(Reading time: 20 - 39 minutes)

ன்று மாலை நிச்சயதார்த்த விழாவிலும், ஆதவன் தனித்திருக்கும் நேரங்களில் எல்லாம் அவனின் தாயோ இல்லை சித்தியோ அருகிலேயே இருக்க, அப்பொழுதும் அவர்களால், தனிமையில் பேச முடியாமல் போனது. நிச்சயம் நடை பெரும் போது கீதாவின் தந்தை ஆதவனை அவன் அம்மாவின் பக்கத்தில் இருந்து அழைத்து சென்று தன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அறிமுகப்படுத்த, அவனின் சித்தி ஆதவனின் அம்மாவின் அருகில் வந்து.

“என்ன அக்கா இது, நீ பக்கத்துல இருக்கும் போது உன்கிட்ட ஒரு வார்த்தைக் கூட கேக்காம, அந்த மனுஷன் பாட்டுக்கு ஆதவனைத் தனியா கூப்பிட்டுட்டு போறாரு. இப்போவே இப்படின்னா, கல்யாணம் முடிஞ்சா, உன்கூட பேசக் கூட விடமாட்டாங்க போலவே”, என்று ஏற்றி விட, ஆதவனின் தாய் இதைக் குறித்து ஆதவனிடம் பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டார்.

நிச்சயம் முடிந்து அனைவரும் கிளம்ப, ஆதவன் கீதாவிடம் சொல்லிக் கொள்ள அவள் அறைக்கு சென்றான். அவளும் ஆஹா இப்பொழுதாவது அவனுடன் பேச தனிமை கிடைத்ததே என்று சந்தோஷப்பட அவனோ, “கீதா, நான் கிளம்பறேன்”, என்று மட்டும் கூற, கீதாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. இதை சொல்வதற்கு அவன் தனியாக வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்து தலையை மட்டும் ஆட்டினாள்.

ஆதவனின் குடும்பத்தினர் கிளம்பியபின் கீதாவின் தோழி ஆதவன் தனிமையில் அவளிடம் நன்றாகப் பேசினானா என்று கேட்க, அதற்கு கீதா கூறிய பதிலைக் கேட்டு கீதாவின் தந்தையும், தாயும் இது என்ன இப்படி பட்டும், படாமல் இருக்கிறானே என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

ஆதவனின் தாயும் அவனிடத்தில் கீதாவின் தந்தை தன்னை மதிக்காமல் அவனை கூப்பிட்டுக் கொண்டு சென்றதை பெரிய குற்றமாக சொல்லி பொரிந்து விட்டு இனி தான் எப்படி பேச சொல்கிறேனோ அப்படியே அவளிடத்தில் பேசவேண்டும் என்று கூறினார்.

நிச்சயம் முடிந்து இரு நாட்கள் சென்ற பின் முதல் முறையாக ஆதவனிடமிருந்து கீதாவிற்கு போன் வந்தது. மிகுந்த சந்தோஷத்துடன் தொலை பேசியை எடுத்த கீதா,

“அப்பா, இத்தனை நாள் கழிச்சுதான், உங்களுக்கு என்கிட்ட பேச தைரியம் வந்திருக்கா?”, என்று எதார்த்தமாக கேட்க,

“எனக்கு தைரியம் இல்லைன்னு எப்படி சொல்ற. உன்கிட்ட பேசலைன்னா நான் கோழைன்னு அர்த்தமா, அப்படின்னு யார் சொன்னது, உங்கம்மாவா, இல்லை உங்கப்பாவா”, என்று குதர்க்கமாக ஒரு கேள்வியைக் கேட்டான்.

“அச்சோ, என்ன இப்படி கேக்கறீங்க, நான் சாதாரணமாதான் கேட்டேன். சரி நாம சண்டை போட வேண்டாம். சொல்லுங்க, நீங்க கல்யாணத்துக்கு எத்தனை நாள் லீவ் போட்டு இருக்கீங்க”, என்று சமாதானமாக பேச முயல,

“அது ஒரு வாரம் போட்டு இருக்கேன். அப்பறம் நான் உன்கிட்ட ஒண்ணு சொல்றேன், நல்லாக் கேட்டுக்கோ, இந்த மாதிரி ஜாலியா பேசறேன் அப்படி, இப்படின்னு என்னையோ, இல்லை எங்கம்மாவையோ தூக்கி எரிஞ்சு பேசினேன்னு வையி அப்பறம் நீ வேற ஆதவனைத்தான் பார்க்க வேண்டி வரும்”, என்று கோவத்துடன் பேசி கைபேசியை வைத்தான்.

அவன் கைபேசியை வைத்தவுடன் நாம் அப்படி என்ன பேசினோம், இவன் இந்த அளவு கோவப்படுவதற்கு என்று புரியாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள் கீதா.

இப்படியே ஆதவனின் அம்மா புராணங்களுடனும், கீதாவின் ஊம் கொட்டுதல்களுடனும் இரண்டு மாதங்கள் ஓடியது. அவன் போன் செய்யவில்லையே என்ற நிலை போய் ஏன்தான் செய்கிறானோ என்று கீதா நொந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டாள். அவளின் பெற்றோரிடமும் இதைப் பெரிய குற்றமாக அவளால் சொல்ல முடியவில்லை.

ன்ன அக்கா எப்படி இருக்கீங்க, கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?”, தொலைபேசியில் தன் அக்காவுடன் பேச ஆரம்பித்தாள் ஆதவனின் சித்தி.

“நான் நல்லா இருக்கேன். நீ உங்க வீட்டுக்காரர், பசங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா? கல்யாண வேலை நமக்கு என்ன இருக்குது. அது எல்லாம் பொண்ணு வீட்டுக்குத்தானே. நமக்கு பத்திரிகை கொடுக்கற வேலைதானே. அதுக் கூட முக்கால்வாசி போஸ்ட்ல அனுப்பிட்டேன். நெருங்கின சொந்தக்காரங்க ஒரு நாலஞ்சு பேருக்குத்தான் நேருல கொடுக்கணும். அது எல்லாம் ஆதவன் ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு அடுத்த வாரம் வரேன்னு சொல்லி இருக்கான். அப்போக் கொடுத்துக்கலாம்ன்னு இருக்கேன்”

“ஓ சரிக்கா. அப்பறம் அவங்க வீட்டுல எல்லாரும் எப்படி பழகறாங்க. நீ ஒண்ணும் ரொம்ப விட்டுக் கொடுத்து போகலையே”

“இல்லடி, நான் அவங்ககிட்ட எப்போ பேசினாலும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னுதான் பேசறேன்”

“அப்படியே பேசுங்க அக்கா, நாம கொஞ்சம் இறங்கி வந்தாக் கூட போச்சு, இந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க நம்ம தலைமேல ஏறி உக்காந்துக்குவாங்க. நீங்க கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்க. இல்லைனா என் நாத்தனார் பொண்ணையே பார்த்திருக்கலாம். அவங்க சீர் எல்லாம் சிறப்பா செஞ்சு இருப்பாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.