(Reading time: 19 - 37 minutes)

“சரிப்பா..” .. என்றபடி கிளம்பினான்.

சரியாக ஐந்தரை மணிக்கு வந்து சேர்ந்தவன் , மற்றவர்கள் வருவதற்காக காத்து இருந்தான்.

மற்ற டிபார்ட்மெண்ட் பேராசிரியர்கள் வர ஆரம்பித்து இருக்க, அவர்களோடு பேசிக் கொண்டு தன்னவளின் வருகைக்காக காத்து இருந்தான்.

செழியன் வந்த சற்று நேரத்தில் செந்திலும் தன் மனைவியோடு வர, இவர்கள் டிபார்ட்மெண்ட் வளர்மதியும் தன் பையனுடன் வந்தார். அவர் மகன் தற்போது பிளஸ் ஒன் என்பதால் எக்ஸாமிற்கு முன் சற்று ரெப்ரெஷ் ஆக இருக்கட்டும் என்று அவர் பையனை அழைத்து வந்து இருந்தார்.

செந்தில் மனைவி வளர்மதியோடும் அவர் மகனோடும் பேசிக் கொண்டு இருக்க, செந்திலும் செழியனும் சற்று தூரத்தில் அவர்கள் எச்.ஓ. டி யோடு பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“என்னப்பா.. செழியா.. மலர் எப்போ வரேன்னு சொன்னாங்க.. ? வீட்டில் ஒன்னும் பிரச்சினை இல்லையே ?”

“இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாங்க சார்.. ஆனால் நேத்து என்னைய ஏன் கோர்த்து விட்டீங்க.. அவங்க வீட்டில் தேவைனா பேச சொல்லி..? “

“நீ என்னப்பா இப்படி கேட்டுட்ட..? நான் தலைய கொடுத்துட்டு அப்புறம் மாத்து வாங்குறது யார்? உன் வாய் சாமர்த்தியம் தான் பிபிசி வரைக்கும் பரவுதே... நீ ஈஸியா சமாளிச்சுடுவே.. அப்படின்ற தைரியம்தான்.”

“என்னை பார்த்தா அப்படியா தெரியுது... ஐ அம் கிரீன் மண்ணு.. யு நோ .. “

“யாரு.. நீயி.. இத அந்த கிரீன் மண்ணு கூட நம்பாதுடா... “

செந்திலும் சேர்ந்து கொண்டு “சார்.. சரியா சொன்னீங்க.. இந்த மில்க் பாய் லுக் மட்டும் நம்பவே கூடாது.. உள்ளுக்குள்ளே என்ன மிக்ஸ் பண்ணி வச்சுருக்கானு.. கண்டு பிடிக்கவே முடியாது..”

“டேய்.. அடங்குரியா.. ரொம்ப வாலாட்டின.. உன் வண்டவாளம் எல்லாம் இப்போவே லைவ் டெலிகாஸ்ட் ஆயிடும் .. நியாபகம் வச்சிக்கோ..”

“விடுடா.. விடுடா.  நண்பன்டா..”

“உங்க அலும்பு அடங்கவே அடங்காது.. “ என்று சிரித்த எச்.ஓ.டி..

“செழியா.. மலர் வீட்டிலே பேச வேண்டி இருந்துதா.. ? எதுவும் கேட்டியா..?’”

“இல்லை.. சார்.. அவங்களே கேட்டுடாங்க.. “

“ஒன்னும் பிரச்சினை இல்லையே..”

“அவங்க பாட்டி தான் கொஞ்சம் தயங்கினாங்க போலே.. அப்புறம் ஓகே சொல்லிடாங்களாம்..”

“ஒஹ்.. நம்ம கூட முதல் தடவையா டூர் வரதுனாலே யோசிக்கிறாங்களோ.. என்னவோ..? அவங்க வீட்டிலே யாரையாவது கூட்டிட்டு வர சொல்ல வேண்டியதுதானே..?”

“நான் கூட கேட்டேன் சார்.. அவங்க பாட்டியவே கூட்டிட்டு வரலாமேன்னு.. அவங்க அப்பா லீவ் போட முடியாதாம்.. சோ வீட்டிலே பாட்டிக்காக அம்மா இருக்கணும் . அதோட பாட்டிக்கு ட்ராவெல் ஒத்துக்காது போலே.. இது எல்லாம் யோசிச்சுதான் தயங்கிருக்காங்க.. அப்புறம் எப்படியோ கேட்டுட்டு வரேன்னுட்டாங்க..”

“ரொம்ப நல்லது.. இல்லைனா நம்ம டிபார்ட்மெண்ட்லே அவங்க மட்டும் மிஸ் ஆகி இருப்பாங்க..”

“ஆமா சார்.. “

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே மலர் வந்துவிட, அவளை கண்ட எச்.ஓ.டி

“வாம்மா.. உன்னைத்தான் எதிர் பார்த்துகிட்டு இருந்தோம்.. “

“சொல்லுங்க சார்.. “

“உள்ளே நம்ம ஸ்டாப் இருக்காங்க.. போய் சேர்ந்துக்கோ.. பஸ் வந்தவுடன் வெளியே வரலாம்..”

“சரி சார்..” என்றவள், செழியன் செந்தில் இருவரிடமும் ஒரு தலையசைப்போடு சென்று விட்டாள்.

எச்.ஓ.டி.. யை அங்கே யாரோ கூப்பிட, அவர் சென்று விட்டார்.

அவர் அந்த பக்கம் நகர்ந்ததும்,

“ஆனாலும் உனக்கு தில்லு அதிகம் மாப்பிள்ள.. அவுங்க பாட்டிய கூட்டிட்டு வரதுக்கு ஐடியா.. சொல்லிருக்க..  நீ ஊத்துற ஜொள்ளுக்கு நாம நீந்தித்தான் போகணும்.. நல்ல வேளை.. அவங்க வரலன்னு ..அந்த கண்டத்துலேர்ந்து தப்பிச்சிடாங்க.. “

“டேய்.. உன்னை .. உனக்கு தெரிஞ்ச விஷயம் எல்லோருக்கும் தெரியுமா என்ன? அப்படியே அவங்க பாட்டி வந்தாலும் சமாளிச்சுட்டு போயிருப்பேன்.. மலர் டூர் வரணும். அவ்வளவுதான் நான் யோசிச்சேன். “

“சரி ..சரி.. வா போகலாம்.. பஸ் வந்தாச்சுன்னு நினைக்கிறன்...”

இவர்கள் பேசிக் கொண்டு இருந்த போது பஸ் வந்துவிட, எல்லோரும் கிளம்பினர்.

பஸ்சில் ஏறியவுடன் சற்று வயதானவர்களை முன் இருக்கைகளிலும், நடுவில் சின்ன பிள்ளைகளையும் அமர வைத்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பின்னாடி அமர்ந்து கொண்டனர்.

வோல்வோ பஸ் என்பதால் லக்கேஜ் எல்லாம் கீழே இருந்த பாக்சில் வைத்து விட்டு, சாப்பாடு மற்றும் கைப்பை மட்டுமே எடுத்துக் கொண்டு எல்லோரும் ஏறி இருந்ததால், எல்லோரும் வசதியாக அமரும்படி இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.