(Reading time: 34 - 67 minutes)

டாக்டருடன் பேசிக்கொண்டே, ஹரீஷ் உள்ளே வந்தான், “ம்ம்.. சுபா நீங்க ஒரி பண்ண வேண்டாம் யுவர் சன் இஸ் ஃபீலிங்க் பெட்டர்” என்றான். அவள் டாக்டரின் முகத்தை ஏறிட்டாள், இன்னிக்கு ஈவினிங்க் வீட்டுக்கு அழைச்சுட்டு போயிடலாம், இரண்டு நாள் நல்ல பார்த்துக்கோங்க மெடிசின் குடுங்க, மறுபடியும் காய்ச்சல் வராம பார்த்துக்கோங்க! அப்புறம் நீங்க ஹரீஷோட ஃபேமிலி ஃப்ரண்டுன்னு எனக்கு தெரியாதும்மா, எனி எமர்ஜென்சி நீ யோசிக்காம இங்க வரலாம்!”

“தேங்க்ஸ் டாக்டர்”

அவர் புன்னகைத்துவிட்டு கிளம்பினார். ஹரீஸ் ஸ்ரீஜாவிற்கும், சுபாவிற்கும் உணவு வாங்கிவந்தான், அரைமணி நேரத்தில் தன் தாயுடன் ஹாஸ்பிட்டலுக்கு வந்தான். ஹரீஷைப்போன்று களையான கம்பீரமான முகம், கஞ்சியிட்ட காட்டன் புடவையில் நெற்றியில் திருநீர் கீற்றுடன் நன்றவள் சுபாவின் கண்களுக்கு அவள் வணங்கும் அம்மனாகத்தெரிந்தாள்.

அவளைக்கண்டு  எழுந்திருக்க முயன்றவளை கையமர்த்தி உட்காரவைத்தாள்.

இரண்டு மணி நேரம் மென்மையாக அவளிடம் உரையாடிவிட்டுக் கிளம்பினாள். அந்த தருணம் சுபா உண்மையில் தாய்மையின் சக்தியை உணர்ந்தாள். கிளம்பும்போது ஹரீஷ், “சுபா, நீங்க இரண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்க ஃப்ரஷ்ஷா மண்டே வாங்க போதும், அப்புறம், உங்களுக்கு லேப்டாப் கொடுக்க சொல்றேன், நீங்க வொர்க் ஃப்ரம் ஹொம், எப்ப வேணும்னாலும் எடுத்துக்கோங்க!”

இது அதிகப்படியான சலுகை, அவளுக்கு தெரியும் பொறியாளர்களைத்தவிர பணி நிரந்திரம் ஆகாதவர்களுக்கு கன்பெனி நியமனம் படி மடிக்கணினி கிடையாது. அவளது பணி இன்னும் நிரந்திரமாகவில்லை. அது அவனுக்கு தெரியாது போலும் என நினைத்தவள், “சார், நான் இன்னும் ட்ரெயினி தான்”

அவன் புன்னகைத்தான். உங்க கன்ஃபர்மேஷன் அல்ரெடி ப்ராஸஸ்டு, உங்களுக்கு தான் அது தெரியாது,  ஸோ, எதைப்பத்தியும் ஒரி பண்ணாம வருணோட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க”, புன்னகைத்துவிட்டு தன் தாயுடன் கிளம்பிப்போனான்.

