(Reading time: 34 - 67 minutes)

ம்ம்.. சரி உன்னோட குழப்பங்கள் இன்னும் தீரல…அதனாலதான் இப்படி யோசிக்கிற, இங்கப்பாரு கல்யாணமாகி பத்து வருசம் குழந்தையில்லாம இருந்த எனக்கு, தத்துப்பிள்ளையாதான் ஹரீஷ் வந்தான், அவங்க அப்பா இறந்து சில வருஷங்கள் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், என்னதான் வசதி இருந்தாலும் இளமையோட போராடி வாழ்றது எவ்வளவு கொடுமையானதுனு எனக்கு நல்லாத்தெரியும்!” நுரையீரல் பழுதடைஞ்சு ஹரீஷ் ரொம்ப கஷ்டப்பட்ட சமயம், தான் அக்ஷயையோட மரணம் நிகழ்ந்துச்சு, உடல் உறுப்பு தானத்தின் மூலம் அக்ஷய்க்கொடுத்த நுரையிரல்லதான் இப்ப என் மகன் சுவாசிக்கிறான்…

நான் சொல்லறது உனக்கு அதிர்ச்சியா இருக்கும் ஆனா அதுதான் உண்மை, அக்ஷயை மரணத்திற்கு அப்புறம், சுனில் மூலமா உன்னைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டோம், ஸ்ரீஜாக்கு எல்லா விபரமும் தெரியும், அவக்கொடுத்தமுகவரிக்கு வந்துபேசி உன்னை வேலையில சேர வச்சதும் ஹரீஷ்தான்,  ஹரீஷோட இந்த முடிவ உன்னைப்பார்த்த அன்னைக்கே அவன் என்கிட்ட சொல்லிட்டான்,  உன்னைசுத்தி தற்காப்புக்காக நீபோட்டுக்கிட்டவேலிய அவனால மீற முடியல அதனாலதான் உன் கிட்ட அவன் இதை சொல்லல, சொன்னா நீ நிச்சயம் விலகிப்போயிருப்ப, நானே உங்கிட்ட நேர்ல பேசலாம்னுதான் உன்ன எங்கவீட்டு கொலுக்கு அழைச்சேன், நீ தனியா வர யோசிப்பேனுதான் நான் ஆஃபீஸ்ல எல்லாத்தையும் அழைச்சேன்!, ஆனா நீ அன்னிக்கு வரல..”

“இங்கப்பாரு உன்னோட அம்மா ஸ்தானத்தில இருந்து சொல்றேன், இது நல்ல முடிவு நீ வாழ வேண்டிய வாழ்கை இன்னும் பாக்கிஇருக்கு, ஹரீஷ்க்கு மனைவியா நீ வரணும், வருண் எனக்குப் பேரனா என் மகனுக்கு மகனா நிச்சயம் இருப்பான், என் மகனுக்கு வாழ்கையைக் கொடுத்த அக்ஷயும் என் மகன் தான்,

அக்ஷய் உன்ன விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான், நீ இப்படி கஷ்டபடுறத அவன் ஒரு நாளும் விரும்பமாட்டான்,  நான் வருண கூட்டிட்டு ஸ்ரீஜா சுனிலோட வீட்டுக்கு போறேன், நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு நல்ல முடிவா எடுங்க!”

“அம்மா..” – சுபா

“ம்ம்.. இப்படி நீ கூப்பிடுறது உண்மைனா, என் மகனோட ஞாயமான விருப்பத்தையும் காதலையும் நீ நிராகரிக்க மாட்ட, ஒரு வேளை நீ இத விருப்ப படாட்டியும் உன்ன நிச்சயம் தனியா விடமாட்டேன், நான் உன் கூடவும் வருண் கூடவும் வந்து இருக்கேன்,  எப்பவும் வருண் என் பேரன் தான், ஹரீஷ் மாதிரி அவனும் எனக்கு முக்கியம்!”

பேசிவிட்டு எழுந்து நடந்த ரேகா, வருணை தூக்கிகொண்டு நடந்தாள்.­

ந்தி மயங்கி இரவின் மடியில் வீழ்ந்துக்கொண்டிருந்தப்பொழுது, கடலின் ஓயாத அலைஓசையினூடே, சிறுவர்கள் விட்ட காகிதகப்பலொன்று, அலைகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது, அந்தக் காகித கப்பல் போன்று, சுபாவின் இதயமும் தத்தளித்துக்கொண்டிருந்தது, சலனமின்றி அவள் அருகே வந்து அமர்ந்தான் ஹரீஷ், அவனுடைய அருகாமையை உணர்ந்தும், ஏதும் பேசாது அமர்ந்திருந்தாள் அவள்,

“சுபா, என்னக் கல்யாணம் செஞ்சுக்றீயா?”

இந்த கேள்விகளுக்கு அவனது முகம் பார்த்தாள், எப்போதும் சிரிக்கும் அவன் கண்களில் மெல்லிய சோகம், அது அவளை கஷ்டப்படுத்தியது.

“மெதுவாக அவளது வலது கையை தன் இடது கைக்குள் பிணைத்துக்கொண்டான் சுபா அதை மறுக்கவில்லை!”

“வாழ்கையில நம்ம துணையை இழந்துட்டா வாழ்கை அங்கேயே முடிஞ்சிடுறது இல்ல, சுபா, உனக்கு அக்ஷயைதான் ரொம்பப் பிடிக்கும்னு எனக்கு தெரியும்,  எனக்கும் உன்ன ரொம்பப்பிடிக்கும், அவனுக்கு கொடுத்த மனசில எனக்கும் கொஞ்சம் இடம் கொடுக்குறீயா,!”

“கொஞ்சமா, ப்ளீஸ்!” அவன் விரல்களை குவித்து காண்பித்த விதத்தில் சுபாவுக்கு சிரிப்பு வந்தது!

ஹப்பா, மேம் இப்பவாவது சிரிச்சீங்களே!

“நான் இன்னும் என் பதில சொல்லலயே!”

“ம்ம், அதான் உன் கண்ணே சொல்லுதே!”

“அவளை வாஞ்சையுடன் பார்த்தான்!”

“தேங்க்ஸ் ஹரீஷ்”

“ஹலோ காதல்ல தேங்க்ஸ் சொல்ல நிறைய வழி இருக்கு இது ரொம்ப ஓல்டு டைப்!” அவன் புன்னகைக்க, அவள் முறைப்பதாய் பாவனை செய்தாள்.

“ஹே, இனி நீயும், குட்டி அக்ஷயையும் என் பொறுப்பு, ஓகே!”

தன் இடது கையை அவள் தோளிலிட்டு அவளை மெதுவாக தன் தோளில் சாய்துக்கொண்டான், வெகு நாளைக்குப்பின் மிகுந்தமன நிம்மதியை உணர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கண்கள் மூடிக்கொண்டாள், ஏறி இறங்கிய அவன் மார்பின் ஊடே வெளியேறிய அந்த மூச்சுக்காற்று அவள் கன்னங்களைத்தடவி இதயத்தை நனைத்தது…ஆம் அது அக்ஷயின் மூச்சுக்காற்று,  தனக்காக துடித்த அந்த இதயம் இன்று மீண்டும் உறு மாறி அவளை நேசிப்பதாக அவளுக்கு தோன்றியது.  கடலின் சத்தத்தின் ஊடே, ஒரே அலைவரிசையில் துடித்த இருவரின் உள்ளமும்மெதுவாக இணைந்தது..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.