(Reading time: 14 - 28 minutes)

ருவேளை சினிமாவில் காதல் என்று சொல்லுவார்களே அதுதானா இது?இல்லை இல்லை அப்பீடீல்லாம் இருக்காது..இது வேற ஏதோ ஒண்ணு...ஐயோ என் உணர்வு பற்றி யார்ட்ட கேக்குறது..ஊஹூம்...ஊஹூம் இதெல்லாம் போயி யார்ட்டையும் கேக்கக் கூடாது..அப்பாக்கு தெரின்சிட்டா அவ்வளவுதான்...நெனச்சாலே பயமாருக்கு...

வேண்டாண்டா சங்கரா..தனகுத்தானே சொல்லிக்கொண்டான் சங்கரன்.யசோதாவின் நினைவினை மனதிற்குள் வைத்து மனதை பெரிய பூட்டாகப் போட்டு பூட்டிவைத்தான் சங்கரன்.அது காதல் உணர்வுதான் என்று பாவம் அவனுக்கு அப்போது தெரியவில்லை.

ஆச்சு.. சங்கரன் பள்ளி இறுதிப் படிப்ப முடிச்சாச்சு..டிவிஎஸ் கம்பெனியிலும் பின்னர் தனியார் வங்கியிலும் மூன்று வருடங்கள் குப்பை கொட்டிவிட்டு அப்பாவின் தொழிலே போதுமென்று ஊருக்கே திரும்பிவிட்டான்.அவன் வேலை பிடிக்காமல் திரும்பி வந்தானா?அல்லது வேறு என்ன நினைத்து வந்தானோ அவனுக்கே வெளிச்சம்.

இப்போது ஊரில் வைதீக காரியம் என்றால் கூப்பிடு சங்கரனை என்ற அளவுக்கு ஆனது.

இதில் அப்பு சாஸ்திரிகளுக்கு ஏகத்துக்கும் பெருமை.

ன்னா ஒங்களுக்கு தெரியுமோ? யசோதாவ பொண்ணு பாக்க இன்னிக்கி திருச்சிலேந்து புள்ளையாத்துக்காரா வராளாம்.பையன் பம்பாய்ல நல்ல வேலேல இருக்கானாம். பெரிய எடமாம்..எல்லாம் கூடிவந்தா இன்னிக்கே ஒப்பு தாம்பூலமாம்..அவுளுக்கும் பதினெட்டு வயசு இருக்கும் நம்ம சங்கரன விட மூணு வயசுதானே சின்னவ.சரியான வயசுதான் கல்யாணத்துக்கு...

அப்பிடியா நான் மூணு நாளா ஊர்ல இல்லியோனோ..அதான் எனக்கு தெரியல..

யசோதா நல்ல பொண்ணு..நன்னா இருக்கட்டும்...

அப்பா அம்மாவின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சங்கரனுக்கு திகீர்ரென்றது.

ஏதோ ஒன்று உருண்டு வந்து தொண்டையை அடைத்தது.ஆண்டவன் விருப்பத்தை யார் மாற்ற முடியும்?யசோதாவின் திருமணத்தையும் அவந்தானே முடிவு செய்கிறான்...

யசோதாவின் கல்யாண வைதீக காரியங்களை அப்பு சாஸ்த்திரிகள் செய்ய முடிவானதால் அப்பாவுக்குத் துணையாக சங்கரனே போகவேண்டிய நிர்பந்தம்.கல்யாண அலங்காரத்தில் யசோதா அம்பிகைபோலவே காட்சியளித்தாள்.அத்தனை அழகு.

தாலிகட்டிய பிறகு அம்மி மிதித்து அருந்ததிபார்க்கும் நேரம்.மாப்பிள்ளை கீழே அமர்ந்து யசோதாவின் வலது கால் கட்டை விரலைப் பிடித்து ஏழடி அம்மியை நோக்கி அழைத்துச் சென்றபோது சின்ன வயதில் விளையாடும் போது யசோதாவின் வலது கால் கட்டைவிரலில் அடிபட்ட போது அவளின் காலைப்பிடித்து தண்ணீர் விட்டு அலம்பி சுண்ணாம்பு போட்டது நினைவுக்கு வர தலையை உலுக்கி நினைவை அகற்றினான் சங்கரன்.அறியாப் பருவத்தில் மொட்டு விட்டு மலர்ந்த சங்கரனின் முதல் காதல்  முழுதும் மலரும் முன்பே மூடிக்கொண்டது இதழ்களை.

This is entry #42 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.