(Reading time: 34 - 67 minutes)

ண்ணி” மெதுவாக அழைத்துக்கொண்டு ஸ்ரீஜா அருகே வந்தாள்.

“அண்ணி, வருண் தூங்கிட்டானா? , சாரி இன்னிக்கு உங்களை ஒத்தையா ஹாஸ்பிட்டல்ல விட்டு வந்தது, ரொம்ப கஷ்டமா இருந்துச்சு”

“ச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்ல, இன்னிக்கு நீயும் சுனிலும் பன்னின உதவிக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும், ஆமா, இன்டர்வியூ என்ன ஆச்சு?”

“சக்ஸஸ் அண்ணி, அத சொல்லதான் வந்தேன், நெக்ஸ்ட் வீக் ஜாயின் பண்ணனும்” அவள் புன்னகைத்தாள்.

“வெரி குட், இது ஹேப்பி நியூஸ், அப்ப சீக்கிரமா சுனில் வீட்டில சொல்லி பேச சொல்லிட வேண்டியதுதான்.”

“ம்ம்.. அதான் இல்ல, இன்னும் இரண்டு வருஷம் வெயிட் பண்ணட்டும், நான் வேலையில கொஞ்சம் செட்டில் ஆகனும், அப்புறம்.. ஒரு இடைவெளி விட்டு அவள் தொடர்ந்தாள், வருணுக்கும் நாலு வயசாகும்போது கொஞ்சம் விவரம் தெரியும் ஸ்கூலுக்கு போயிடுவான் நீங்களும் ஃபிரீ ஆயிடுவீங்க..”

அவள் சொல்வதன் அர்த்தம் புரிந்தது. ஸ்ரீஜா திருமணம் முடிந்தகையுடன் அத்தை ஆகாஷுடன் கிளம்பிடுவாள். எங்கே சுபா தனியாக கஷ்டபடுவாளோ என ஸ்ரீஜாவின்  உள்ளம் வருந்தியது. அதை உணர்ந்துகொண்ட சுபா,  ஸ்ரீஜாவின் கன்னத்தைப்பிடித்து கிள்ளிக்கொண்டே, அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீ கல்யாணம் பண்ணி குடித்தனம் பன்னுற வீட்டுக்கிட்டேயே நானும் குடி வந்திடுவேன் உன்ன தனியா விட முடியுமா? அத்தை வெளிநாடு போயிட்டா நீ என் பொறுப்பில்ல…? மேலும் சுனிலுக்கு இரண்டு தம்பி இருக்காங்க போல… அவர் கல்யாணம் பன்னினாதானே அடுத்து உன் கொழுந்தங்களுக்கு கல்யாணம் பண்ண முடியும்? அதனால சீக்கிரமா அத்தைக்கிட்ட பேச சொல்லு!”

“அப்ப உங்களுக்கு ஓ.கே வா அண்ணி?”

“அவள் இரண்டு கன்னங்களையும் கிள்ளி, டபுள் ஓகே!”  என்றாள்.

“அப்புறம் அண்ணி, உங்க எம்.டீ செம கேரக்டர் இல்ல.. ரியலீ ஹீஸ் நைஸ் மேன், எம்ப்ளாயீக்கு ஒரு எமர்ஜென்சீனா எந்த எம்.டீ  இப்படி ஹெல்ப் பண்றாங்க..!”

“ஸ்ரீஜா, அவரு எம்.டீ இல்ல எங்க டீம் நியூ மேனஜர்..! ம்ம்.. எனக்கே தெரியாது அவருக்கிட்ட நான அவ்வளவா பேசினதில்ல..பட் ஹீ இஸ் குட்”

“இல்ல அண்ணி, அவரு வெறும் மேனேஜரில்ல உங்க கம்பெனியோட ஆக்டிங்க் எம்.டி, அவங்க அம்மா ரேகா பேரிலதான் கம்பெனி ரிஜிஸ்டர் ஆயிருக்கு,  இவரோட இரண்டு மூணு கம்பெனியோட லீகல் அட்வைங்க் ப்ளஸ் கன்சல்டேஷன பண்ற கம்பெனிலதான் சுனில் வேலை செய்யிறார்”.

“ஸ்ரீஜா, அங்கென்ன வெட்டிக்கதை வந்து தூங்கு! தங்கத்தின் அதட்டலானக் குரலைக் கேட்டதும் முகம் சுழித்தவளை,

“ஆமாம், போய்தூங்கு, நாளைக்கு பேசிக்கலாம் என அவள் ஸ்ரீஜாவை அனுப்பிவைத்தாள்!”

சுபாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.. நல்ல மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்க தான் செய்றாங்க.. கிட்டதட்ட நூறு பணியாளர்களைக் கொண்ட அந்த அலுவலகத்தை நிற்வகிக்கும் ஒருவன் தனக்காக இன்று முழுவதும் மருத்துவமணையில் துணை நின்றது, அவளுக்கு ஆச்சரியமாகயிருந்தது. இனி அந்த அலுவலகத்தில் மன உளைச்சலின்றி வேலைபார்க்கலாமென தோன்றியது. இரண்டு நாள் விடுப்புமுடிந்து அலுவலகம் திரும்பினாள். வருண் சோர்வு நீங்கி விளையாட அரம்பித்தது அவளுக்கு புத்துணர்வைத்தந்தது.

அந்த அலுவலகத்தின் புதிய எம்.டி யாகவும்,ஒரு சில குழுமத்தை நிர்வகிக்கும் மேலாளராகவும் ஹரீஷ் பொறுப்பேற்றதன் அறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. அவனுடைய நேரடி பார்வைக்கு கீழே இயங்கும் அணிகளில் அவளுடைய அணியும் ஒன்று. அவன் சொன்னதுபோல் அவள் வேலைக்கு வந்து அரைமணிநேரத்தில் மடிக்கணினி கொடுக்கப்பட்டது. காலையிலிருந்து ஓய்வின்றி இரண்டு நாள் மீதமிருந்த பணிகளை பார்த்துக்கொண்டிருந்தவளை,

அவளுக்கு பின்னால் நின்று மார்பின் குறுக்கே கைகளைக்கட்டிக்கொண்டு அவள் வேலையையும் கவனக்கூர்மையையும் ஆழ்ந்து உள் வாங்கிக்கொண்டிருந்தனை, தற்செயலாக திரும்பும்பொது அவள் பார்த்தாள்.

“சார், நான் ஏதாகச்சும் பண்ணனுமா? எனி நியூ வொர்க்?, அதை கேட்குமபோதுதான் அவள் கவனித்தாள், மதிய உணவு இடைவேளை காரணமாக எல்லோரும் உணவு அருந்த சென்றுவிட,  ஐம்பது கணினிகள் கொண்ட அந்த தளத்தில் அவள் மட்டும் தான் இருந்தாள், அதுவே அவளுக்கு ஒரு பயத்தை உண்டு பன்னியது!

“யெஸ், இது லஞ்ச் டைம் நீங்க சாப்பிடபோகனும், வேலை நேரத்தில் வேலைப்பார்த்தா போதும்!” அவன் கண்கள் சிமிட்டி புன்னகைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.