(Reading time: 14 - 28 minutes)

14 டிசெம்பர் 2009

தீயின் மடியில் அமர்ந்து கண்ணை கசக்கிக் கொண்டிருந்தாள் தாரா.. வெயிட்..வெயிட்.. கொஞ்சம் கேமராவை சூம் பண்ணுங்க.. அட நம்ம அதீயும் கண்ணை கசக்கிட்டு இருக்கான்..

கிடாய் வெட்டி மொட்டை அடித்து தாராவிற்கு காது குத்த அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தனர்..அங்க நம்ம அதீ என்ன கூத்து பண்ணுனானு பார்க்கலாம் வாங்க..

தாரா சுற்றி நிற்கும் அனைவரையும் ஒரு மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..

"மாமூ வேணா சொல்லு..",என்று உதட்டை பிதுக்கியவள் அதீயின் கழுத்தை கட்டிக்கொண்டாள்..

"அம்மா.. தாரா பயப்படறா.. வேணாமா..",என்றான் தன் அன்னையை நோக்கி.

"அதீ.. கம்முனு இருக்க மாட்ட.. காது தானே டா குத்தறாங்க.. கம்முனு இருந்தவளை பயபடுத்திக்கிட்டு இருக்க.. நீ ஒன்னும் அவளை மடியில் உட்கார வைத்துக் கொள்ளவேண்டாம்..", என்றார் கடுப்புடன்.

"அம்மா வலிக்காதுல பப்புவுக்கு..??", மீண்டும் பரிதாபமாக கேட்டான்..

காது குத்த வந்தவருக்கு சற்று பி பி எகிறி,"தம்பி.. நான் முப்பது வருஷமா காது குத்தறேன்.. ஆனால் உங்கள மாதிரி ஒரு தாய்மாமனை சந்திச்சதில்லை... பேசாம உட்கார்ந்திங்கனா காத குத்திட்டு போயிட்டே இருப்பேன்..எனக்கு வேற சோலி இருக்கு...,"என்றார் கடுப்புடன்..

சுற்றி இருந்த அனைவரும் அவனை நோக்கி அக்கினி பிழம்புகளை வீசவே.. கப் சிப் என அடங்கினான் அதீ...

கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா

காதுகுத்தப் போறாகன்னு

கிண்ணியில் சந்தனமும்

கிளிமூக்கு வெத்தலையும்

தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு

கொண்டு வந்தார் தாய்மாமன்

குழந்தைகள் தொடர்பான சடங்குகளில் சிறப்பிடம் பெறுவது காது குத்துதல் சடங்காகும். அவரவர் தம் குல தெய்வக் கோயில்களில் குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்தும் சடங்கு அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாது நடத்தப்படுகிறது.

குழந்தைக்குக் கருவில் உண்டான பாரம்பரியக் குறைகளை நீக்குவதற்காக இச்சடங்கு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

சில பல கொஞ்சலுடனும் கெஞ்சலுடனும் கதறலுடனும் முடிந்தது நம் தாராவின் காது குத்து வைபவம்..

17 அக்டோபர் 2010

"தாரா பேபி.. எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா..??"

"எடுத்து வெச்சிட்டேன் மாமூ.."

"அங்க போயிட்டு வீட்டுக்கு திரும்பி போறேன்னு அடம்பிடிக்க கூடாது.. அப்புறம் அங்க போயி யாரோடையும் சண்டை போட கூடாது.. பத்திரமா இருக்கனும் என்ன..", என்று அட்வைஸ் மழைகளை பொழிந்து கொண்டிருந்தான் அதீ தாராவிற்கு..

அந்த வாண்டும் அவன் சொல்லுவதற்கெல்லாம் தலையை சமர்த்தாக ஆட்டிக் கொண்டிருந்தது..

"ஐ அம் கோயிங் டூ மிஸ் யூ",என்றான் அதீ அவளை கொஞ்சியபடியே..

"மீ டூ மாமூ.."

"பக்கி.. அவ பக்கத்து தெருவுல இருக்கற ஸ்கூளுக்கு தானேடா போக போறா.. எங்கையோ வெளிநாட்டுக்கு போகுற மாதிரி மிஸ் யூ கிஸ் யூ னு சொல்லிக்கிட்டு இருக்கற..",என்றார் தாராவின் தந்தை சுரேந்தர்.

அதீ அவர் கூறுவதை காதில் வாங்காமல் தாராவிற்கு சில பல அட்வைஸுகளை வாரி வழங்கி கொண்டிருப்பதை கண்ட அவன் அன்னை அவனிற்கு ஒரு கொட்டு வைத்து,"டேய்... மாமா பேசிட்டு இருக்காரு.. நீ என்னடானா கண்டுக்காம இருக்கற",என்றார்.

"அத்தை.. மேடமை ஸ்கூளுக்கு கொண்டு போயி விடறப்போ வரவேண்டாம்னு சொல்லிட்டேனாம்..அதான் சார் மூஞ்சிய தூக்கி வெச்சிருக்கார்.."

"அதீ..ஏன்டா இப்படி சின்ன புள்ளத்தனமா நடந்துக்கற..??" ,என்று அவனை கண்டித்தார் வைரம்..

"சாரிமா..சாரி மாமா.. ஏதோ கடுப்புல..."

"பரவாயில்லை விடு மாப்பிள்ளை... நீயும் உன் தாராவை ஸ்கூளுக்கு கொண்டு விட வா...",என்றார் சுரேந்தர் புன்னகையுடன்..

17 டிசம்பர் 2012

முக்கிய செய்தி : டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்...

" ன்ன கொடுமையடா இது..?? பாவம்டா அந்த பொண்ணு", புலம்பிக் கொண்டிருந்தார் முத்து..

" இதுக்கு தான் பொண்ணுங்க அதுங்க வேலைய இருட்டறதுக்கு முன்னாடியே முடிக்கணும்னு சொல்லறது.. ராத்திரி எல்லாம் போனா இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்..", என்றார் வைரம்..

"என்னமா நீ.. இப்போ எல்லாம் பொண்ணு பையன்னு பாகுபாடில்லாம எல்லாரும் படிப்புக்கரதுக்கும் வேலைக்கும் வெளில போயி தான் ஆகணும்.. அதுக்கு பகலென்ன இரவென்ன.. ??",என்றாள் ப்ரியா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.