(Reading time: 17 - 33 minutes)

“யாழினி, நீ நம்ம காலேஜ்ல ஃபேரவல் டே அன்னைக்கு ஒரு ஸ்பீச் கொடுத்தியே ஞாபகம் இருக்கா?”

“இருக்கே..அதுக்கென்னடி?”

“அதுக்கென்னடீயா? அதை யூடியுப்பில் அப்லோட் பண்ணாங்கனு உனக்கு தெரியாதா டீ?நம்மகாலேஜ் இல்ல மத்த காலேஜ் மாணவர்கள் கூட உனக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்க.”

“வாவ் நிஜமாவா?”

“அது மட்டும் இல்ல, நீ பேசின ஸ்க்ரிப்ட்டு உன் சொந்த எழுத்துன்னு அதுல விவரம் சேர்த்து இருந்தாங்க. பிரிவெல்லாம் பிரிவல்லனு நீ சொன்ன கவிதைக்கு செம்ம ரெஸ்பொன்ஸ் டீ.. கலக்கிட்ட.. கமெண்ட்ஸ் படிச்சு பாரேன்.. உனக்கு கிடைச்ச புகழில் உலகத்தையே மறந்துடுவே!”என்றாள் சமீரா ஆர்வம் மிகுந்த குரலில்.

“என் உலகத்துல நான் புகழை உயர்த்தி வைச்சதே இல்லைடீ.. புகழ் எனக்கு நிரந்தரம் இல்லை..”என்றாள் யாழினி.

“ஓஹோ..அப்போமேடம்கு லவ்வு எல்லாம் தமிழ் மேலதான் ..அப்படித்தானே?” என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டு கேலி செய்தாள் சமீரா. சட்டென சிடுமூஞ்சி தமிழ் காதல் மன்னனாக கண் சிமிட்டுவதுபோல கற்பனை செய்தாள் யாழினி.

அதற்குள், யாரோ கைத்தட்டும் சத்தம் கேட்க தூக்கி வாரி போட எழுந்தாள் யாழினி. எதிரில் நின்றவன் புகழ்.

“ஷபா..நீதானா?”என்று அவனைப் பார்த்து சொன்னவள் சமீராவிடமிருந்து ஃபோனில் விடைபெற்றுக்கொண்டாள்.

விழிகள் சிவந்திருக்க, யாழினியை எரித்து விடுவது போல பார்த்தான் புகழ்.

“என்னடா முகமே சரி இல்லை ? ரொம்ப அலைச்சலா?இரு காஃபி கொண்டு வரேன்”என்று அவள் நகர எத்தனிக்க, கை உயர்த்தி அவளை தடுத்தான் புகழ்.

“ஒன்னும் அவசியமில்லை.. ! சோ உன் லைஃப்ல புகழ் நிரந்தரமில்லாதவன்.. தமிழ் தான் எல்லாமே! அப்படித்தானே?” உருமும் குரலில் கேட்டான் புகழ். ஒன்றுமே புரியாதவளாக அவனை பார்த்தாள் யாழினி.

“என்னடா சொல்லுற?”

“இப்போத்தானே ஃபோனில் பேசின? அதான் என் காதுல தெளிவா விழுந்துச்சே.. அதுக்குள்ள உனக்கு மறந்துபோச்சா?”

“நான்?? ஃபோன்ல.. ஓ அதுவா? லூசு அது நீ இல்லை..”

“ஆமா நான் லூசுதான் ..எப்பவுமே உனக்குத்தான் முதலிடம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் பாரு லூசுதான் நானு..”

“டேய் ..என்னை பேச விடுடா?”

“என்ன பேச போற?என்ன பேசிஎன்னை ஏமாத்த போற?”

“ஏமாத்த போறேனா? நான் என்னடா ஏமாத்துவேன்!”

“ஏன்,இதுவரைக்கும் என்னை நீ ஏமாத்தலயா? ஆரம்பத்தில் இருந்தே எனக்கு தமிழை சுத்தமா எனக்கு பிடிக்கல.. அது உனக்கும் தெரியும். தெரிஞ்சும் அவன்கூட பழகினது ஏமாத்துவேலை இல்லையா? நான் ஆயிஷாகூட கன்னியாகுமரி போயிட்டு வரும்போது நீ மொத்தமா தமிழின் காதலியாகவே இருந்தியே அது ஏமாத்து வேலை இல்லையா? நான் சம்மதம் சொல்ல மாட்டேன்னு தெரிஞ்சுகிட்டு எப்போ பார்த்தாலும் சோகமா அழுது அழுதே என் முடிவை நானே மாத்துற மாதிரி பண்ணியே அது ஏமாத்து வேலை இல்லையா?”

“புகழ்..உனக்கு என்னமோ ஆச்சு.. நீ பேசுறதே சரியா இல்லை.. நீ என் புகழ் தானானு சந்தேகமா இருக்கு?”

“ஹா..கண்ணுக்கு எல்லாமே தமிழாகத்தான் தெரியுறப்போ என்னைக்கண்டா உனக்கு சந்தேகம் தான்மா வரும்!”

“ச்ச.. தப்பா பேசாத புகழ்..நீ என் நண்பன், தமிழ் என் லைஃப் பார்ட்னர் ..ரெண்டும் வேற வேற..உன் இடத்திற்கு தமிழோ அவர் இடத்திற்கு நீயோபோக முடியாது!”

“தமிழ் இடத்துலஇருக்கனும்னு நான் எப்பவுமேநினைக்கல..ஆனா என் இட்த்தை நீ எப்படி தமிழுக்கு தரலாம்?”

“நான் எப்போடா தந்தேன்..?”

“அதான் ஃபோன்ல சொன்னியே..எல்லாமே தமிழ்தான் ..அவன் போதும்னு..”

“புகழ் இது எல்லாமே தேவையில்லாத வாதம்.. கொஞ்சம் இறங்கிவா” என்றாள் யாழினி துவண்டுவிட்ட குரலில்.அவள் கொஞ்சம்முகம்  வாடினாலேயே தோற்று போய் விட்டுத்தரும் நண்பன் அவன் விடாமல் சண்டை ப்பிடித்தான்..

வாக்குவாதம் முற்றி போன நிலையில், “புகழ் உன்ன கேட்காம நான் எதுவும் பண்ணல.. உன்னை ஒதுக்கி யாரையும் நான் முன்னிறுத்தல. உனக்கு தமிழை இந்த அளவுக்கு பிடிக்காதுன்னு ஆரம்பத்திலேயே நீ சொல்லி சண்டை போட்டிருந்தால், ஒருவேளை உனக்காக நான் காதலும் வேணாம் ஒன்னுமே வேணாம்னு இருந்துருப்பேன்..ஆனா இப்போ என்னால தமிழை விட முடியாது..” என்றுதீர்மானமாக சொன்னாள் யாழினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.