(Reading time: 20 - 39 minutes)

துக்கு எதுக்கு தேங்க்ஸ்லா சொல்லிக்கிட்டு… நீ அந்த ரூமுக்குள்ள போகும்போதே நா கவனிச்சே… சுலோசனாம்மா வீட்டுக்கு வந்தது கூட தெரியாம ஏதோ செய்திட்டு இருந்த… அதனால தா நான் அவங்களுக்கு காஃபி கொண்டுவர மாதிரி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க அவசரமா வந்தே.. அதுவே நல்லதா போச்சு”

மங்காவைப் பார்த்து புன்னகைத்தாள் கீர்த்தி.

“நேரமாயிட்டிருக்கு… நா போயி சமைக்கிறேன்… வா சுகுணா”

மங்கா மற்றும் சுகுணா சமையலறைக்கு செல்ல கீர்த்தி தன்னுடைய அறையில் புகுந்துகொண்டாள்.

கீர்த்தியின் மனதிலிருந்த அந்த கேள்வி அவளை அரித்து கொண்டிருந்தது.  விளைவாக அவளின் நினைவுகள் மூன்று வருடங்கள் பின்னோக்கி பயணித்தது.

எத்தனை அழகாயிருந்தது என்னோட வாழ்க்கை! அன்புன்னா என்னன்னு யாராவது கேட்டா என்னோட குடும்பம்னு சொல்லுவேன்.  குருவி கூடு மாதிரி எங்களோட குடும்பம்.  நான் அப்பா செல்லம்.  அதனால அம்மா  எங்கிட்ட கொஞ்ச கண்டிப்போட இருப்பாங்க.. எனக்கும் தம்பிக்கு 4 வயசு வித்யாசம்.  எங்க ரெண்டு பேருக்கு நடுவுல சின்ன சின்ன சண்டைகள் வரும்போது வீட்டை ரெண்டாக்கிடுவோ.. அப்போ அம்மா நிலைமதா பாவமாயிருக்கு.  எனக்கு சவிதான்னு ஒரு ஃப்ரெண்டு இருந்தா. அவதா எனக்கிருந்த ஒரே ஒரு ஃப்ரெண்டு என்றதால காலேஜுக்கு போயிட்டு நேரா வீட்டுக்கு வந்துருவேன்.  ஒரு நாள் சவிதா வீட்டிலிருந்து எங்க வீட்டுக்கு போயிட்டிருந்த போதுதா அந்த கொடூர நடந்தது.  எப்படி? ஏதுன்னு? எனக்கெதுவும் முழுசா இன்னைக்கும் கூட தெரியல.  மூனு மனித மிருகங்க என்னை சூறையாடிடுச்சுங்க. 

கண்ணு முழிச்சப்போ ஹாஸ்பிடல் பெட்ல இருந்த.  அங்கதா முத முறையா இந்த சொர்ணாக்காவ பார்த்தே.  அய்யோ! எனக்கு இப்படி ஆயிடுச்சேன்னு நினைச்ச போது இருந்த வலியவிட சொர்ணாக்காவோட வார்த்தைகள்தா அதிகமா வலிச்சது.

ஹாஸ்பிடல்ல டாக்டர்ஸையும் சொர்ணாக்காவையு தவிர வேற யாரையும் என்னால பாக்க முடியல.  அப்போலிருந்தே அவ எப்பவுமே கோவமாத இருப்பா.  அப்பா அம்மா பத்தி பேசினப்போ கூட அவ சரியான பதில் சொல்லல.  ஓரளவுக்கு உடம்பு தேரின பிறகு இந்த வீட்டுக்குதா என்னை அழைச்சிட்டு வந்தா.  அதுக்கப்புறம் இந்த வீட்லயே என்னை ஹௌஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டா.  என்னோட நிலமய நினைச்சு நா ரொம்பவே மனசொடஞ்சு போயி அழுதுட்டே இருந்தே..  அது கூட அவளுக்கு பொறுக்காது.

