(Reading time: 11 - 22 minutes)

காலையில் கோலபோட்டி முடிந்து இருக்க, தற்போது சிறு குழந்தைகளுக்கு என விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது.

அதில் விளையாடுபவர்களை உற்சாகபடுத்திக் கொண்டு இருந்தனர். அப்போதுதான் செந்தில் வந்தான்.

“வாலே.. வா.. என்ன உன் மாமனார் வீட்டு ஆளுங்க முன்னாடி படம் போட்டு முடிச்சிட்டியா ?” என்று வினவ

“நீங்க வேறேலே.. என் கஷ்டம் எவனுக்கு புரியுது ?”

செழியன் அவன் அருகில் ரகசியமாக “என்ன ..லே.. தங்கச்சி.. கிட்டே  எஸ்கேப்  ஆகி வரியா..? “

“ஆமாமா.. காலையிலே கிளம்பினா, புது இடத்திலே என்னிய தனியா விட்டுட்டு போறீகளேன்னு.. புலம்பல்.. இத்தனைக்கும் இவ பொறந்து வளர்ந்த ஊரு தானே.. அவள சமாளிச்சுட்டு வாரதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிட்டு..”

இங்கே செந்தில் சொல்லிக் கொண்டு இருக்க, செழியனின் மனதில், ஐயோ மலர் எப்படி இதை எல்லாம் சமாளிப்பாலோ தெரியலையே .. என்ற எண்ணம் அவனுக்குள் ஓடியது..

செந்தில் அவன் முதுகில் அடிக்கவே “என்னடா “ என்றான்..

“நீ எந்த உலகத்துலே இருக்கே.. கூப்பிட கூப்பிட காதுலே வாங்காம இருக்கியே.. ?”

அவனின் மற்றொரு நண்பன் “இந்தவாட்டி இவம் வந்ததுலேர்ந்து இப்படிதான் இருக்கான்.. “ என்று போட்டுக் கொடுக்க,

மற்றவர்கள் அவனிடம் என்ன விஷயம் என்று விசாரிக்க ஆர்மபிதார்கள்.. எல்லோரையும் சமாளிப்பதற்குள் விழி பிதுங்கி விட்டது.

இங்கே மற்ற போட்டிகள் எல்லாம் முடிந்து எல்லோரையும் அனுப்பிய பின், மாலையில் வீட்டு பெண்களுக்கென போட்டிகள் வைத்தார்கள்,.. அவர்கள் அந்த நேரம் தான் சற்று ஓய்வாக இருப்பார்கள்..

செழியன் அந்த இடைவெளியில் தன் வீட்டிற்கு சென்று வந்து விடலாம் என்று போனான்.

வீட்டில் அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா எல்லோரும் இருக்க புதிதாக இன்னொரு மனிதரும் இருந்தார்.

உள்ளே வந்தவன் எல்லோரையும் வரவேற்று விட்டு புதிதாக வந்தவரை பார்த்து “வாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போனான்..

செழியனின் பெரியப்பா “ தம்பி.. உக்கருவே.. கொஞ்சம் பேசணும் “ என,

அவனும் ஏதோ சொல்ல போகிறார் என்று எண்ணி அமர்ந்தான்.

அப்போது செழியனின் அப்பா “ஐயா.. பார்த்துகோங்க .. இவம்தான் செழியன்.. என் பையன்.. திருச்சிலே காலேஜ் வாத்தியாரா இருக்கான்.. அவன் சம்பளம் , மத்த விவரம் எல்லாம் உங்ககிட்டே கொடுத்த பேப்பர்லே இருக்கு.. நீங்கதான் பொண்ணு வீட்டுக்கரங்கள பார்த்து பேசி முடிச்சு வைக்கணும்.. இன்னிக்கு தை பொறந்தாச்சு.. கிழமையும் நல்லா  இருக்கு.. நாளைக்குன்னா கரிநாளா இருக்கு.. அதும் பின்னாடி.. பையன் வேலை இருக்குன்னு கிளம்பினாலும் உண்டு.. அதான் உங்கள இன்னைக்கே வர சொல்லி பேசிக்க்கலாம்னு சொன்னேன்.. என் பக்கத்துலே எங்க அண்ணன் , தம்பி சாட்சியா இருக்காங்க.. உங்ககிட்டே பேசினதுக்கு.. நீங்கதான் இனிமேல் பொண்ணு வீட்டு சைடுலே பேசி முடிவு சொல்லணும் “ என்று நீளமாக பேசி முடிக்க,

