(Reading time: 14 - 28 minutes)

"தாரா..தாராக் குட்டீ..",இருளை துளைத்து கொண்டு கேட்டது ப்ரியாவின் குரல்.

"பாப்பு எங்கடா இருக்க..??"

பயம் மனதை பயங்கரமாக ஆட்கொண்டது.. அவசர அவசரமாக வீட்டிற்கு ஓடினாள் ப்ரியா..

"ம்மா..ஏங்க ஏங்க.. அப்பா.. தாராவை காணோம்...",என்று அழ ஆரம்பித்தாள்..

"என்னமா சொல்ற..?? நல்லா தேடிப்பாத்தியா..??",பதற்றமானார் வைரம்..

"ப்ரியா.. அத்தை.. இரண்டு பேரும் டென்ஷன் ஆகாதீங்க..இங்க எங்காவது தான் இருப்பா.. தேடி பார்க்கலாம்.."

இரவு மணி 9.30

அந்த அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் தலைவர் முதல் செக்யூரிட்டி வரை அனைவரிடமும் விசாரித்து விட்டனர்.. மொட்டை மாடி முதல் ஜெனெரேட்டர் ரூம் வரை தேடிவிட்டனர்..ஆனால் தாராவை எங்கு தேடியும் காணவில்லை...

பயம் விலகாத ப்ரியா வேலை விஷயமாக கொல்கத்தா சென்றிருக்கும் தனது தமையனை அழைத்தால்.. அந்தோ பரிதாபம் அவனது அலைபேசியானது நாட் ரீச்சபபிள்..

பயம்..மரண பயம்.. அனைவரையும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஒருவித மயான பயத்திலேயே அந்த இரவு நகர தொடங்கியது..

18 பிப்ரவரி 2016

அதிகாலை மணி 4.40

ர்போர்ட்டிலிருந்து அதீ ஓ எம் ஆர் வழியாக தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.. அவன் சென்றுகொண்டிருந்த வாகனத்தை திடீரென்று கை காட்டி நிறுத்தினார் ஒருவர்..

"சார்.. சார்.. அங்க ஒரு குழந்தையோட சடலம் அந்த புதருக்குள்ள கெடக்குது..",என்றார் பதற்றமாக..

காரை விட்டு இறங்கி அந்த புதரை நோக்கி ஓடினான் அதீ.. உடல் முற்களால் போர்த்தப்பட்டிருக்க குப்பிறடித்து கிடந்தது அந்தக் குழந்தையின் சடலம்.. ஒரு நிமிடம் அதனை கண்டு அதிர்ந்து தான் போனான்..

காவல்துறையினரை தனது அலைபேசியில் அழைக்க போனை எடுத்தான்.. அப்பொழுது தான் தனது அலைப்பேசி ஸ்விட்ச் ஆப் என்பதை உணர்ந்தான்..

வீட்டிலிருந்து வந்த நூறுக்கும் மேற்பட்ட அழைப்புகளை கண்டவன் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்து நூறுக்கு முதலில் தகவல் தெரிவித்து விட்டு அவசர அவசரமாக வீட்டினரை தொடர்பு கொண்டான்..

தனது தாராவை காணவில்லை என்ற செய்தி கேட்டதும் அதீயின் இதயம் நின்று துடிக்க ஆரம்பித்தது..அதே சமயம் அங்கு காவல் துறையினரும் மீட்பு பணியினரும் வந்து சேர்ந்தனர்..

அவர்கள் வந்தவுடன் தன் வீட்டிற்கு சென்று விடலாம் என்று தான் நினைத்தான் அதீ.. ஆனால் அந்தக் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு செல்லலாம் என்று மீட்பு பணியினரால் முள் போர்வையில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தையை நோக்கி நடக்கலானான்.. அந்த குழந்தையின் சடலத்தை பார்த்ததும் கத்த ஆரம்பித்தான்..

"தாரா..நக்ஷத்திரா.."

நெற்றியில் உள்ள சிறு தழும்பானது கீறப்பட்டு ரத்தம் உறைந்திருந்தது.செப்பு இதழ்கள் குருதி வழிய வீங்கிக்கிடந்தது..உடல் முழுவதும் நகக்கீறல்கள்.. உடலும் உடையும் கிழிக்கப்பட்டிருந்த அந்நிலையில் தன் மருமகளும் மகளுமான தாராவை ஏந்தியவனின் உள்மனதானது வெறுமையிலும் துக்கத்திலும்.. அவளை இந்நிலைக்கு ஆக்கியவன் மீது க்ரோதமும் வெறுப்பும்..

ஆயிற்று தாராவின் பதினாறு.. அவள் நினைவாய் அவர்களுக்கு கிட்டியது அவளின் ஒற்றை கால் கொலுசு..

24 பிப்ரவரி 2016

முழுவீச்சாக அந்த கொடூரனை தேடிக்கொண்டிருந்தான் அதீ..முதல் கட்டமாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அப்பார்ட்மென்டில் உள்ள சி சி டி வி வீடியோக்களை பார்க்கத் தொடங்கினான்.. அதன் பலனாக சிக்கினர் சந்த்ருவும் ஜெயந்தும்..

17 பிப்ரவரி 2016

மாலை மணி 5.30 தாராவின் வீடு

"அம்மம்மா.. நான் கீர்த்திகூட விளையாட போறேன்.. மாமூ இல்லாம ரொம்ப போர் அடிக்குது ப்ளீஸ்.."

"சரி பப்பு...சீக்கிரம் வந்தரனும் என்ன..??"

"ஓ கே அம்மம்மா..செவன் தர்ட்டிக்குள்ள வந்துறேன்..",என்றபடியே சென்றாள்..

மாலை மணி 5.30 அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்

"டேய் மச்சி..இன்னைக்கு பப்புக்கு போலாமா..??"

"போ மச்சி.. என்ட்ரன்ஸ்க்கே 40 கே கேக்கறாங்க.. இங்கயே ஏதாவது குட்டி கெடைக்குதான்னு பார்க்கலாம்..",என்றான் தள்ளாடியபடியே..

அப்பொழுது தான் அவர்களின் கண்ணுக்கு சிக்கினாள் தாரா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.