(Reading time: 13 - 25 minutes)

‘அவனுக்கு என்னை பிடிக்குதோ இல்லையோ, எனக்கு அவனை பிடிக்கும்.’ இப்படி, எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லா பிடிவாதமான நேசம் எப்படி சாத்தியம்??? வியப்பாய் இருந்தது அவனுக்கு. கூட்டம் அதிகரித்திருந்தது. அவள் கண்ணிலேயே தென்படவில்லை.

‘அனும்மா எங்கே இருக்கே நீ???

‘ஹரிஷ் கேட்ச்!!!’ ரகுவின் அழைப்பு. தாவினான் பந்தை நோக்கி. அடுத்த மூன்றாம் நொடி பந்து அவன் கைகளில். வர்ணனையாளர்கள் அவனது கேட்சை புகழ்ந்துக்கொண்டிருக்க ரசிகர்கள் திக்குமுக்காடிக்கொண்டிருக்க  அவளையே தேடிக்கொண்டே இருந்தான் அவன்.

தள்ளாட ஆரம்பித்தது தென் ஆப்பிரிக்க அணி. அடுத்து ரகுவிற்கு இன்னொரு விக்கெட். அடுத்த மூன்று பந்துகளில் ரகுவும் இவனும் சேர்ந்து நிகழ்த்திய ரன் அவுட்.

இன்னும் ஒரே விக்கெட் மீதம். பந்து போடுவது அவனது முறை. இந்த ஓவரில் இந்தியா ஜெயித்து விடுமென பெரிய நம்பிக்கை பிறந்தது எல்லாரிடத்திலும்.

‘எங்கே அவள்??? இருக்கிறாளா இல்லையா??? தேடிக்கொண்டே பந்தை வாங்கிக்கொண்டான் ஹரிஷ். ‘நான் ஜெயிப்பதை அவள் பார்க்க வேண்டும்!!!’

முதல் பந்து!!! இவனுக்கு கவனச்சிதறல்!!! ‘சிக்ஸர்’ பறந்து சென்று விழுந்தது பந்து.

‘நோ!!!’ தலையை குலுக்கிக்கொண்டான் இவன். என்னவாயிற்று அவளுக்கு. உள்ளுணர்வில் ஏதோ ஒரு உறுத்தல்!!!

இரண்டாவது பந்து. இரண்டு ரன்கள் கிடைத்தது எதிரணிக்கு.

‘யூ கேன் டூ இட் ஹரிஷ்’  இப்போது கூட்டம் கூவ ஆரம்பித்தது. அங்கங்கே இந்திய கொடிகள் பறந்துக்கொண்டிருக்க அவளுடைய அட்டை மட்டும் உயர்ந்தது டிவியில் தூக்கிகொண்டிருப்பது அவளில்லை!!! ‘எங்கே அவள்???’ பதறியது இவனுக்கு.

‘மூன்றாவது பந்து!!!

ஃபுல் டாஸ் பந்து. அழகாய் பந்து பேட்டின் மீது வந்து விழ, எல்லா ஆட்டக்காரர்களுக்கும் எழும் அதே உந்துதல். ஆறு ரன்களை குவிக்க ஒரு முயற்சி. பந்து எழும்பியது. மேலே. ரகு ஓடத்துவங்கினான் அதை நோக்கி. இதோ இதோ பிடிக்க போகிறான். ஜெயிக்க போகிறது பாரதம். அரங்கம் முழுவதும் சில நொடி நிசப்தம்.

‘அனும்மா நீ எங்கே இருக்கே??? உன்னை ஹர்ட் பண்ணது எல்லாத்துக்கும் சாரி. லவ் யூ அனும்மா. நான் ஜெயிக்கறதை நீ பார்க்கணும். உன் சந்தோஷத்தை நான் பார்க்கணும். வந்திடு அனும்மா ப்ளீஸ்!!!’

 

தொடரும்......

Episode 03

Episode 05

{kunena_discuss:1147}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.