் பழைய துணிகளை ஆசிரமங்களுக்கு கொடுப்பது ப்ரபல்யனின் பழக்கம். அதில் ஆரம்பித்த அந்த ஆசிரம பணி தேவநதியை இப்போது சில சமூக பணிகளுக்கும் கொண்டு சென்றிருந்தது.

“தேவிக்கா நெட்ல படிச்சேன்கா ஏதோ மைக்ரோ ஆர்கானிசம் கண்டு பிடிச்சுறுக்காங்களாம்….டை ஃபேக்ட்ரி எஃப்லுயண்ட்ல அதை விட்டா போதுமாம்….நாமளே அதை வளத்தா என்னக்கா?” தேவநதி தரும் உதவித் தொகையில் கல்லூரியில் படித்துவரும் மாலதி ஃபோனில் கேட்க இப்பொழுது தேவநதி இதில் படு பிஸி.

அவளது மாவட்டம் முழுவதும் சாய தொழிற்சாலைகள். அதன் கழிவு தன் பூமியையும் அதில் வாழும் மக்களையும்  கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை இவள் கேள்விப்பட்ட போதுதான் அந்த 14 வயதில் ஜெனிடிக் எஞ்சினியர்ட் மைக்ரோ ஆர்கனிச லட்சியம் தோன்றியது முன்பு தேவநதிக்கு..

அன்று இரவு  தன் கணவனிடம் முழு உற்சாகத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள் தேவநதி “நானே இந்த ஆர்கனிசத்தை டிசைன் செய்துருந்தா கூட இவ்ளவு திருப்தியா இருக்காதுப்பா…..அது நம்ம பீபுள்கு ரீச் ஆகிருக்கும்னு எப்படி சொல்ல முடியும்? பட் இது எனக்கு முழு திருப்தியா இருக்குது……கொஞ்ச வருஷம் முன்னால இது நடக்காம போனப்ப செம அப்செட்டா இருந்துச்சுது…..நம்ம ஷோரூம் வர்ற ஆரம்பிக்கப்ப பால் நதிய விட்டுட்டு பாலை வனத்துக்குப் போறேன்னு கூட நினச்சிறுக்கேன்…..இப்ப பாலை வனத்துல பால் நதி வந்து நிக்குது……நான் 200% ஹேப்பி ”

“Friends தேவநதிக்குப் போல் இதுவரை உங்கள் வாழ்க்கை எந்த டர்ன் ட்விஸ்ட் எடுத்திருந்தாலும் இந்த உதித்து வரும் புது ஆண்டு உங்கள் கனவுகள் தேடி வந்து கை சேரும் ஆண்டாக அமைய என் வாழ்த்துக்களும் ப்ராத்தனைகளும். Happy New Year 2016

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.