(Reading time: 16 - 32 minutes)

“அவ்வளோ பெரிய ஜோக் இல்லை இது!”

“ஆனா எனக்கு இது பெருசுதான்.. உண்மைய சொல்லனும்னா நீ வந்த பிறகுதான் நான் இவ்வளவு சிரிக்கிறேன் சோடாபுட்டி..”

“போதும் ஐஸ்வைச்சது..” என்று சிணுங்கினாலும் அவன் பேச்சுக்கள் போதாது போதாது என்றே பேசிக்கொண்டே நேரத்தை கடத்தினாள் யாழினி.

தமிழுடன் பேசிக்கொண்டே உறங்கியும் போனாள் யாழினி.

“ஹா ஹா .. எப்படி உனக்கு மட்டும் விதம் விதமா ஆசை வருதுடீ..சோடாப்புட்டியில இருந்து உனக்கு பொண்டாட்டின்னு ப்ரொமோஷன் கொடுத்திடவா? அதுவும் நீயே ஆசைப்பட்ட மாதிரி?” புன்னகையுடன் மனதிற்குள் பேசிக்கொண்டான் தமிழ். யாழினியின் பொல்லாத ஆசையும், அதை நிறைவேற்ற நினைத்த தமிழின் தீராத வேட்கையும்தான் அவர்களின் உறவை இன்றுவரை காத்துவருகிறது என்பதை அறிந்தவர் யார்?

ரண்டு நாட்களுக்கு பிறகு, மாலை வேளையில் வீட்டின் முன் பைக் சத்தம் கேட்க யாழினியை அழைத்தார் மோகன்.

“யாழினி.. யாரோ வந்துருக்காங்க..”

“புகழாத்தான் இருக்கும்பா.. நான் போயி பார்க்குறேன்..”.

“ஓய் டார்லிங்.. எப்படி இருக்க?” துள்ளலுடன் வந்தான் புகழ்.

“டேய்.. ஓவரா இல்லையா மதியம் தானே ஆயிஷாவுக்கு புடவை வாங்கனும்னு கூட்டிட்டு போன.. புடவைய கொடுத்துட்டியா என்ன ரியக்ஷன் வந்துச்சு?”

“ஹான்.. அது இன்னும் கொடுக்கல..”

“எப்போ கொடுப்ப..”

“ ஏய் ச்சீ..என்ன நீ வாசல்லயே நிக்க வெச்சு பேசுற? நீ போ நான் என் அப்பாக்கிட்ட பேசணும்”என்றான் புகழ்.

“ஓஹோ.. போங்க சார்.. போங்க..உங்க அப்பாக்கிட்ட செல்லம் கொஞ்சுங்க.. நான் என் சுப்ரஜா அம்மாவுக்கு ஃபோன் பண்ணி கடலை போடுறேன்”என்று ஓடினாள் யாழினி. இப்போதைக்கு அவளை அதிகம் யோசிக்க விடாமல் திசைத்திருப்புவதே நல்லது என்று நினைத்த புகழும் மோகனுடன் பேசிக்கொண்டிருந்தான். வீட்டு உடையை மாற்றிவிட்டு அமர்ந்திருந்தவனை கேள்வியாய் பார்த்தாள் யாழினி.

“என்னடா இன்னைக்கு இங்கயே டேராவா?”

“ஷ்ஷ்ஷ் என்ன கேள்வி இது யாழினி?அவன் இந்த வீட்டு பையன்!” உடனே போர்கொடி பிடித்தார் மோகன்.

“அதில்லப்பா, நைட்டுக்கு சமைக்கனும்ல?அதுக்குத்தான் கேட்டேன்.. சரி நான் சமைக்கிறேன்..” என்றபடி சமையலறைக்குள் ஓடினாள். வழக்கம்போல அவள் அங்கிருந்து சென்றதும் அவளை எண்ணி சிரித்தார் மோகன்.

தோழன் என்றாலும் ஒரு அளவில் நிறுத்தி வைத்துவிட்டு அவரவர் வாழ்க்கையை கவனிக்கும் இக்காலத்தில் குடும்பத்தில் ஒருத்தனாக தான் நடத்தப்படுவதை எண்ணி அகமகிழ்ந்து போனான். அந்த சந்தோஷத்தின் ஆயுள் சிலகாலமே என்று அறிந்திருக்கவில்லை அவன்.

இரவு பதினொரு மணியளவில் மோகன் உறங்க சென்றுவிட யாழினியும் புகழும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். என்னத்தான் நண்பனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாலும் யாழினியின் கண்கள் ஃபோனையே அடிக்கடி பார்த்தன.

“ஏன் தமிழ் இன்னும் ஒரு மெசெஜ் கூட அனுப்பல?” முணுமுணுத்து கொண்டிருந்தாள் யாழினி.

அதை கவனித்தும் கவனிக்காதவன் போல புகழ் இருக்க அவனுக்கு ஆயிஷாவிடம் இருந்து, ஃபோன் வந்தது.

“ என்னது ? என்ன பிரச்சனை..? ஃபோன் ல சொல்லுடா? சரி வரேன்.. யாழினியுமா? இந்த நேரத்துலயா? சரி வரோம்” அவன் டென்ஷனான குரலில் ஒவ்வொரு வசனமாக பேசிட ஆயிஷா என்ன சொல்லியிருப்பாள் என்று யாழினியால் யூகிக்க முடிந்தது.

“ஆயிஷாவுக்கு என்ன ப்ரச்சனை? வா டா போலாம்!”

“ஓய்.. மணி என்னனு பாரு..நீ வர வேணாம்..நான் மட்டும் போயிட்டு வரேன்.”

“லூசா நீ? என்னையும் கூப்பிடுறாங்கன்னா, ஏதோ காரணம் இருக்கும்..போலாம்டா..”

“அப்பா என்ன சொல்லுவாருன்னு தெரியலையே!”

“பார்த்துக்கலாம்..வா” என்று யாழினி அவனை வேகப்படுத்த தனது ப்ளானை மெச்சியபடி அவளை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு விரைந்தான் புகழ்.

அங்கு ஏற்கனவே ஒரு வேனில் ஆயிஷா இருந்தாள்.

“ஆயிஷா, என்னாச்சு?”

“உள்ள வா யாழினி..”

“என்ன?”

“இந்தா இதை பிடி!”

“என்னது இது?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.