(Reading time: 20 - 39 minutes)

ம்மா கீதா, என்னது இது கல்யாண மேடைல வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்க”, ஆதவனின் தாய் கத்த ஆரம்பிக்க, நடக்கும் கலாட்டாவைப் பார்த்து மண்டபத்தில் இருந்தவர்கள் சலசலக்க ஆரம்பித்தார்கள்.

கீதா பக்கத்து மேடையில், நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தவரின் அருகிலிருந்த மைக்கை எடுத்து வந்து அதில் பேச ஆரம்பித்தாள்.

“இங்க வந்திருக்கற ரெண்டு வீட்டு பெரியவங்களும் என்னை மன்னிக்கணும். எல்லாரும் கொஞ்ச நேரம் அவங்கவங்க இடத்துல அமைதியா உக்காருங்க. உங்களுக்கு நான் ஏன் இப்படி பண்றேன்னு உண்மை தெரிய வைக்கறேன்”, என்று கூற அனைவரும் அவரவர் இடத்தில் அமைதியாக அமர்ந்தார்கள்.

“நேத்து ராத்திரி ஆதவனோட அம்மா வந்து உங்கக்கிட்ட என்ன கேட்டாங்கம்மா”

“என்ன கீதா இதெல்லாம்... அதைப் பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம்மா... மொதல்ல கல்யாணம் முடியட்டும்”

“என்ன சம்மந்தி.... நீங்களே பொண்ணைத் தூண்டி விட்டுட்டு நடிக்கறீங்களா...”

“நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா... நான் எங்க அம்மா அப்பாவோட பேசறேன்....”

“சொல்லுங்கம்மா, இவங்க நேத்து ராத்திரி வந்து என்ன கேட்டாங்க உங்கக்கிட்ட...”

“அது மாபிள்ளைக்கு ஒரு கார் வாங்கிக்கொடுக்கணும்ன்னு சொன்னாங்க....”

“அது மட்டுமா சொன்னாங்க....”

“அது... அது....”

“ஏன் தடுமாறீங்க... உண்மைய சொல்லுங்க...”

“மாப்பிள்ளை டெல்லில ஒரு பிளாட் பார்த்து வச்சிருக்கார். அதுக்கு ஒரு பத்துலட்சம் பணம் கொடுக்கணும்ன்னு சொன்னாங்க”, கமலா சொல்ல, மீதமும் சொல்லி முடியுங்கள் என்ற பாவனையில் நின்றாள் கீதா.

“அப்படி கொடுக்க முடியாதுன்னா கல்யாணத்தை நிறுத்திடுவோம்ன்னு சொன்னாங்க”, என்று கூற ஆதர்ஷை அற்பப்புழுவைப் போல் பார்த்தாள் கீதா.

இது எல்லாம் மைக்கின் வழியாக மொத்த சத்திரத்தில் இருப்பவர்களுக்கும் கேட்க அங்கு இருந்தவர்கள் மாப்பிள்ளை வீட்டினரை மிகக் கேவலமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

“மறுநாள் காலைல கல்யாணம். முந்திய நாள் ராத்திரி பொண்ணு வீட்டுக்காரங்க கழுத்துல கத்தியை வைக்கறது என்ன நியாயம் சொல்லுங்க... எங்கப்பா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றேன்னு வாக்குறுதி கொடுத்தப்பறம்தான் இந்தோ நிக்கறாங்களே இவங்க இன்னைக்கு காலை கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க”

“ஏய் என்னடி, மண்டபத்துல வச்சு எங்களை அசிங்கப்படுத்தறயா. இனி நீ என் காலில விழுந்து கெஞ்சினாலும் நான் உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டேன்”, மாப்பிள்ளை ஆதர்ஷ் பொங்கி எழ, அவனைப் பளார் என்று அடித்தாள் கீதா. மொத்த சத்திரமும் அதிர்ச்சியில் உறைந்தது. கீதாவின் அம்மா மயக்கம் வரும் நிலைக்கு சென்றார்.

