(Reading time: 22 - 43 minutes)

பெரிதளவில் பிரச்சனை எதுவும் அஜய்க்கு இல்லை... வலது புறம் முகம் மற்றும் கை கால்களில் தீக்காயங்கள்... காயம் ஆறும் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்... ஓரளவுக்கு காயம் ஆறியது... ஆனால் அந்த வடு அவன் முக அழகை கெடுத்தது...

எந்த அழகை ஸ்ரேயா ஆராதித்தாளோ... அது இப்போது இல்லை என்று தெரிந்ததும், அவளுக்குள் மாற்றங்கள்... திருமண நாட்கள் நெருங்க நெருங்க குழம்பினாள்...

கூட இருந்த தோழிகளும், ஸ்ரேயாவை குழப்பினார்கள்... அவன் முகத்தை பார்க்கவே அருவருப்பா இருக்கு... நீ எப்படி அவனோட வாழ முடியும்... முதல்ல அவன்கூட வெளியப் போக முடியுமா..?? உன்னை எல்லோரும் பரிதாபமா பார்ப்பாங்க... உனக்கு ஏதோ குறையிருக்கு, அதான் இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு சொல்வாங்க.." என்றார்கள்... பொதுவாக ராகவி இல்லாத போது தான் இந்த பேச்சுக்கள் இருக்கும்...

ஸ்ரேயாவின் பெற்றோருக்கும் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை... மகள் காதலிக்கிறாளே என்று இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்... பின் ஒரு வசதியான இடத்தில் இருந்து ஸ்ரேயாவை பெண் கேட்டு வந்ததால், தன் மகளுக்கு அந்த இடத்தில் மணமுடிக்க முடியவில்லையே என்று வருந்தினர்... அந்த நேரம் பார்த்து, அஜய்க்கு இப்படி ஆனதால், இதையே சாக்காக வைத்து... இந்த திருமணத்தை நிறுத்த நினைத்தனர்...

இப்படி எல்லா காரணங்களும் சேர்ந்து ஸ்ரேயாவை குழப்பி, அஜயிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தாள்... பின் திருமணம் நெருங்க, நெருங்க... அஜயை திருமணம் செய்ய அவளால் முடியாது என்று தீர்மானித்து, கல்யாணத்தை நிறுத்தினாள்...

"நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு வந்ததும், ஸ்ரேயாவிடம் மலர்விழியும், ராகவியும் கெஞ்சினார்கள்... அவள் அப்போதும் மனம் இறங்கவில்லை... அதைப் பார்த்து ராகவிக்கு கோபம் வந்தது...

"அன்னைக்கு அஜய் நினைச்சிருந்தா... அவர் மட்டும் தப்பிச்சு வந்துருக்கலாம்... ஆனா உனக்கோ.. இல்லை நம்ம மத்த ஃப்ரண்ட்ஸ்க்கோ எதுவும் ஆகக் கூடாதுன்னு நினைச்சு உங்களை காப்பாத்தினதால தான, இன்னைக்கு அவருக்கு இந்த நிலைமை.. இல்லன்னா நீ இப்போ இப்படி பேசி இருப்பியா..??" என்று கேட்டாள்..

"அதுக்காக என்னோட லைஃப் முழுக்க கஷ்டத்தை அனுபவிக்க சொல்றியா..?? இதுக்கு நான் அந்த தீயிலேயே கருகி செத்துப் போயிருக்கலாம்...

இவர் முகத்தைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு... இவரோட நான் எங்கேயும் வெளியே போக முடியாது... என்னை எல்லோரும் பரிதாபமா பார்ப்பாங்க... ஏன் அவர் தொட்டாலே எனக்கு அருவருப்பா இருக்கும்... அவரை நான் எப்படி சகிச்சுக்கிட்டு வாழறது... இதெல்லாம் சொல்லக் கூடாதுன்னு தான் இருந்தேன்... ஆனா நீ சொல்ல வச்சுட்ட...

இங்கப்பாரு நான் மட்டுமில்ல... நம்ம ப்ரண்ட்ஸும், என்னோட அப்பா, அம்மாவும் இது தான் சரின்னு சொல்றாங்க..." என்று அவள் சொன்ன போது, அதைக் கேட்டிருந்த அஜய்...

"அம்மா... அவளை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை செஞ்சுக்கிட்டா... எங்க ரெண்டுப்பேருக்கும் இது நரகமா ஆயிடும்... அவ சொல்ற மாதிரியே இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.." என்றான்.