செழியன் அவன் அப்பாவின் சாமர்த்தியத்தை கண்டு ஆடிப் போயிருந்தான்.. அவர் சுதாரிப்பதற்குள் நாம் ஊரை விட்டு கிளம்பி விட வேண்டும் என்று எண்ணியிருக்க, என்னை  சுதாரிக்க விடாமல் அவர் ஆளை வரவழைத்து விட்டாரே.. இருந்தாலும் தன் முயற்சியை விடக் கூடாது என்று எண்ணி

“அப்பா “ என்று அழைக்க,  அவர் முகத்தில் எதுவாக இருந்தாலும் பிறகு பேசலாம் என்ற பாவனை தெரிந்தது.

புதிதாக வந்து இருந்தவர் “சிவா ஐயா.. பொண்ணு வீட்டுக்காரக பங்குனி உத்திரத்தப்போ வருஷ வருஷம் வருவாங்க.. வந்து சாமி கும்பிட்டு போயிடுவாக.. நாங்க யாரும் இதுவரைக்கும் விலாசம் எல்லாம் விசாரிச்சு வச்சிகிடல.. அதான் இந்த முறை அவுங்க வாரப்போ நீங்களும் வார மாதிரி பார்த்துகிடுங்க.. நான் அவங்ககிட்டே அப்போ பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்.. நீங்க மேற்கொண்டு ஆக வேண்டியத பேசுங்க.. “ என்று கூறி விட்டு மீண்டும் ஒரு முறை அவனை நன்றாக பார்த்து விட்டு கிளம்பினார்.

அவர் கிளம்பவும் “ ஏம்பா.. நாதான் இன்னும் ஒரு ஆறு மாசம் போகட்டும்னு சொல்லிட்டு இருக்கேன்லே.. பொறவு ஏன் தரகர எல்லாம் வர சொல்லி படுத்துறீங்க..?”

“அவர் தரகர் இல்லலே.. பொண்ணு வீட்டுக்கு சொந்தக்காரர்.. “

“என்னது... பொண்ணு வீடா? யாரைக் கேட்டு இது எல்லாம் ஏற்பாடு பண்ணீங்க.. ? பொண்ணு விவரம், போட்டோ எதுவுமே சொல்லாமல் திடு திப்புன்னு அவங்க வீட்டு ஆளுங்கள வர சொல்லிருக்கீங்க..”

“எனக்கும், ஏன் அவருக்குமே அந்த விவரம் எல்லாம் தெரியாது.. பொண்ணோட ஆச்சிய தான் அவருக்கு தெரியும்.. அவங்க கிட்டே பேசிட்டு மத்த ஏற்பாடு பண்ணனும்..”

இப்போது அவர் அண்ணன்

“ஏம்பா. சிவம்.. இது என்ன வேலை.. ? இப்படி பொண்ண பத்தி எதுவுமே தெரியாமே அந்த பொண்ணதான் மருமக ஆக்கணும்னு என்ன தலை எழுத்து? நம்ம பையனுக்கு என்ன குறைச்ச ? கொஞ்சம் யோசிச்சு செய்ய கூடாதா ?”

“இல்லன்னே.. இதிலே எந்த மறுப்பும் ஏத்துகிட மாட்டேன்.. அந்த பொண்ணு எப்படி இருந்தாலும் , அவதான் நம்ம செழியன் பொஞ்சாதி.. “

செழியானோ “பெரியப்பா... இது என் வாழ்க்கை பிரச்சினை.. என்ன ஆனாலும் சரி.. நான் என் மனசுக்கு பிடிச்ச பொண்ணதான் கல்யாணம் கட்டிப்பேன்.. உங்க தம்பி கிட்டே சொல்லி வைங்க.. “ என்றவன் விடு விடுவென்று தன் அறைக்கு சென்று விட்டான். 

 

தொடரும்!

Episode # 24

Episode # 26

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.