(Reading time: 34 - 67 minutes)

ங்க குட் டைம் நான் இன்னிக்கு பைக்கில தான் வந்தேன்! ஸோ, ஃபாஸ்டா ரீச் ஆயிடலாம்!”

அவளுக்கு தூக்கிவாரிபோட்டது, இவனோடு வண்டியில் போகும் போது யாராவது பார்த்து அதை அவள் அத்தையின் காதுகளில் போட்டால் என்ன நடக்கும்? ஏற்கனவே அந்த வீட்டை விட்டு வெளியேறும் நாளை அவள் மாமியார் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். மூச்சுக்கு முன்னூறு தரவை “ஆகாஷ், யூ.எஸ் கூப்பிட்டுட்டே இருக்கான், ஸ்ரீஜா, கல்யாணம் முடிஞ்சதும் போய் அவனுக்கு எல்லாம் செஞ்சுக் கொடுக்கணும், பாவம் இரண்டு பேரும் வேலைக்கு போறவங்க வாயிக்கு உருசியா சாப்பிடக்கூட முடியாது ஓடிக்கிட்டிருக்காங்க! அடுத்து அவனையும் நான் பார்க்கனுமில்ல, அவன் குடும்பத்தை பார்க்கும் பொறுப்பும் எனக்கிருக்கு! தங்கம் இப்படி சொல்லும்போது, சுபாவிற்கு உள்ளம் பதறும், ஸ்ரீஜா கல்யாணம் வரைதான் அந்த வீடு அதன் பின் நிச்சயம் அவள் தனிமைப்படுத்தபடுவாள், அதை நினைக்கும்போது நிராதரவான அவள் உள்ளம் அக்ஷயை நினைத்து ஏங்கும்! இப்போது கூட ஸ்ரீஜாவின் கல்யாண விசயமாகத்தான் தங்கம் அம்பத்தூர் சென்றிருக்க வேண்டும்!”

வண்டியின் ஹாரன் சத்தம் அவளை கலைத்தது. “ஏறிகோங்க!” என்றான்.

அவளுக்கு வேறு வழியில்லை, ஏறிக்கொண்டாள். வாகன நெரிசலுகளுக்கிடையே புகுந்து புகுந்து வண்டியை செலுத்தியவன்அடுத்த பதினைந்து நிமிடங்களில்,  மருத்துவமணையை அடைந்துவிட்டான்.

அவள் நின்றிசொல்லி விடைபெற நினைக்கும்போது அவன்,

“நீங்க உள்ளப்போங்க, நான் வண்டிய ட்ராப் பண்ணிட்டுவர்றேன்!” அவள் பதிலுக்கு காத்திராது இருசக்கரவாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு விரைந்தான்.

வரவேற்பரையில் விசாரித்துவிட்டு, முதல் தளத்துக்கு வந்தவளை ஸ்ரீஜாவின் குரல் திருப்பியது. “அண்ணி, இந்த ரூம், அவள் காட்டிய அறைக்குள் புகுந்தாள், வருணின் சின்னஞ்சிறிய கையில் துளைக்கப்பட்ட ஊசியின் வழியே மருந்து ஏறிக்கொண்டிருந்தது. அறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டான் சுனில். அவனைப்பார்த்து புன்னகைத்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ்பா, உனக்கு இன்னிக்கு ஆஃபீஸ் இல்லயா சுனில்?”

“இந்த வாரம் எனக்கு நைட் ஷிஃப்ட்க்கா, ஸ்ரீஜா தனியா ஹாஸ்பிட்டல் போறேன்னு சொன்னா, வருணுக்கு ரொம்ப முடியல நீங்க வர கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னா, அதான் துணைக்கு வந்தேன்!”

“தேங்க்ஸ்பா!”

“பரவாயில்லக்கா!” அப்ப நான் கிளம்பறேன் உங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா, கால் பண்ணுங்க!”  அதற்கு மேல் எதுவும் பேசாது தோள்பையைப்போட்டுக்கொண்டு ஸ்ரீஜாவிடம் கண்களால் விடைப்பெற்று கடந்துபோனான்.

