(Reading time: 34 - 67 minutes)

சுபாவிற்கு உடல் நடுங்கியது, இதை எப்படி எடுத்துக்கொள்வது?.. அவள் யோசிக்கும்போதே அவன் கேட்டான்,

“உங்க சன் குட்டி அக்ஷை எப்படி இருக்காங்க?”

அக்ஷையின் பெயரைக்கேட்டதும் அவள் மனம் லேசானது, ஒரு சில நோடிகளில் அவன் மீது துளிர்த்த அவநம்பிக்கையை நினைத்து தன்னை தானே கடிந்துக்கொண்டாள்.

“அவன் நல்லாயிருக்கான், உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்!”

“இந்த சாரு மோருங்கிறத முதல்ல விடுங்க, கால் மீ அஸ் ஹரீஷ்! இவ்வளவு நாள் இங்க எப்படியிருந்ததுச்சுன்னு எனக்கு தெரியாது, பட் இனிமே இப்படிதான்”  மீண்டும் புன்னகைத்தான்.

அவள் கணினியை அனைத்துவிட்டு உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு நகர போனாள்,

“ஐ திங்க், உங்க டீம் ல லேடீஸ் யாருமில்லததால, நீங்க தனியாதான் லஞ்ச்போறீங்கல்ல?”

இதுக்கு என்ன பதில் சொல்ல என தடுமாறி அவனைப்பார்த்தாள்,

நல்ல வேளை எந்தப் பெண்ணுமில்லையென அவள் உள் மனம் சொல்லியது, தன்னுடைய நிலைமையோ குடும்பச்சூழ்நிலையையோ யாரும் வமர்சிப்பதை விரும்பாதவள் அவள். ஒரு வேளை யாராவது ஒரு பெண் உடனிருந்திருந்தால் அவளுடைய வேதனைகளையும் பணிகளையும் பகிர்ந்திருப்பாளோ என்னவோ?

“இல்ல சார், அது வந்து என்னோட வொர்க் டைமிங்க் மத்தவங்களோட செட் ஆகாது அதான் தனியா லன்ச் போறேன்…!”

“நான் எத்தன தரவ சொல்லியும் நீங்க என்ன ஹரீஷ்ன்னு கூப்பிடாம நம்ம ஆஃபீஸ் கிளர்க் தாத்தா சதாசிவம் ரேஞ்சுக்கு என்ன “மோருன்னு.. இல்ல இல்ல சாருன்னு கூப்பிட்டதால .. நீங்க இன்னிக்கு என் கூட சாப்பிடுறீங்க.. !”

“இல்ல இல்ல வேண்டாமென அவள் சொல்லும் முன், அவள் கையிலிருந்த சாப்பாடு பையை பிடுங்கிக்கொண்டு நடந்தான். அவள் உரைந்து அங்கேயே நின்றதைப்பார்த்து,

“ஹலோ லஞ்ச் வேணுமா, இல்ல நான் கொலை பசியில இருக்கேன் ஃபுல் கட்டு நானே கட்டிடுவேன், அப்புறம் உங்களுக்கு இன்னிக்கு ஏகதேசி தான்!” அவன் புன்னகைத்தான்.

என்ன சொல்வது, அவனை தடுக்கவும் முடியாது, இதனை ஏற்கவும் முடியாது. அவன் பின்னால் நடந்தாள். விரிந்திருந்த அந்த உணவறையில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த மேசைகளில் சிறு சிறு குழுவாக அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தவர்களின் மொத்த கண்களும் ஏக நேரத்தில் அவர்களை மொய்த்தது. அவளது நடுக்கம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.தன்னுடைய உணவையும் அவளுடையதையும் பிரித்து வைத்தான்,

“சுபா” அவனது அழுத்தனான அழைப்பிற்கு நிமிர்ந்தவளை நேரே பார்த்தவன்.

