(Reading time: 19 - 37 minutes)

ஏறி உட்கார்ந்தவுடன் சற்று நேரம் ஒரே பேச்சு சத்தம் தான். .. வளர்மதி மலரின் அருகிலும், செழியன் அருகில் வளர்மதியின் பையனும் அமர்ந்து கொள்ள பஸ் கிளம்பியது.

சற்று நேரத்தில் ஒருவர் சாப்பிட எங்கே நிறுத்துவது என்று கேட்க, செழியனின் யோசனை படி நல்ல ஹோட்டல் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே உள்ள இடத்தில் பேருந்தை நிறுத்தினார்கள்.

ஒரு சிலர் அவரவர் எடுத்துக் கொண்டு வந்ததை சாப்பிட, இன்னும் ஒரு சிலர் அருகில் உள்ள ஹோடேல்க்கு சென்று விட, இவர்கள் டிபார்ட்மெண்ட் மட்டும் பேருந்தின் பின் பக்கம் முழுதும் அமர்ந்து கொண்டு இருந்தனர்.

செழியன் , மலர் மட்டுமில்லாமல் இவர்கள் டிபார்ட்மெண்ட் மற்ற ஆசிர்யர்களும் நிறையவே சாப்பாடு எடுத்து வந்து இருந்தனர்.

அதை பார்த்த எச்.ஓ.டி..

“என்னப்பா.. எல்லோருமே எடுத்துட்டு வந்துருக்கீங்க.. இப்போ யார் வீட்டு சாப்பாடு சாப்பிடறது. .. ?”

அதற்கு மலர் ஒரு யோசனை சொன்னாள்.

“சார்.. எல்லோரும் எடுத்துட்டு வந்ததை அப்படியே லைன்லே கடைசி சீட்லே வைக்கலாம்.. அப்புறம் யாராவது ரெண்டு பேர் எல்லோர் தட்டுலேயும் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் வைத்து கொடுக்கலாம்.. அப்படி என்றால் எல்லோருடைய சாப்பாடும் எல்லோரும் சாப்பிடலாம்..”

“குட் ஐடியா.. ஆனால் தட்டு .. ?”

இப்போது செழியன் “சார்.. எங்கிட்ட பேப்பர் பிளேட்ஸ் இருக்கு. “ என்று எடுத்துக் கொடுக்க,

மலர் அப்படியே பின் சீட்டில் வைத்து ஒவ்வொரு தட்டிலும் கொடுக்க, செழியனும், செந்திலும் வாங்கி எல்லோருக்கும் கொடுத்தனர்.

அளவு கொஞ்சமாக இருந்தாலும், நிறைய வகைகள் இருந்ததால், கிட்டத்தட்ட ஒரு பப்பே சாப்பாடு அளவு இருந்தது.

எல்லோரும் கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டே சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும், எல்லாவற்றையும் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் கேட்டு கழுவி வைத்தனர்.

அதோடு மிச்சம் இருந்ததை ஒரு தட்டில் வைத்து இன்னொரு தட்டால் மூடி, பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் பையனிடம் கொடுத்து சாப்பிட வைத்தான்.

பிறகு அருகில் இருந்த ஹோடேலில் உள்ள ரெஸ்ட் ரூம் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் அரைமணி நேரத்தில் சாப்பிட்டு வண்டியை கிளப்ப வேண்டும் என்று எண்ணியிருக்க, ஒரு மணி நேரம் ஆகி இருந்தது.

சாப்பிட்ட களைப்பு தீர எல்லோரும் உறங்க ஆரம்பிக்க, செழியனும் செந்திலும் முறை வைத்து முழித்துக் கொண்டு இருந்தனர்.

முதலில் செந்தில் தன் மனைவியோடு அமர்ந்து இருந்தவன், சாப்பாட்டிற்கு பின் அவன் மனைவியும், மலரும் ஒன்றாக அமர வைத்தான். செழியனும், செந்திலும் ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டனர்.

இருவரும் மாறி மாறி, சென்று டிரைவரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தனர். அவர் சற்று சோர்வது போல் தெரிந்தால், வண்டியை ஓராமாக நிறுத்தி, அவரோடு சேர்ந்து டீ குடித்து விட்டு பிறகு பயணத்தை தொடர்ந்தனர்.

காலை ஏழு மணி அளவில் அவர்கள் தங்க வேண்டிய கெஸ்ட் ஹவுஸ் வந்து இறங்கினர். அது மிக பெரிய ஆங்கிலேயர் பாணி கட்டிடம். வாசலில் உள்ள பெரிய போர்டிகோ தாண்டி உள்ளே வந்தால் மிக பெரிய ஹால்.. ஹாலின் முடிவில் இரண்டாக பிரியும் மாடி படிகள்.. மாடியில் இரு புறமும் நீண்ட காரிடார் இருக்க, அதில் ஏழு, ஏழாக மொத்தம் பதினான்கு அறைகள் இருந்தன. அதே போல் கீழேயும் ஆறு அறைகள் மட்டும் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் மிகபெரிய டைனிங் ஹால் இருந்தது. 

இவர்கள் மொத்தம் நாற்பது பேர் இருந்தனர். தம்பதியாக வந்தவர்களுக்கு தனி தனி அறைகளாக கொடுத்து விட்டு, மற்றவர்கள் மூன்று மூன்று பேராக மூன்று அறைகளில் பெண்களும், ஆண்கள் நாலு அறையிலும் தங்கி கொண்டனர்.

ஓரளவிற்கு எல்லாம் செட் ரைட் செய்து விட்டு கீழே எல்லோரும் கூடினர்.

செழியன் .. எல்லோரிடமும் இன்றைக்கு எங்கே போகலாம் என வினவ, ஆளுக்கு ஒரு இடம் சொன்னார்கள்.

பிறகு எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு, கையில் உள்ள டூரிஸ்ட் கைடு பார்த்து இடத்தை தேர்ந்து எடுத்தான்.

“ஊட்டி ..அவலாஞ்சி  போகலாம் மற்ற இடங்கள் எப்போ வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.. இது ஊட்டி மெயினிலிருந்து முப்பது கிலோ மீட்டர் உள்ளே போகவேண்டும்.. முழுதும் காட்டுக்குள்ளே தான் பயணம். “

“காட்டுக்குள்ளே என்றால் பெர்மிசன் வாங்க வேண்டாமா ?”

“ஹ்ம்ம்.. வாங்கணும்.. அதற்கு நான் முயற்சி செய்கிறேன்.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.