(Reading time: 36 - 72 minutes)

து என்னை தைரியமான கம்பீரமான ஆண் மகனாக உலகத்திற்கு காட்ட நினைக்குது! அழுதால் கோழை அடையாளம் - இது எழுதப்படாத விதி! தன்மானத்தை அடகு வைத்து விட்டு நான் எங்கே போகுறது!!! அதற்கு கட்டுபட்ட என் கைகள் கைக்குட்டையால் முகத்தை துடைத்த  பொழுது..

“டாக்டர் பரத்”, தூரத்தில் ஒரு குரல் என்னை அழைப்பது போல... பரிச்சியமான குரல் என்ற தோன்றிய அடுத்த கணமே கண்டு பிடித்து விட்டேன் அழைப்பது ஜெஸி என! 

கொல்கத்தாவில் நான் கண்ட வீரத் தமிழச்சி!!! கல்லூரி மாணவி. சமூக நல ஆர்வலரும் கூட! ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் தான் முதலில் அறிமுகமானவள்!

என்னிடம் என்ன ஈர்ப்பை கண்டாளோ?? என்னை காதலிக்கிறேன் என்று விரட்டுகிறாள். இது இளம் பருவத்தில் வரும் ஈர்ப்பு! சொன்னாலும் புரியவில்லை அவளுக்கு! கஷ்டமே தெரியாதவள் என்றால் கூட பரவாயில்லை! என்னைப் போலே தாயை இள வயதில் இழந்து நிறைய குடும்ப பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறாள்.

அவள் எண்ணத்திற்கு அறிவுரை சொல்ல முற்பட்டதும்,

“என்னை பொறுத்தவரைக்கும் யு ஆர் எ செலிபிரிட்டி! உங்க சேவை... நீங்க எடுக்கிற ரிஸ்க்  உலகத்திலே எத்தனை டாக்டர்ஸ் எடுப்பாங்க? சத்தியமா அதுக்காகவாவது உங்களை லவ் பண்ணிட்டு போறேனே ப்ளீஸ்!”

எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்ற பொழுதும்,

“உங்களுக்கு ஒரு லைஃப் அமையுற வரைக்கும் லவ் பண்ணிட்டு போறேனே.. நீங்க என் லைஃப் ல வராம போனா கூட ஐ வோன்ட் ரெக்ரெட்!”

இப்படி சொல்லி தான் என் வாயை அடைத்தாள்! அவளாக கனவுகள் எதையும் வளர்த்து மனதை கெடுக்கக் கூடாது என்று என் முட்டையை பற்றி கூட அவளிடம் சொல்லி வைத்தேன். 

“நீங்க அந்த பொண்ணை கல்யாணம் செய்ற நிலை வந்தா அட்சதை போடுற முதல் ஆளு நானா தான் இருப்பேன்! உங்களோட இந்த அன்பை ரசிக்கிறேன் சொல்றதை விட மதிக்கிறேன்னு சொல்லலாம்!”

எந்த ஏமாற்றமும் இல்லை அவள் முகத்தில்! நரம்பு மாதிரி இருந்துகிட்டு என்ன துணிச்சல், என்ன தெளிவு! கைக் குட்டையை பாக்கெட்டில் வைத்தவாறு அவள் அழைத்த திசை திரும்பினேன்.

‘நரம்பி’ பாதுகாப்பு சோதனையின் மறுபக்கம் என்னையே பார்த்தவாறு மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள். அவளால் உள்ளே வர முடியாது.  என்னாலும் அவளருகே செல்ல முடியாது. என் பார்வை அவளை உரசியதும்,

“ஸாரி! ட்ராபிக்!!! அதான் லேட்டாகிடுச்சு”, சத்தமாக சொன்னவளை அத்தனை பேரும் பார்த்தனர்.

இத்தனை பேருக்கும் காட்சி பொருளாய் நின்று கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்க,

நான் வரச் சொல்லி இவளுக்கு லேட் ஆனது போல சொல்கிறாளே ஒரு கோபம் எட்டி பார்த்தது!

எட்டி பார்த்த கோபம் என்னவோ கண் மண் தெரியாமல் எல்லாம் வரவில்லை! வேர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருந்தவள் வெகு சிரமப் பட்டு வந்திருக்கிறாள் என்பதை என் கண்களே சொல்லி விட...

கோபப்பட்டவன். பாவப்பட்டேன்!

அவள் எதையும்... யாரையும்... கவனித்தது போல தெரியவில்லை!

“கண்டிப்பா கிடைக்கும்ன்னு நினைச்சு தேடுங்க! கிடைக்கும்! ஆல் தி பெஸ்ட்!!!”

ஒரே மூச்சில் சொல்லி விட்டு கட்டை விரலை உயர்த்தினாள். பதிலுக்கு ஏன் நானும் என் கட்டை விரலை உயர்த்தினேன் என்று எனக்கே தெரியவில்லை!

பின் அவள் கையசைத்து விடைபெற... ஒரு தலையசைப்புடன் என் கையும் அசைந்தது! போய் விட்டாள்!!!!!

நானோ அப்படியே நின்று விட்டேன் - அவள்  சென்ற திசையை பார்த்த படி! இந்த ஒரு வார்த்தை சொல்வதற்காக இத்தனை அல்லல்பட்டு  ஓடி வந்தாள்!

‘பத்திரமா போ’, என குறுந்தகவலை தட்டி விட்டு பின் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். 

உடனே பதிலும் அனுப்பி இருக்கிறாள் என்பதை நான் விமானத்தில்  போர்ட் ஆகி இருக்கையில் வந்து அமர்ந்த பின் தான் பார்த்தேன்.

‘நான் பத்திரமா போயிடுவேன். முட்டையை கண்ணுக்குள்ளே வைக்கணும்ல.. உங்க முட்டை கண்ணை பத்திரமா வைச்சுக்கோங்க! அழுது கெடுக்காதீங்க!’,

அதைப் படித்ததும், இத்தனை மன உளைச்சலிலும் சிரித்து விட்டேன்! அவள் சொன்ன விதம் இதமாக தான் இருந்தது!

அந்த இதமும், சிரிப்பும் ஒரு ஷணம் மட்டுமே!  காலம் என் காயத்தை புதைத்தாலும்... அழித்து விடவில்லை! அது பனியில் புதைத்த பிண்டம் போல அப்படியே இருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.