“இந்த அரை உங்கம்மாக்கு விழுந்து இருக்க வேண்டியது. வயசுல பெரியவங்களா போய்ட்டாங்க. இனி ஒரு வார்த்தைப் பேசுன மரியாதை கெட்டுடும். இந்தக் கல்யாண மண்டபத்துல கிட்டத்தட்ட முந்நூறு பேர் இருக்காங்க. இத்தனை பேருக்கு நேரா மாலையைக் கழட்டும்போதே உன்னையும் சேர்த்து கழட்டி விட்டுட்டேன்னுதான் அர்த்தம். பொண்ணு வீட்டுக்காரங்கன்னா உங்களுக்கு அடிமையா, நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டறதுக்கு. அதுவும் எத்தனை ஒரு கிரிமினல் புத்தி. கடைசி நேரத்துல கல்யாணத்தை நிறுத்திடுவோம்ன்னு சொல்லி டிமாண்ட் பண்றது. நேத்து உங்கம்மா வந்து பேசிட்டு போன பின்னாடி இதுக்கு எப்படி பணத்தைப் புரட்டப்போகறோம்ன்னு நினைச்சு எங்கம்மா, அப்பா ராத்திரி முழுக்க தூங்கலை. நீ டாக்டர்தானே. சம்பாதிக்கற இல்லை. உனக்கு வேண்டியது வாங்க துப்பு இல்லை. இப்படி பொண்ணு வீட்டுல உன் வாழ்கையை வளப்படுத்திக்க பார்க்கறியே. வெக்கமா இல்லை. நீ டாக்டர்ன்னா நான் என்ஜினியர். உன்னை விட நான் நிறைய சம்பாதிக்கறேன். எந்த விதத்துல நான் குறைஞ்சு போயிட்டேன். இத்தனை காசை செலவழிச்சு உன்னை எதுக்கு நான் விலை கொடுத்து வாங்கணும்”,கீதா பேசப் பேச அவமானத்தில் முகம் குனிந்து நின்றார்கள் ஆதவனும் அவன் அம்மாவும்.

“நேத்து ராத்திரி உங்கம்மா எங்கப்பா, அம்மாக்கிட்ட பேசிட்டுப் போன உடனேயே இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னுதான் நினைச்சேன். ஆனா நீங்க பண்ணின தப்பு தெரியாமையே போய்டுமே... ரொம்ப சுலபமா பொண்ணு வீட்டு மேல தப்பெல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருப்பீங்களே. இங்க இருக்கற அத்தனைப் பேருக்கும் உங்க தப்பு தெரியட்டும்ன்னுதான் இப்போ வரை வெயிட் பண்ணினேன். இந்த விஷயம் இந்த ஊர் முழுக்கத் தெரிஞ்சு எனக்குத் திரும்ப கல்யாணம் ஆகாட்டாக்கூட பரவாயில்லை. ஆனா உங்களை மாதிரி இருக்கற ஆளுங்களை இந்த ஊருக்குத் வெளிப்படுத்தணும்ன்னு நினைச்சேன்”

“என்னடி பேசிட்டே போற.... என் பிள்ளை ஆம்பள... இப்போ நினைச்சாக் கூட அவனுக்கு உடனே பொண்ணு கிடைக்கும்... ஆனா இப்படி மேடைல முழக்கம் போடற உன்னை மாதிரி பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க”

“அப்படி எல்லாம் கனவு காணாதீங்க. இங்க நேஷனல் நியூஸ் பேப்பர், லோக்கல் நியூஸ் பேப்பர் எல்லாத்துலேர்ந்தும் ஆளுங்களை வர வச்சிருக்கேன்.... மணப்பெண்ணை ஏமாற்றிய மணமகன் அப்படின்னு கொட்டை எழுத்துல உங்க வண்டவாளம் நாளைக்கு காலைல பேப்பர்ல வரும்.... அதுக்குப் பின்னாடியும் உங்க பையனை எந்தப் பொண்ணு கல்யாணம் பண்றான்னு பார்க்கறேன். அப்பறம் நீங்க இப்படியே கிளம்பிடலாம்ன்னு நினைக்காதீங்க. இந்தக் கல்யாணத்துக்காக கிட்டத்தட்ட எங்கப்பாக்கு பத்து லட்ச ரூபாய் செலவாகி இருக்கு. அதை மரியாதையா இன்னும் ஒரு மாசத்துல எங்களுக்கு கொடுத்திருக்கீங்க. ஏற்கனவே இதைப் பத்தி நான் எங்க ஏரியா இன்ஸ்பெக்டர்க்கிட்ட என் தோழி மூலமா புகார் கொடுத்துட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை விசாரிக்க அவங்க வருவாங்க... so எல்லாத்துக்கும் ரெடி ஆகிக்கோங்க”, என்று கூற, மண்டபத்தில் இருந்த மொத்த ஜனமும் கீதாவின் தைரியத்தைப் பாராட்டி கைத்தட்ட ஆரம்பித்தார்கள்.

 

This is entry #130 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - ஜெய்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.