ஆனால் மலர்விழி அதிலிருந்து இடிந்துப் போய்விட்டார்... கல்யாணத்துக்காக ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்ய... இப்படி தலையில் இடி விழுந்துடுச்சே என்று அழுதார்.. அவரை தேற்றுவது பெரிய விஷயமாக போய்விட்டது... காதலிச்சப் பொண்ணே என்னோட மகனை வேண்டாம்னு சொல்லிட்டா... இனி யார் என்னோட பையனை கல்யாணம் பண்ணிப்பாங்க... என்று புலம்பினார்.

"எத்தனையோ பேர் நல்ல மனசோட இருக்காங்க... நீ கவலைப்படாத நம்ம பையனுக்கு நல்லப்படியா கல்யாணம் நடக்கும்.." என்று அவரின் கணவர் ஆறுதல் கூறினார்...

"ஆனா அதுபோல பொண்ணுக்கு நாம எங்கப் போக... இனி அவனுக்கு பார்க்கும் பொண்ணெல்லாம் இதுமாதிரி நம்ம பையனை காயப்படுத்தினா என்ன ஆகறது..." என்று மலர்விழி அழுதார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராகவியின் தந்தை தான் ராகவியை அஜய்க்கு திருமணம் செய்துக் கொடுப்பதாக கூறினார்.. அவர் முடிவுக்கு ராகவியும் அவள் அன்னையும் ஒப்புக் கொண்டனர்... அஜயின் பெற்றோருக்கும் இந்த முடிவில் திருப்தி.. ஆனால் அஜய் தான் எதுவா இருந்தாலும் அவசரப்பட வேண்டாம்... யோசித்து செய்யலாம் என்றான்... ஆனால் எல்லோரும் அவனிடம் பேசி அவனையும் சம்மதிக்க வைத்தனர்.

அஜய், ஸ்ரேயா திருமணம் நடக்கவிருந்த நாளிலேயே இவர்கள் திருமணத்தை முடிக்க நினைத்தனர்... பெரியவர்கள் சொன்னதற்காக அப்போது ஒத்துக் கொண்டாலும், கொஞ்சம் குழம்பிப் போனாள் ராகவி.. ஆனால் இப்போது அப்படியில்லை.

"என்ன ராகவி... ரொம்ப நேரம் காக்க வச்சுட்டனா ஸாரி..." என்றப்படியே கட்டிலில் வந்தமர்ந்தான் அஜய்...

"அப்படியெல்லாம் இல்ல... நீங்க அஷோக் கிட்ட ஃப்ரியா தானே பேசினீங்க... நான் வெய்ட் பண்ணிட்டிருப்பேன்னு பாதியிலேயே வந்துட்டீங்களா..??"

"பேசறதுக்கு அப்படி ஒன்னுமில்ல... புதுசா கல்யாணம் ஆனதால, அவன் கொஞ்சம் அட்வைஸ் பண்ணான்... "

"ஏன் அஜய்... அஷோக் கிட்ட மேரேஜ்க்கு வர வேண்டாம்னு சொல்லியிருக்கீங்க... அப்போ முன்னாடியே ஸ்ரேயா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்வான்னு நீங்க யூகிச்சிங்களா..??"

"அந்த விபத்துக்கு அப்புறம் ஸ்ரேயா கிட்ட ஒதுக்கம் தெரிய ஆரம்பிச்சுது ராகவி... அதான் எனக்கு அப்படி தோனுச்சு... நானே கூட கல்யாணத்தை நிறுத்திடலாமான்னு யோசிச்சேன்... ஆனா என்னவோ என்னால முடியல... ஒருவேளை ராகவி நல்ல முடிவா கூட எடுக்கலாம்னு நான் காத்திருந்தேன்... ஆனா இப்போ அவ பேசினத கேட்டப்போ, பேசாம நானே கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமோன்னு தோனுச்சு.."

"இதுக்கெல்லாம் காரணம் நான் தானே.. என்னால தான் ஸ்ரேயாவோட அறிமுகம் உங்களுக்கு கிடைச்சுது.."

"என்ன ராகவி இப்படியெல்லாம் பேசிக்கிட்டு, இதுல யாரோட தப்புமில்ல... இப்போ எதுக்கு ஸ்ரேயாவை பத்தி பேசிக்கிட்டு,  விடு அது முடிஞ்சுப் போனது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.