(Reading time: 16 - 32 minutes)

“திறந்து பாரேன்!” ஆயிஷா கையில் தந்த பார்சலை திறந்தாள் யாழினி. அன்று காலையில் ஆயிஷாவுக்காக புடவை வாங்கும்போது யாழினிக்கும் ஒரு புடவை பிடித்திருந்தது. ஆனால் அதை அவள் வாங்கவில்லை. அதுதான் இப்போது யாழினியின் கையில் இருந்தது. அப்போதுதான் ஆயிஷாவும் புகழ் வாங்கி தந்த புடவையை அணிந்திருப்பதை கண்டுகொண்டாள் யாழினி.

“ஹேய் என்ன சர்ப்ரைஸ் இது? எனக்கு பெர்த்டே கூட இல்லையே..”

“இது பேச்சலர் பார்ட்டி பேபி”என்று கண்ணடித்தாள் ஆயிஷா.

“வாவ்.. நிஜமாவா?”

“ நிஜமேதான்.. வேன்ல நீ எப்படி புடவை கட்ட போறன்னு தெரியல.. ட்ரை பண்ணி கட்டிட்டு வா..ஹெல்ப் வேணும்னா கூப்பிடு.. நான் வெளில நிக்கிறேன்..”என்று ஆயிஷா வெளியேறினாள்.

ரைமணி நேர போராட்டத்திற்கு பின், அடர்பிங்க் நிற புடவை அணிந்து அப்சரசாக கடற்கரை மணலில் காலை பதித்தாள் யாழினி. புகழ் கையில் கேமராவுடன் அணைத்தையும் பதிவு செய்ய, ஆயிஷா யாழினியின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள்.

இருள் சூழ்ந்திருந்த இடத்தில் முழுநிலவின் ஆட்சியில் என்ன நடக்கிறது என்று புரியாமலேயே யாழினி நடந்தாள்.

“யாழீ 1..2..3..சொல்லு” என்று புகழ் சொல்ல,

“ம்ம்..ஓகே”என்று வியப்பான தொனியில்

“1, 2, 3” என்றாள்.

இருளை பிரித்துகொண்டு அவள் கண்ணெதிரில் வெளச்சம் படர்ந்தது. படகு கப்பலொன்று வண்ண விளக்குகளால் அலங்கறிக்கப்பட்டு இருக்க

“தமிழ் வெட்ஸ் யாழினி”என்று எல் ஈ டீ எழுத்துக்கள் மிளிர அந்த எழுத்துக்களின் கீழ் ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான் தமிழ்.

“தமிழ்…” என்றபடி ஓடி வந்து மூச்சிரைக்க அவனை அணைத்துக்கொண்டாள் யாழினி.

“என்னப்பா இதெல்லாம்?”

“நீதானே ஆசைப்பட்ட உனக்கே தெரியாம கல்யாணம் நடக்கனும்னு..”

“அங்க பாரு, ரிஜிஸ்டரர் அங்கிளை கடத்திட்டு வந்துட்டேன், சாட்சிக்கு புகழ், குமரன், ஆயிஷா… கையெழுத்து போட்டுட்டு அவங்கள கழட்டி விட்டுடலாம்..நீ ஆசைப்பட்ட மாதிரி நம்ம கல்யாணம் நடக்குறப்போ உனக்கு எல்லாமே தமிழ்..தமிழ்.. தமிழ் தான்! சந்தோஷமா?”என்று அவன் கேட்க விழிவிரிய பார்த்தவள் முற்றிலுமாய் அவனுக்குள் லயித்து புதைந்தே போனாள்.

கடலன்னையின் சிரிப்பு சொல்லும்,

ஈரக் காற்றின் முத்தங்கள் சொல்லும்,

நட்பு கொண்ட உள்ளங்களின் உவகை சொல்லும்,

நான் தமிழை மட்டுமே இசைக்கும் யாழென!

புதிதொரு ராகத்தில் தமிழுக்கு மட்டும்கேட்கும் குரலில் பாடினாள் யாழினி. சிரிப்பிற்கும் உற்சாகத்திற்கும் பஞ்சமில்லாத நொடிகள் அவை.

“தமிழ், யாழினி” என கையொப்பமிட்டு சட்டபூர்வமாக இருவரும் கணவர் மனைவியாகினர். புகழ் காணொலி பதிவெடுக்க, ஆயிஷா படங்கள் பிடிக்க,குமரன் மெல்லிசை பாடல்களை ஒளிபரப்பி அந்த சூழ்நிலையை ரம்யமாக்கினான்.

தமிழ்! இறுக்கமானவன்! தனக்கென கோட்பாடுகள் கொண்டவன். சாத்தியம் இல்லாதவைகளை செய்து பார்த்திடும் எண்ணமில்லாதவன்!இப்படி அவனுக்கென பல முகத்திரைகள் இருக்க, அத்தனையும் யாழினியின் மேல் கொண்டுள்ள காதல் கிழித்திருந்தது. தனக்காக அவன் மெனக்கட்டு இருப்பதை அவளால் உணர முடிந்தது.

சுற்றி நண்பர்கள் இருந்தும் அதை சட்டை செய்யாமல் தமிழின் கன்னதில் அழுந்த இதழ் பதித்தாள் யாழினி.

“ஹப்பா.. இந்த கிஸ் காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்”என்று உற்சாகமாய் மொழிந்தான் குமரன். ஓங்கி உரைத்த அவனது வசனம் அனைவரையுமே திடுக்கிட வைத்தது.

“என்னடா இது? த்தூ..”என்று புகழ் கேலி செய்ய,

“டேய் மச்சான்.. நீ கூடவா என்னை தப்பா நினைச்சிட்ட? ஒரு சிட்டிவெஷன் சாங்க் போடனும்.. அதுக்கு ஒரு முத்தம் தேவைபடுதுன்னு அப்படி சொன்னேன்.. யாழினி ஒன்ஸ் மோர் ப்ளீஸ்”என்று குமரன் சொல்ல அவள் இடதும் வலதும் மறுப்பாக தலையசைத்தாள்.

தமிழ் அவனது மறுக்கன்னத்தை ஆசையாய் காட்டிட, யாழினியும் கன்னங்கள் செம்மயுற முத்தமொன்றை பதிக்க, பாடல் தொடங்கியது. இப்பாடலோடு நாமும் டாட்டா சொல்லிப்போம் ப்ரண்ட்ஸ்.

நீ முத்தமொன்று கொடுத்தால்

முத்தமிழ்!

நீ வெட்கப்பட்டு சிரித்தால்

செந்தமிழ்!

நீ பேசிய வார்த்தைகள்

பைந்தமிழ்!

ஓஹோஹோஓ..

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.