(Reading time: 26 - 51 minutes)

20. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ரண்டு நாட்கள் அந்த சொகுசு யாட்சிலேயே, பசித்த பொழுது சமைத்து, சாப்பிட்டு, நினைத்த பொழுது குளித்து, அந்த யாட்சில், கடல் நீரை குடிநீராக மாற்றும் இயந்திரம் இருந்ததால் தண்ணீருக்கு ஒரு பஞ்சமும் இல்லாமல் இருந்தது. தூக்கம் வந்த பொழுது தூங்கி, மற்ற முக்கிய வேலைகளும் செவ்வனே நடந்தேறியது .

ஒரு வழியாக யாட்ச் பயணத்தை முடித்து வீடு வந்து சேர்ந்தனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே, ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் சம்யுக்தா.

“மா , எதுக்குமா இதெல்லாம். வெளிய போய் வந்தாலே ஒவ்வொரு முறையும் ஆரத்தி எடுப்பிங்களா? என இந்தர் கேட்க..........

“உனக்கு ஒன்னும் தெரியாது, இந்தர் கண்ணா. ஊர் கண்ணெல்லாம் உங்க ரெண்டு பேர் மேல தான்.  சித்தி கூட சொன்னா, உங்க கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தத்தை பார்த்து வியந்து போயட்டங்கன்னு. அதனால் தான் என்னவோ உங்க கல்யாண முதல் நாளில் இருந்தே கொஞ்சம் தடங்கலாக வந்தது. இனிமேல் எல்லாம் நல்லபடி நடக்கணும்.” என கூறியபடி உள்ளே நகர்ந்தார்.

“இனிமேல் தான் எல்லாம் நடக்கணுமாடா? என்று கேட்டு பூஜாவை வெட்கப்பட வைத்து உள்ளே அழைத்து சென்றான் இந்தர்.

இரவு உணவில் நால்வரும் மேசையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த பொழுது சம்யுக்தாவே ஆரம்பித்தார். “இந்தர் கண்ணா, நம்ம சொந்தங்கள் எல்லாரும், உங்க ரெண்டு பேரை விருந்துக்கு அழைக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க முதலில் எங்க போக போறீங்க”

“மா, ரெண்டு வாரம் எங்கேயும் போக முடியாது.” என இந்தர் பதில் கூற பூஜாவின் முகம் தான் சுருங்கியது. மறுபடி வேலை என்று ஆரம்பித்தால் தன்னை மறந்து விடுவானே என்று தான்.

“இந்தர் கண்ணா, அதுக்குள்ள வேலையை இழுத்து போட்டுக்காத.” என சம்யுக்தா சலித்துக் கொள்ள.........

“சம்யு, கூல்டா, அவன் என்ன சொல்ல வர்றான் என்று முழுவதும் கேட்டு, அப்புறம் சலித்துக் கொள்ளலாம்” என அர்ஜுன் இதை புகுந்தார்.

“சரியா சொன்னிங்கப்பா, மா , நாங்க ரென்று பேரும், சுவிஸ் போயிட்டு அப்படியே பாரிஸ் போயிட்டு வரலாம் என்று இருக்கோம், தேனிலவு பயணமா.” என கூறி பூஜாவின் முகத்தைப் பார்த்தான். உடனே எண்ணையில் போட்ட பால் பூரியாய்  பூஜாவின் முகம் பூரித்து விட்டது சந்தோஷத்தில்.

“அப்போ சித்தி வீட்டில் விருந்து முடிச்சுடுங்க, ஒரே வேலையா போய்டும்.” அதிலும் தனக்கு சாதகமாக ஒரு ஐடியாவை முன் மொழிந்தார் சம்யு.........

“மா, சித்தி வீட்டுக்கு போயிட்டு வர்றேன். ஆனா இப்போ சித்தியிடம் சொல்லாதிங்க. நான் என்னோட சுவிஸ் பயணம் முடிந்து புறப்படும் நாள் தான் அங்கு போவேன். அதுவரை அங்குள்ள எனது நண்பனின் ஏரிக் கரையில் உள்ள விடுதியில்  தான் தங்க போகிறோம்.” என கூறி அவரது யோசனைக்கு முற்றுப் புள்ளி வைத்தான் இந்தர்.

“சரி எப்போ கிளம்ப போறீங்க? என அர்ஜுன் கேட்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

“நாளைக்கு அப்பா” என அவன் கூறிய பொழுது வியந்து பார்த்த மூவரிடமும் , “எங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே, ஷிங்கன் விசா இருப்பதால், டிக்கெட் மட்டும் தான் எடுக்க வேண்டி இருந்தது. நேற்றே அதுவும் எடுத்தாச்சு.” என இந்தர் கூறி முடித்தான்.

“சரி இந்தர் கண்ணா, பத்திரமா போயிட்டு வாங்க.” என சம்யுக்தாவும் கூறினார்.

வர்களது படுக்கை அறை தனிமையில் “என்னிடம் ஏன் நேற்றே சொல்லவில்லை இந்தர் இந்த பயணம் பற்றி.” என பூஜா கேட்க.......

“உனக்கு ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியத்தை  தரணும்ன்னு தாண்டா. உன்னிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்திருந்தால், நான் இப்போ சொன்ன பொழுது, உனது கண்ணில் தெரிந்ததே ஒரு மகிழ்ச்சி, அதை பார்த்திருக்க முடியாது. அதனால் தான் சொல்லவில்லை”.

“நீங்க என்ன செய்தாலும் ஒரு காரணம் சரியாய் சொல்லிடறீங்க ஜித்து”

“சரி இப்படியே பேசி நேரத்தை வீணாக்காம போய் உடைகளை பெட்டியில் அடுக்கும் வேலையை பார். இல்லை என்றால் அங்கு யாட்சில் இருந்த உடைகள் தான் அங்கும் இருக்கும்.” என கூறி பூஜாவை பதற வைத்தான் இந்தர்.

பூஜாவும் பதறிப் போய் அவளது உடைகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள். இங்குள்ள வெப்ப நிலைக்கு எதோ அந்த அரை குரை ஆடைகளில் சமாளித்து விட்டாள். ஆனால் அங்குள்ள குளிருக்கு, நினைத்து பார்க்கவே முடியவில்லை பூஜாவால்.

அவளுக்கு வேண்டிய சாமான்களை அடுக்கி, பின் அவனது சாமான்களை அடுக்கும் பொழுது, உதவி செய்கிறேன் பேர்வழி என்று அவன் அடித்த லூட்டியில் பெட்டியை அடுக்கி முடிக்கவே நள்ளிரவானது.

றுநாள் காலை அர்ஜுன், சம்யுவிடம் ஆசி பெற்று கிளம்பினர் இருவரும். விமான நிலையத்தை அடைந்து, ஜுரிச் செல்லும் விமானத்தில் ஏறினர். பத்து மணி நேர விமான பயணத்தில் நேரம் எப்படி போனது என்று தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டே வந்தனர், நடுநடுவே இந்தரின் குறும்புகளுடன் சேர்த்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.