“ரிலாக்ஸ், இயல்பா இருங்க முதல்ல நீங்க இத ஆடா ஃபீல் பன்னினா எல்லாரும் நம்ம இரண்டு பேத்தையும் தப்பா பார்க்கிற மாதிரிதான் தோணும், நாம் இங்க சாப்பிட தான் வந்திருக்கோம், சாப்பிடுங்க!”

அவன் தனது மனதை வாசிக்கிறான், என்பதை உணர்ந்ததும் தன் எண்ணங்களை கட்டுக்கு கொண்டுவந்தாள். உணவின்போது அவன் மிக இயல்பாக அவனுடைய படிப்பு, வெளிநாட்டில் அவன் படித்த மேற்படிப்பு, அவன் தந்தை தொடங்கிய தொழில் அதனை அவன் விரிவுபடுத்தியது சம்பந்தமாக அவன் பல விசயங்களை அவளுடன் பகிர்ந்துக்கொண்டான். சில புரிந்தது, தலையாட்டினாள். பல புரியவில்லை அதற்கும் தலை ஆட்டினாள். உணவு முடிந்து அவளிடம் விடைபெற்று அவன் விலகியவுடன் தான் அவள் இயல்பிற்கு வந்தாள். அன்றிலிருந்து அவன் கண்களுக்கு எட்டாது விலகிகொண்டிருந்தாள், அவன் உணவு இடைவேளைக்கு எப்போதேனும் அழைக்கும் போது உணவருந்திவிட்டதாக மழுப்பிவிடுவாள் ஆனால் அது பத்து சதவிகிதம் தான், அவனை நேரடியாக சந்திப்பதை அவளால் தடுக்க முடிந்ததே தவிர, அவள் உள் மனம் அவனிடம் பேச விரும்பியது உண்மை. அவனுடன் இருக்கும்போது மனதின் இருக்கம் மறைவதை அவள் உணர்ந்தாள். சில நேரங்களில் அவளது மனதின் போக்கை நினைத்து வருந்துவாள், சில நேரங்களில் தனக்கென சுயவிருப்பம் இருக்க கூடாதா? கொஞ்ச நேரம் மனக்கட்டுபாடுகளைத்தளர்த்தி  ஹரீஷுடனான உரையாடல்களை நினைத்துப்பார்பாள், புன்னகை சிந்தும் அவனது கண்கள் ஞாபகம் வரும்,  எப்போதும் அவளை சிரிக்க வைத்து பார்க்கும் அவனது குணம் ஞாபகம் வரும்.. அந்த நினைவலைகளின் இறுதியில் அக்ஷையின் நினைவுகளில் வந்து நிற்கும் இனம் பிரிக்க முடியாத அந்த உணர்வுகளுக்கு அவள் அனைக்கட்ட முயலும் போதெல்லாம் ஹரீஷ் அதை உடைத்துவிடுவான்.

ருணை அருகே இருந்த ப்ளே ஸ்கூலில் சேர்த்தாள். ஸ்ரீஜா பணிக்கு செல்ல தொடங்கிவிட்டாள். அலுவலம் வந்து கணினியை உயிர்ப்பித்தவளுக்கு பதட்டம்,  மின் அரட்டையில் அவளை தொடர்புகொண்டான் ஹரீஷ்.

“ஹலோ பிஸி பீ, கேண்டடினுக்கு வர முடியுமா? உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும்!”

“இதற்கு என்னவென்று பதில் அனுப்புவது?”, தேவையில்லாது பல முறை அவனை சந்தேக்கிகும் மனதும், அதை உடைத்தெரிந்து விடும் அவனது செய்கையும் அவளுக்கு பழகிப்போனதுதான். அதை காணாது விட்டதுபோல், தன் பணியை தொடர்ந்தவளின் மனது ஒரு நிலையில் இல்லை.

“ஹலோ நீங்க என்னோட சாட் பாக்கலையா?”  அருகே ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.