(Reading time: 14 - 28 minutes)

24 பிப்ரவரி 2016

தையெல்லாம் சி சி டி வியில் பார்த்த அதீக்கு அவர்களை அப்பொழுதே பஸ்மம் ஆக்கிவிடும் வெறி தோன்றியது.. ஆனால் சிலநிமிடங்கள் பொறுமை காத்தவன் ஒரு முடிவோடு தனது நண்பனை அழைத்தான்..

நிமிடங்களில் உருவானது அந்த வதத்திற்கான திட்டம்..

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி

நடந்த இளம்தென்றலே

வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக

உலகை விலை பேசுவார்..

உலகை விலை பேசுவார்..

உலகை விலைபேசும் தாய்மாமன் தாராவின் உயிரை போக்கிய கொடியவர் வாழ்க்கையையும் விலை பேசுவாரா..??

20 மார்ச் 2016

ந்த வீட்டில் ஒவ்வொரு மூலையில் ஒருவர் அமர்ந்திருந்தனர்.. தாரா இறந்ததை பற்றி மீடியாவில் வரும் செய்திகள் அவர்களை இன்னும் உடையச் செய்திருந்தது..

"ஏம்ப்பா.. அவங்களுக்கு தண்டனையே கிடைக்காதா டா..?? எம் பேத்தி.. ஐயோ...",என்று கதறினார் வைரம்..

"அம்மா.. அழாதீங்க.. கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கெடச்சுரும்.."

"எதுப்பா தண்டனை..?? சில ஆயிரம் ரூபாய் அபராதமும் சில வருஷம் சிறை தண்டனையுமா..?? ஜெயில் வாழ்க்கையில் மூணு நேரம் சோறு பத்தாததுக்கு வாரத்துல இரண்டு நாள் நான் வெஜ்.. இதெல்லாம் ஒரு தண்டனையா..??"

அதே நேரம் வாசலில்,"அம்மா நியூஸ் பேப்பர்",என்றொரு சத்தம்..அதை வாங்கி படித்த அதீயின் முகத்தில் ஒரு புன்முறுவல்..

தாரா எனும் சிறுமியின் கொலை வழக்கில் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் குற்றவாளிகளான சந்த்ருவும் ஜெயந்தும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.. அவர்களின் உடல்களை கூவம் ஆற்றிலிருந்து மீட்டெடுத்தனர் மீட்பு துறையினர்..

"என்ன அதீ.. நீ பாட்டுக்கு அந்த நியூஸ் பேப்பரை பார்த்து சிரிக்கிற..??",என்று கேட்டார் வைரம்..

"எல்லாமே முடிஞ்சு போச்சு..." என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி...!

வணக்கம் நண்பர்களே..!!

இந்தக் கதைக்கு ஹேப்பி எண்டிங் கொடுக்கணும்னு தான் ஸ்டார்ட் பண்ணுனேன்.. ஆனால் சமீபத்தில் படித்த சில ஆர்டிகிள்ஸும் கேட்ட சில செய்திகளும் என்ன கொஞ்சம் டைவர்ட் பண்ணிருச்சு.. சோ.. என்னோட இந்த கதையும் சேட் எண்டிங் தான்..

இந்த கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.. விரைவில் ஹாப்பி எண்டிங் கொண்ட ஒரு கதையுடன் வருகிறேன்..

 

This is entry #127 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - வசுமதி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.