இது அவனிடம் அவள் எதிர்பார்க்காத உதவி! ஒரு நாள் அலுவலகம் விட்டு வீடு திரும்போதுதான், சுனிலின் பின்னால் வண்டியில் போன ஸ்ரீஜாவை பார்த்ததும் தூக்கிவாரிபோட்டது சுபாவிற்கு, மஞ்சள் நிற துப்பட்டாவை தலையையும் முகத்தையும் சுற்றி கட்டிக்கொண்டு, சுனிலுடன் அவள் மின்னல் வேகத்தில் கடந்தாலும், சுபாவிற்கா அவளை அடையாளம் காணத்தெரியாது? இருவரும் அமர்ந்திருந்த விதமே அவர்களது நெறுக்கத்தைக்காட்டியது. வீடு வந்த ஸ்ரீஜாவை மொட்டைமாடியில் வைத்து வாங்குவாங்கென்று திட்டி தீர்த்தாள் சுபா. ஸ்ரீஜாவின் மவுனம் அவள் கோபத்தை இன்னும் கிளறியது.  அரைமணி நேர அறிவுரைக்குப் பின்னர். “ஸாரி அண்ணி” என்றாள். இரண்டு நாள் கழித்து அவளுடைய அலுவலகம் வந்து அவளை சந்தித்தான் சுனில்.  அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவள். அவனிடம், “தம்பி, இங்கப்பாருங்க நீங்க என்ன சொன்னாலும் இந்தக் காதல் கீதல்லாம் எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்ல, மேலும் நீங்க எது பேசனும்னாலும் என் மாமியார்க்கிட்டேயும், கொழுந்தன் கிட்டேயும் பேசி முறைப்படி அப்பா அம்மவோட வந்து உங்க வீட்டு முழு சம்மத்தோட அவளை கல்யாணம் பண்ணிக்கோங்க, அதை விட்டுட்டு ஸ்ரீஜா சின்னப்பொண்ணு இன்னும் குழந்தைத்தனமும் வெகுளித்தனமும் அகலாதவள், இதை சொல்லும்போது சுனிலின் கண்களில் ஒரு சின்னப் புன்னகை வந்துபோனது, அதைக்கண்டும் காணாத்துமாய், அவள் தொடர்ந்தாள், நீங்க அங்க இங்க சுத்துறத யாராச்சும் பார்த்தா என்ன ஆகும், வீண் பேச்சு நாளைக்கு அவ கல்யாணமாகி வேறு வீட்டுக்கு போகப்போறபொண்ணு, நீங்க புரிஞ்சு நடந்துப்பீங்கண்ணு நினைக்கிறேன்!”

அவள் முடித்தபின் சுனில் தொடர்ந்தான். , “அக்கா, எங்க வீட்டில எல்லாருக்கும் ஸ்ரீஜா டபுள் ஓகே. பொண்ணு கேட்டு வர அவங்க ரெடியா இருக்காங்க, அவதான் வேலைக்கு போய் ஒரு வருஷம் கழிச்சுதான் கல்யாணம், நான் இண்டிப்பெண்டன்டா இருக்கனும்னு நினைக்கிறேன்னு சொல்றா, அதான் வெயிட் பண்றேன், மத்தபடி அவங்க அம்மால்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்ல, அப்புறம் அவ உங்க முழுமையான சம்மதம் வேணும்னு நினைச்சாலேத்தவிர அவ அண்ணன்னு பேருக்கு இருக்கிற ஆகாஷ்லாம் பிக்சர்லே இல்ல அக்கா!, நீங்க சொன்னதை நான் ஏத்துகிறேன், தேவையில்லாம இனி ஸ்ரீஜாவ மீட் பண்ணமாட்டேன், அவ ஒரு வேலைக்கு போனதும் எங்க கல்யாணம் அதில் எந்த மாற்றமுமில்லை! அப்ப நான் கிளம்பிறேன். அவனுடைய தெளிவான பேச்சு சுபாவிற்கு பிடித்திருந்தது.  இன்றும் அவன் எதையும் மனதில் வைத்துகொள்ளாது உதவியது, அவளுக்கு பிடித்திருந்தது. ஸ்ரீஜாவிற்கு ஏற்றவன் தான் என மனது சொல்லியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.