(Reading time: 21 - 42 minutes)

ப்போது எனக்கு விளங்க ஆரம்பித்தது. நான் சொன்னேன்:

“ஏன் பெண்ணே? இதை நீ ஏன் முன்னமே என்னிடம் சொல்லியிருக்கக்கூடாது?” என்றேன். அவள், தனக்கு அருகில் கிடந்த கிழிந்த பேப்பர் ஒன்றை என்னிடம் நீட்டினாள். நான் அதை வாங்கிப் படித்தேன். அதில் என்னுடைய கட்டுரை ஒன்றின் கிழிந்த பகுதி இருந்தது. அவள் குறியிட்ட பகுதிகளைப் படித்தேன்:

“என்னுடைய வாழ்க்கைத் துணை பி.ஏ பரீட்சையில் தேறியிருக்க வேண்டும்…” அதற்கு மேல் ஒன்றுமில்லை. அப்போது அவள் சொன்னாள்:

“நான் சொன்னேனே? உங்கள் கதைகளையும், நாவல்களையும், நாடகங்களையும் படித்தும் பார்த்தும் நேரங்கழிந்து போனதால் பி.ஏ பரீட்சையில் என்னால் தேற முடியவில்லை. இரண்டு பாடங்களில் பெயில்! எப்படியும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருந்ததால் தான் நான் மதராஸ் வந்தேன். உங்களிடம் ஸ்டேஷனில் விடைப்பெற்றேன் அல்லவா, ஹோட்டல் பெயரை சொல்ல மறந்து விட்டேனே என்று பதறியடித்துக் கொண்டு வந்தேன். அப்போது, அந்தத் தியாகுவுடன் நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். நிச்சயம் அவன் தவறாக என்னைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பான், நீங்கள் நம்பியிருப்பீர்கள். மேலும் நான் அங்கே வந்தால் அவனுடைய ரிவால்வரால் என்னை மிரட்டிக் கடத்திக் கொண்டு போயிருப்பான். அப்போது, ஒரு வாழைப்பழக்கூடையில் இருந்த தங்களுடைய கட்டுரை அடங்கிய கிழிசல் காகிதம் கிடைத்தது. இதைப் படித்த பிற்பாடு நீங்கள் நிச்சயம் என்னை திருமணம் செய்ய மாட்டீர்கள் என்று முடிவு கட்டினேன். அவனோடு வாழ்வதற்கு சாவதே மேல் என்று நினைத்துத்தான் பாஷாணம் அருந்தினேன். அதற்குள் இவர் வந்து தடுத்து விட்டார்…”

நான் என்னையும் மறந்து „கொல்‟ என்று சிரித்து விட்டேன். பின்னர் அரண்டு போன அவளிடம் சொன்னேன்:

“அடி அசடே! என் கட்டுரையை அரைகுறையாகப் படித்து விட்டு இப்படிச் செய்துவிட்டாயே! நான் எழுதிய முழுக்கட்டுரையையும் படிக்கலையா?” என்று கேட்டேன். அவள் சொன்னாள்:

“பெரும்பாலும் நான் கட்டுரைகள் படிப்பதில்லை. இந்தக் கட்டுரை வெளிவந்ததே எனக்கு நேற்றுத் தான் தெரியும். இந்த பேப்பர் இங்கே வாழைப்பழக்கூடையிலே கிடந்தது!” நான் மீண்டும் சொன்னேன்:

“பாதகத்தி! நான் சொன்னது, „என்னுடைய வாழ்க்கைத் துணை பி.ஏ பரீட்சையில் தேறியிருக்க வேண்டும் என்பதில்லை| சிறந்த குணங்களில் தேறியிருக்க வேண்டும்!‟ என்றே எழுதியிருந்தேன்!” அதைக் கேட்டு அவள் ஆச்சர்யம் அடைந்துவிட்டாள். மூவரும் சிரித்து விட்டோம்.  பின்னர் என்ன நடந்திருக்கும்? வழக்கமான முடிவு தான். திருமணம் சுபமாக நடந்தேறிவிட்டது.

அது மட்டுமில்லாது, அந்தத் தியாகு பெரிய ஏமாற்றுப் பேர்வழி என்றும், நாகப்பட்டினத்தில் போலீஸ் வேடமிட்டு பல பேரிடம் பண மோசடி செய்தவனென்றும், அவன் சென்னையில் மாறுவேடத்தில் சுற்றிக் கொண்டிருந்த போது நாகப்பட்டின காவல் துறையினர் அவனைக் கைது செய்ததாகவும் எனக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் நிம்மதிப் பெருமூச்சோடு எங்கள் வாழ்வைத் தொடக்கினோம்.

தோ, இங்கே அமர்ந்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கள் இனிய இல்லறம் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. அதற்கான சாட்சியை அவளுடைய கருப்பை சுமந்து கொண்டிருக்கிறது. அவள் அங்கே காய் நறுக்கிக் கொண்டிருக்கிறாள். 

என்னிடம் அவளுக்குத் தெரியாத ரகசியங்கள் இருக்காது என்று நினைப்பீர்கள்.

அது தான் இல்லை. அவள் வேண்டுமானால் என்னிடம் வெளிப்படையாகவே இருக்கலாம். எனக்கு ஒரு ரகசியம் இருக்கிறது.

அதை நான் சொன்னாலும் பாதகமில்லை. ஆனால் வேண்டாமே என்றுதான் நான் பார்க்கிறேன்.

அது ஒன்றுமில்லை. என் மனைவி, பி.ஏ பரீட்சையில் பெயிலாகி விட்டதால் அவளை நான் மணமுடிக்க மாட்டேனென்று நினைத்து பாஷாணத்தை அருந்திவிட்டாள்.

நானே பி.ஏ பரீட்சையில் இரண்டு முறை பெயிலாகி விட்டேன் என்று சொன்னால், என்ன நடக்கும்? 

யோசித்துப் பாருங்கள்.

This is entry #126 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்

எழுத்தாளர் - அபிஷேக்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.