“ஊர் உலகத்துல யாருக்குமே இப்படி நடக்கலையா என்ன? சும்மா ஒப்பாரி வக்காத”

எப்பவுமே என்னை திட்டிக்கிட்டே இருப்பா.  அவளுக்கு பயந்து நா அழுறத கொஞ்ச கொஞ்சமா கொறச்சிகிட்டே.  அந்த நேரத்துல எனக்கு கிடச்ச ஒரே ஆறுதல்னா அது மங்காவோட அன்பும் கனிவான பேச்சும்தா.  ஒரு நாள் சொர்ணாக்கா வீட்டுல இல்லாத நேரமா பார்த்து மங்காவோட ஃபோனை வாங்கி அப்பாக்கு கூப்பிட்டே.  அதுவும் கூட ஃப்லாப் ஆச்சு.  அப்பாவோட நம்பர் நாட் இன் செர்வீஸ்னு சொல்லுச்சு.  சொர்ணாக்காகிட்ட இருந்து தப்பிக்க இருந்த ஒரே வாய்ப்பும் போச்சு.

அவள் வீட்டுக்கு வந்தது தெரியாம…அப்பாகிட்ட பேச முடியாதத நினைச்சு நா அழுதத அவ பார்த்துட்டா.  அவ்வளவுதா மறுபடியு என்னை திட்ட ஆரம்பிச்சுட்டா.  எனக்கு கோவமா வந்தது.  ஆனா அவள அப்போதைக்கு ஒன்னுமே செய்ய முடியல. 

‘சொர்ணாக்கா! உன்னை நாளைக்கு என்ன பண்ணுறன்னு பாரு…’ என் ரத்தம் கொதிக்க… மறுநாளே ஒரு வீர செயல செய்துட்டேனே.

அவளுக்கே தெரியாம அவளோட ஃபோட்டவ எடுத்து… சுவத்துல ஒட்டி வச்சு.. நா அடிச்ச அடில… நடுநடுங்கி போயிட்டா….

இதுல ஒரு சின்ன ட்விஸ்ட் என்னன்னா சொர்ணாக்காவ அடிச்சது நான்தா நடுநடுங்கி போனது நான்தா… ஏன்னு யோசிக்கிறீங்களா… என்னோட வீர தீர செயல அவ பார்த்துட்டா.  என்னோட நல்ல நேரமோ என்னவோ சொர்ணாக்கா ஒன்னுமே சொல்லாம அங்கிருந்து போயிட்டா.  எங்கிட்ட இருந்து அவள காப்பாத்திக்க என்னை மேல படிக்க சொல்லி மங்கா மூலமா தூதுவிட்டா.  பயத்துலதா நேரா பேசாம இந்த தூதுன்னு நான் உங்களுக்கு சொல்லனும்னு அவசியமில்லை.  சரி! எவ்வளவு நாள்தா வீட்டிலியே இருக்கறதுன்னு நானும் அதுக்கு ஒத்துக்கிட்டேன்.  அதுக்கப்புறம் பி.ஜி முடிச்சு பி.ஏச்.டின்னு படிப்புல பிஸியாயிட்டதால என்னோட வீர செயலுக்கு வேலயே வரல.  அவளும் எங்கிட்ட பேசமாட்டா… ஆனா என்னோட கெட்ட நேரம் இன்னைக்கு அவகிட்ட மாட்டிக்கிட்டே.  ஆனாலு எனக்கு அது டௌட்டாத இருக்கு! நா சொர்ணாக்காவோட ஃபோட்டவ அடிச்சத… அவ கவனிக்கலையோ?!

என்னடா இந்த கீர்த்தி இப்படிபட்ட ஒரு வீர மங்கையா இருந்தும் இன்னைக்கு சொர்ணாக்காவ பார்த்து பயந்துட்டாளேன்னு யோசிக்கிறீங்களா? அவ முன்னாடி நான் பயந்த மாதிரி நடிச்சிட்டிருக்க… என்ன அப்படி பார்க்கிறீங்க? என்னை நீங்க தாராளமா நம்பலாம்.  நம்பிட்டீங்கல்ல.. இது இததா இந்த கீர்த்தி எதிர்பார்த்தது.  ஆனாலு உங்ககிட்ட ஒரு உண்மைய மறைக்க என்னோட மனசாட்சி இடங்கொடுக்கல… எனக்கு அவள பார்த்தா கொஞ்ச பயமாதா இருக்கும்.  அப்பாவோ அம்மாவோ எங்கிட்ட இவ்வளவு கோவமா பேசமாட்டாங்க..  அதான் என்னோட பில்டிங் ஸ்டராங் பேஸ்மெண்ட்தா கொஞ்ச வீக்.  அதுமட்டுமில்லாம அந்த புக்கை காப்பாத்தனுமே! நாலே வரின்னாலும் இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது.  இருங்க அதை எடுத்துட்டு வரேன்.  விடுபட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள் கீர்த்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.