(Reading time: 26 - 51 minutes)

“வேண்டாம் குழலி, அவர்கள் இங்கு வந்து பார்க்கும் பொழுது, நாம் இங்கே இல்லை என்றால் அவர்கள் நம்மை தேடும்படி ஆகிவிடும், நாம் சிறிது நேரம் இங்கேயே காத்திருப்போம்” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அதிக மன அழுத்தத்தில் இருந்தது என்னவோ பூஜா தான்.

நேரம் செல்ல செல்ல, தலையே வெடிக்கும் போல் இருந்தது பூஜாவிற்கு. கால் மணி நேரம் கழிவதற்குள், கால் நூற்றாண்டே கடந்தது போல் இருந்தது. அணைத்து துன்பத்திற்கும் விடிவு காலமாக இருவரும் சட்டை எல்லாம் கசங்கி, அபிக்கு சில இடத்தில சட்டை கிழிந்து வேறு இருந்தது. மக்கள் எல்லோரும் குண்டு வெடித்த பின் வாயிலை நோக்கி ஓட, இவர்கள் இருவர் மட்டும் உள்ளே இருந்த பூஜா, குழலியை நோக்கி வந்ததால், வெளியே ஓடும் கூடத்தை எதிர்த்து உள் நோக்கி வந்ததால் இவர்களது சட்டை கசங்கி, அபியின் சட்டை ஓடிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கைப்பையில் சிக்கி கழிந்தும் போனது.

ஒரு வழியாக இவர்கள் இருவரும் எங்கும் ஓடாமல் இந்தர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்ததால் இவர்களை எங்கும் தேடும் வேலை மிச்சமானது. பூஜாவின் முகத்தை பார்த்துக் கொண்டே வந்த இந்தர் “பூஜா ஆர் யூ ஓகேடா” என்று கேட்டபடி அருகில் வரவும் அது வரை இருந்த தைரியம் எல்லாம் காற்றில் பறக்க அவன் மீதே மயங்கி சரிந்தாள் பூஜா. 

இவ்வளவு கூட்டத்திலும் கையில் இருந்த தண்ணிர் பாட்டிலை கிழே விழாமல் கொண்டு வந்த அபி, அதிலிருந்து உடனே சிறிது தண்ணிரை எடுத்து பூஜாவின் முகத்தில் தெளிக்க, மெல்ல கண் விழித்தாள் பூஜா.

கண் திறந்ததும் இந்தரின் அணைப்பில் இருப்பதை உணர்ந்து, கண்ணில் நீர் வழிய அவனை இருக்க அணைத்து “ஐ லவ் யூ ஜித்து” என்றாள்.

“மீ டூ டா “ என்ற பொழுது இந்தரின் கண்களும் சிறிது கலங்கித் தான் இருந்தது.

“உனக்கெல்லாம் இப்படி மயக்கம் வறாதா” என்று ஏக்கமாக குழலியைப் பார்த்து கேட்டான் அபி..........

“உங்களைப் பார்த்து மயக்கம் எல்லாம் வரலை அபி, ஆனால் தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு, ஹீரோ தனது கோட்டை கழட்டிக் கொடுப்பரே அது போல் உங்களுக்கு எனது துப்பட்டாவை தான் கழட்டிக் கொடுக்க தோன்றியது” என குழலி கூறியதை கேட்டு எழுந்த சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் ஆனது.

“இதுவே தமிழ் சினிமாவாக இருந்திருந்தால், பூஜா மயக்கம் போட்டு விழுந்ததற்கு, இங்கு முதல் உதவி செய்து கொண்டிருக்கும் ஒரு டாக்டர் வந்து பூஜாவின் கையை பிடித்து பல்ஸ் பார்த்தே, வாழ்த்துக்கள் சார், உங்க மனைவி கர்ப்பமாக இருக்கார் என்று கூறி இருப்பார்” என்று இந்தர் சொல்லி முடித்த பொழுது மறுபடி ஒரு சிரிப்பலை எழுந்தது.

மறுநாள் அனைவரும் அவரவர் ஊருக்கு கிளம்ப அபியும், குழலியும் தான் சிறிது ஏக்கமாக இருந்தனர். சம்யுக்தா இருவரையும் அழைத்து “இரண்டு வருடம் அவரவர் வேலை மட்டும் பாருங்கள் அதன் பின் எல்லாம் சுபமே” என்று கூறி விடை பெற்றார்.

இந்தர், பூஜாவும் தங்களது பூலோக சொர்க்கமான மால்டிவ்சை நோக்கி பயணமாகினர்.

NAU

எல்லாம் சுபமே

Episode 19

நன்றி, நன்றி நன்றி. முதலி சில்சி குழுவிற்கு பெரிய நன்றி. எனது முதல் கதையை பெரிய மனது வைத்து அவர்களது தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி. அடுத்து கடந்த 19 பகுதிகளை படித்து அதற்கு விருப்பம் போட்டு, விமர்சனமும் எழுதிய அணைத்து வாசகர்களுக்கும் பெரிய நன்றி.

சிறப்பு நன்றி எனது கடந்த 19 அத்தியாதிற்கும் விமர்சனம் எழுதிய அன்பு தோழி Adharv Jo விற்கு.

அடுத்த கதையை ஒரு மாதத்திற்கு பின் எழுத நினைத்துள்ளேன், அதற்கு தங்கள் கருத்துகளை வேண்டுகிறேன்.

நன்றிகளுடன்

பூஜா

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.