(Reading time: 34 - 67 minutes)

போதும்டீ, உன்னோட நாடகம் கலஞ்சிட்டு!, நடிக்காத, இப்படித்தான் என் மகனையும் மயக்கி கல்யாணம் பண்ணின, இவ்வளவு நாள் ரொம்ப ஒழுக்கம நீ நடிச்சதே பெரிய விசயம்,ஊர்ல யார் என்ன சொன்னாலும் நாங்க இந்த வீட்டில உன்ன நல்லா தானே வச்சிருந்தோம், என்ன தேவை வந்துச்சோ இப்ப இவனை தேடி நீபோயிருக்க..  ச்சீ அவன் கூட சேந்து நீயும் போயிடு,!

“கேட்டீங்களா சார், இது எனக்கு தேவையா?, உங்க மனசில நீங்க யாரையும் எப்படியும் நினைக்க உங்களுக்கு உரிமையுண்டு, ஆனா அது முறையான எண்ணமா இருக்கனும், என்னை இவ்வளவு மோசமான நிலைமையில கொண்டுவந்து விட்டிடீங்களே, உங்க மனசில இப்படி ஒரு எண்ணம் வளர, நான் காரணமா சொல்லுங்க, நானா உங்களை தேடிவந்து ஒரு வார்த்தை பேசிருப்பேனா? சொல்லுங்க, இப்ப என்னை இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டுவந்து விட்டுடீங்க, அவள் விம்மினாள்,

ஹரீஷ் கரைந்துபோனான்! “ஸாரி சுபா!, ஆன்டி ப்ளீஸ் தயவு செஞ்சு இத பெரிசு பண்ணாதீங்க, என் மனசில உள்ளத உங்கக்கிட்ட கேட்டேன் அவ்வளவுதான், மத்தபடி இதில சுபாவுக்கு எந்த சம்பந்தமும் இல்ல…

தங்கம் உச்சக்குரலில் கத்த, உண்மையில் இருவரும் அதிர்ந்து நிக்கும் தருணம் ஸ்ரீஜா வீட்டுக்குள் வந்தாள், அவளை வீட்டில் விட வந்த சுனிலும் தங்கத்தின் சத்தத்தைக் கேட்டு ஏதோ பிரச்சனை என உணர்ந்து விரைந்து வந்தான்..

“ஸ்ரீஜா, அண்ணி அண்ணினு உருகுனியே அவ செஞ்சக்காரியத்தப்பாரு.. எனத்தொடங்கி தங்கம் ஏதேதோ சொல்ல, ஸ்ரீஜா, ஒருவாரு நிலைமை உணர்ந்து சுபாவை பார்த்தாள், அழுது கண்கள் சிவந்து வாயைத்திறக்க வழியில்லாது நின்ற அவளை என்ன செய்வது? ஹரீஷ், கோபமான முகத்துடன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.

“அம்மா, கொஞ்சம் நிறுத்துங்க எதுவானாலும் அப்புறமா பேசலாம்”

ஹரீஷிடம் திரும்பி, “சார், உங்களோட விருப்பம் மிகவும் உயர்ந்தது, ஆனா அதை நீங்க இவங்கக்கிட்ட  இப்ப கேட்டிருக்க வேண்டாம், நீங்க தப்பா நினைக்காம கிளம்புங்க”

அருகில் நின்ற சுனில், “ஸார், நாம வெளியில போய் பேசலாம்!” என்றான்.

பெரும் மூச்சுடன் முகம் வாடி நின்ற சுபாவையும், அவளுக்குப்பின்னால் அவளை அப்பிக்கொண்டு நின்ற வருணையும் பார்த்துவிட்டு சுனிலுடன் வெளியேறினான்.

ரைமணி நேரம் கழித்து சுனில் வீட்டுக்குள் நுழையும்போது பிரச்சனை இன்னும் வலுத்திருந்தது..

“அம்மா இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க” – ஸ்ரீஜா

“அவ இந்த வீட்டில இருக்கக்கூடாது, அவளும் அவ மகனும் இப்பவே இந்த இடத்தைக்காலி பண்ணனும்!”

“அம்மா, இது அண்ணன் வாங்கின வீடு, இதுல அண்ணிக்கு உரிமை இருக்கு!”

“இருக்கும் இருக்கும், இவ ஒழுக்கம் தெரிஞ்சுதான் என் மகன் என் பேரில இத பதிவு பண்ணிருக்கான், இங்க யாரு இருக்கனும் இருக்கக்கூடாதுங்கிறத நான் தான் முடிவு பண்ணனும்”

“அம்மா, அண்ணா, உங்க மேல உள்ள நம்பிக்கையில் பண்ணின காரியத்தை நீங்க உங்களுக்கு சாதகமா மாத்றீங்க, அண்ணிய பத்தி யோசிக்காட்டியும் பரவாயில்ல, வருண பத்திக்கொஞ்சம் யோசிங்க, ப்ளீஸ்”

“ச்சீ, அவன இவா யாருக்கு பெத்தாளோ!” – இந்த வார்த்தையைக் கேட்டு ஸ்ரீஜா, சுபா இருவருமே அதிர்ந்து போயினர்,

அதுவரை அழுதுகொண்டு நின்றவள், ஒரு ட்ராலியை எடுத்து அவளுடைய முக்கியமான சர்ட்டிஃபிக்கேட், வருணுடைய ஆடைகள் என உள்ளேத்திணித்து வருணைத்தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். ஸ்ரீஜா தடுக்கவில்லை, அவளுடைய இந்த மாற்றம் நிச்சயம் அவளுக்கு நல்லவிதமாக அமையும் என நம்பினாள்,

அவளுடன் வெளியே வந்த சுனில், “அக்கா, வாங்க போகலாம்!”

“எங்கே?”

“எங்க வீட்டுக்கு, கவலப்படாதீங்க, எல்லாம் மாறும், வாங்க உண்மையான உறவுகள் என்னன்னு நீங்க புரிஞ்சுப்பீங்க, !”

“சுனில், குழந்தையோட தங்கிக்கிற மாதிரி ஒரு ஹாஸ்டல் இருந்தா சொல்லுங்க, ப்ளீஸ்”

“நீங்க வாங்க அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்!”,சுனிலுடன் கூட நடந்தாள்…

ரு சில மாதங்களுக்கு பிறகு..

கடற்கறையில் வருணுடன், ஹரீஷ் விளையாடிக் கொண்டிருக்க சற்று அருகே சுனிலின் கையைப்பிணைத்துக்கொண்டு ஸ்ரீஜா, நடந்துக்கொண்டிருந்தாள், தூரத்தில் கடலைப்பார்த்து அமர்ந்துக்கொண்டிருந்த அவளின் அருகே ரேகா ஹரீஷின் அம்மா வந்து அமர்ந்தாள்.

“என்னம்மா, முடிவு பண்ணிருக்க?”

“அம்மா, அது வந்து.. என்னன்னு நான் முடிவு பண்றது? வருண் தான் என் உலகம், அக்ஷய் தான் என் உயிர் அவருக்கு அப்புறம் இன்னொரு வாழ்கையை நான் ஏன் யொசிக்கனும்?, என்னப் பொறுத்தவரை ஹரீஷ் ஒரு நல்ல நண்பர்..அவ்வளவுதான், அது தான் எனக்கும் வருணுக்கும் நல்லதுனு நான் நினைக்கிறேன்!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.