மாலை வீடு திரும்பும்முன், வரவேற்பரையில் மருத்துவ சிலவிற்கான பணத்தைக்கட்டபோனபோது, அது ஏற்கனவே காலையில் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதை எப்படி எடுத்துகொள்வது? அதிகப்படியான அக்கறை ஒரு இடத்திலிருந்து வரும்போது அது தனக்கு ஆபத்தாய் முடியக்கூடும் என அவள் எப்போதும் விலகி விடுவாள். ஆனால் இன்று காலையிலிருந்த மோசமான மன அழுத்தம் குறைந்திருந்து. ஹரீஷிடம் அவள் பெற்றது சுயநலமில்லா உண்மையான உதவி. ஸ்ரீஜா, ஒரு நேர்முகத்தேர்விற்காக கிளம்பும்போது, ஹரீஷுடனான அந்த தனிமை அவளை அச்சுறுத்தியது. அவசரத்திற்கு அபயக்கரம் நீட்டியவனை, காரியம் முடிந்ததும் நீ கிளம்பளையா என்று எப்படிகேட்பது? அவள் ஸ்ரீஜா சென்றபின் ஒரு வார்த்தை அவனிடம் பேசவில்லை. வெளியே சென்றவன் அரைமணிநேரத்தில் தன் தாயுடன் வந்தான், இரண்டு மணநேரம் அவர்களோடு உரையாடியபோது அவளது மனம் லேசாகிப்போனது, பேச்சுவாக்கில் அவளது நிலைமை, குடும்பம், வேலை மற்றும் அக்ஷையின் மறைவு என முழுவதையும் தெளிவாக கேட்டு அறிந்துக்கொண்டாள் ஹரீஷின் தாய் ரேகா. அவர்களுடைய கேள்விகளும், விசயத்தைக்கேட்கும் மனப்பாங்கும் சுபாவை எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. அதில் ஒரு உரிமையிருந்ததேத்தவிர பாடு கேட்கும் விதமில்லை. வருணுக்கு ஃப்ளாஸ்கில் பாலும் இன்னொரு தூக்கில் அவளுக்கு டீயும் கொண்டு வந்திருந்தாள். உரிமையோடு அவள் கொடுத்தபோது உண்மையான தாயன்பை உணர்ந்து அவள் மனம் கிளர்ந்தது. இவ்வளவும் செய்த தாயையும் அவன் பிள்ளையையும் அவள் எப்படி சந்தேகதிப்பது.

வருணைத்தூக்கிகொண்டு அவள் வெளியே வரும்போது, அலைபேசி சிணுங்கியது, ஹரீஷ் தான், “சுபா, நீங்க கிளம்பிட்டீங்களா?”

“இல்ல சார், இப்பதான் வெளியே வர்றேன்!”

“ஓகே, நான் கேப் அரேஞ்ச் பண்ணிட்டேன், உங்க நம்பர் கொடுத்திருக்கேன், ஹீ இஸ் வெல் நோன் பெர்சன், நீங்க பயப்படாம போகலாம்!”

என்னசொல்வதென ஒரு கணம் தயங்கியவள், “சார், நீங்க ஏன் பில் கட்டின்னீங்க?” தயக்கத்துடன் கேட்டாள்.

“ம்ம்.. சுபா, நான் இன்னிக்கு செஞ்ச உதவியெல்லாம் நம்ம ஆஃபீஸ் ல இருந்து உங்களுக்கு செஞ்சதுதான், அம்மாவ அழைச்சுட்டு வந்ததுமட்டும்தான் என்னொட விருப்பம், நீங்க அதை அக்செப்ட் பண்ணிருப்பீங்கன்னு நினைக்கிறேன், உங்க பில்ஸ நான் கலைக்ட் பண்ணிட்டேன் இன்சூரன்ஸ்ல கிளைம் பண்ணிக்கலாம், அப்புறம் கேப் கூட நம்ம ஆஃபீஸ் எமர்ஜென்சி ஹெல்ப்ல இருக்கு!”

அவனுடைய இந்த விளக்கம், அவளுக்கு நிம்மதியை அளித்தது, மறுபடியும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அவன் அமர்த்திக்கொடுத்த கேபில் வீட்டுக்கு கிளம்பினாள். இரவு வருணை உறங்கவைத்துவிட்டு அருகிலிருந்து அவன் முதுகை மென்னையாக தட்டிக்கொண்டிருந்தவளின் மனதில் அக்ஷையின் ஞாபகம் வருடியது, முன்பெல்லாம் அவன் நினைவு தலைபடும்போதெல்லாம் கண்ணீர் வடிப்பாள். தொடங்கும்போதே முடிந்துபோன அந்த அத்யாயங்கள் அவளை சுக்குசுக்காக வருத்தும். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அந்த காயங்கள் யாவும் வடு ஆகிப்போனது..வடுக்கள் எப்போதும் நினைவுகளின் தோற்றங்களே தவிர வலியை ஏற்படுத்துவது இல்லை. முன்பெல்லாம் “ஐயோ பாவமென யாரேனும்.. சொல்லும்போது வெடித்து அழுவாள், இன்று அது மாறிப்போனது, அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு பிறருடைய வார்த்தைகளும், பரிதாப பார்வைகளியும் அவளுக்கு கையாள தெரியும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.