(Reading time: 14 - 28 minutes)

"காலம் கெட்டுக்கெடக்கு அதான் சொன்னேன்.. நம்ம சொன்னா யாருதான் கேக்கறா.. ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு நேரத்தோட வீடு போயி சேராதவங்கள்ளை விட்டுட்டு என்ன குறை சொல்லாதீங்க",என்றார் வைரம்..

இதை கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த அதீ தன் அன்னையை நோக்கி,"மா.. நீ சொன்னபடியே வெச்சுப்போம்.. அப்புறம் ஏன் பர்தா போட்ட பொண்ணுக்கும் சுடிதார் போட்ட பொண்ணுக்கும் இப்படி எல்லாம் நடக்குது..?? பகல்ல பொண்ணுங்க சேப்னு உனக்கு யாரு சொன்னா மா..??"

"....................."

"நம்ம நாட்டுல ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு பெண் பாதிக்கப்படுறா.. இது உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்..??", என்று கேட்டான்..

"அவங்களை எல்லாம் காப்பாத்ததானே உன்னை ஐ பி எஸ் படிக்க வெச்சுருக்கோம்.."

"அம்மா.. நாங்க பப்லிக் சர்வெண்ட் தான்.. இல்லைனு சொல்லல.. எல்லா நேரமும் எல்லாருக்கும் எங்கனால எப்படி மா பாதுகாப்பு கொடுக்க முடியும்..?? என்ன பொறுத்தவரைக்கும் எல்லாவருக்கும் செல்ப் டிபென்ஸ் தெரிஞ்சிருக்கணும்.. எங்க போனாலும் கைல மிளகாய் போடி,மூக்கு பொடி இப்படி ஏதாவது கைல வெச்சுக்கனும் அவங்க பாதுகாப்புக்காக.."

"இதெல்லாம் வெச்சிருந்தா மட்டும் போதுமா டா.. அந்த சமயத்துல இதெல்லாம் அந்த சமயத்துல எத்தனை பேருக்குடா இதெல்லாம் நியாபகம் வரும்..??"

"நான் சொன்னதெல்லாம் எல்லாருக்கும் அந்த நேரத்துல நியாபகம் வராதுதான்.. ஆனா புள்ளைங்க வெளில போகும் போது அட்லீஸ்ட் அவங்க பேரெண்ட்ஸ்கிட்ட இங்க போறேன் இன்னார்கூட போறேன்னு சொல்லிட்டு போகணும்..."

"....................."

"இரவு நேரங்களில் கேப்லயோ இல்லை வேற ஏதாவது வாகனங்களில் வெளியில் செல்லும் போது டிரைவர் முன்னாடி நான் இந்த இடத்துல இருக்கேன் இப்போ இந்த ஸ்டாப்ல வண்டி நிக்குதுனு யார்கிட்டயாச்சும் இன்பார்ம் பண்ற மாதிரியாவது கொஞ்சம் ஆக்ட் பண்ணனும்..இதெல்லாதையும் விட முக்கியம்.. ஒரு பெண்ணுக்கு ஆண் மகனை எடை போடும் திறன் இருக்க வேண்டும்.."

" நீ சொல்ற மாதிரி பெண்கள் இருந்தால் கூட ஏன் இவ்வளவு கொடுமை நடக்குது..??"

"பெண்களை வெறும் சதையாக பார்க்காமல், தோழியாக, சகோதரியாக, சக மனுஷியாக ஒரு ஆண் பார்க்க ஆரம்பித்தால் மட்டுமே இந்த நிலைமாறும்.."

26 ஜனவரி 2014

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்

தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி...

சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே...

மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே

பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே...

"மாமூ... எத்தனை வாட்டி தான் இந்த பாட்டைபாடி டார்ச்சர் பண்ணுவீங்க....?? காது வலிக்குது.. கத்தாதீங்க பிலீஸ்..", என்றாள் நக்ஷத்திரா அதீயிடம்..

"குட்டிம்மா...அவ்ளோ கேவலமாவா இருக்கு..??",என்றான் பரிதாபமாக..

"ரொம்ப..",என்று உதட்டை பிதுக்கிய தாரா,"எங்க மாமூ என் கிப்ட்டு..??",எனக் கேட்டாள்..

"டேஷ் போர்டை தொறந்து பாரு குட்டிமா.."

"ஹை கொலுசு… மாமூ...உம்மாஹ்...அம்மா இங்க பாரு மாமூ எனக்கு என்ன வாங்கிக் கொடுத்திருக்காங்கனு...",என்று அந்த கொலுசை ஆட்டி ஆட்டி காண்பித்தாள்..

அந்த கொலுசு மட்டும் தான் அவளது மிச்சம் என அறியாமல்..

17 பிப்ரவரி 2016

இரவு மணி 7

"ங்கம்மா பப்புவ காணோம்??",வைரத்திடம் கேட்டாள் ப்ரியா.

"கீர்த்தி கூட விளையாட போயிருக்கா.."

"என்னமா நீ.. நாளைக்கு ஸ்கூல் இருக்குல அவளுக்கு.. அதுவும் இல்லாம மேடம் ஹோம்வர்க் வேற பண்ணல.. இப்போ விளையாட தாட்டி விட்டிருக்க..??"

"அதீ இருந்தா கூட பரவாயில்லை ப்ரீ.. பாவம் அவளும் எவ்ளோ நேரம் தான் வீட்டுலயே இருப்பா..என்கிட்ட சொல்லிட்டு தான் போனா.. ஏழரைகுள்ள வந்திருவன்னு..."

"எல்லாம் நீங்களும் அதீயும் கொடுக்கற இடம்தான்"

இரவு மணி 8

"கீர்த்தீமா.."

"வாங்க தாராமா.. பாப்பாவை கூட்டிட்டு வரலையா..??"

"அவ இங்க வரேன்னு தான் சொல்லிட்டு வந்தா.. இங்க வரலையா..??"

"இல்லையே.. வரலையே..கீழ பார்க்ல விளையாடிட்டு இருப்பாளா இருக்கும்.."

"தாங்க்ஸ் கீர்த்திமா",என்ற ப்ரியா கீழே விரைந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.