(Reading time: 19 - 37 minutes)

“முப்பது கிலோ மீட்டர் என்றால் ஹில்லில் ஏறி இறங்கவே இரண்டு மணி நேரம் ஆகுமே.. இன்றைக்கு இதற்கு மேல் கிளம்பி நாம் பார்க்க முடியுமா?”

“ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்.. அப்படி என்றால் இப்போது காலையில் லைட்டாக எதாவது சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்.. மதிய சாப்பாடு ஒரு மணிக்குள்ளாக முடித்து விட்டு, இங்கே சில இடங்களை பார்த்து விட்டு மாலையில் கெஸ்ட் ஹவுஸ் வந்து விட்டால், நாளைக்கு காலை ஒரு எட்டு மணிக்கு இங்கிருந்து கிளம்பி விடலாம்.. மேலே ஏறி சுற்றி பார்த்து விட்டு மாலை நான்கு மணிக்குள் திரும்பி விட்டால், நன்றாக ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, நாளை மறுநாள் காலை ஊருக்கு கிளம்பி விடலாம்.”

எல்லோரும் சரி என்றனர். இரண்டு டிரைவர்கள் வர வேண்டும் என்று கேட்டு இருந்ததால் , இரவு வண்டி ஒட்டும்போதே இருவரும் மாறி மாறி தான் ஒட்டினர்.

இப்போது இருவரையும் அழைத்து

“டிரைவர் ... நாளைக்கு எங்களோடு ஹில்லில் வரபோகிறவர் இன்றைக்கு முழுக்க ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.. நாளை மறுநாள் ஊருக்கு ஓட்டுபவர் .. நாளை ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.. வேண்டும் என்பதை கேட்டு சாப்பிட்டு விட்டு இப்போது இருவருமே ரெஸ்ட் எடுங்கள். “ என்று அனுப்பி வைத்தான்.

அவன் திட்டத்திற்கு சரி என்றவுடன் மற்ற எல்லோரும் அவரவர் அறைக்கு சென்று விட்டு இருக்க, மலர் மட்டும் அவனை பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

செந்தில் மனைவி சென்று இருக்க, செழியன் வராததை பார்த்து செந்தில் நின்று இருந்தான்.

மலரின் கண்கள் செல்லும் இடத்தை கண்டு கொண்டவன், அவள் அருகில் சென்று

“என்ன சிஸ்டர்.. ? என் பிரெண்ட் அப்படி பார்த்துகிட்டு இருக்கீங்க..?’

“இல்லை.. இங்கே எல்லோருமே நிறைய சர்வீஸ் ஆனவர்கள் தானே.. இவர் எல்லோருக்கும் ஜூனியர் தானே.. அப்புறம் எப்படி இவர் சொன்னவுடனே எல்லோரும் சரின்னு கேட்டுகிட்டாங்க.. ?’

“அது.. பையன் முகராசி அப்படி.. இங்கே உள்ள பாதி லெக்சரர்களை அவனுக்கு படிக்கும் காலத்திலிருந்து தெரியும்.. பய புள்ள படிப்புல தான் ரேங்க் வாங்கினான் அப்படின்னா, எக்ஸ்ட்ரா அக்டிவிடீஸ்லேயும் முந்திரிகொட்ட கணக்கா மூக்க நீட்டிட்டு போவான்.. அதனால் கரஸ்லேர்ந்து நம்ம வாட்ச்மன் வரைக்கும் எல்லோருக்கும் செல்ல புள்ள.. ஆர்வ கோளாறு வேறயா. இன்னிக்கு இங்கே வரோம்னு முடிவான உடனே, நேத்திக்கே கூகுள் மேப் கரைச்சு குடிச்சு இருப்பான்.. இது எல்லாம் தெரிஞ்சு தான் இவன்கிட்ட மல்லுக்கு நிக்கிறதுக்கு பதிலா இவன் சொல்றத கேட்டுட்டு போயிடலாம்ன்னு எஸ்கேப் ஆயிட்டாங்க.. “

‘மொத்தத்தில் ஆல் இன் ஆல் அழகு ராஜா .. அப்படின்னு சொல்றீங்க..”

“அழகு ராஜாவோ .. இருபத்தி மூணாம் புலிகேசி மாதிரி சிரிப்பு ராஜாவோ தெரியாது.. ஆனால் இவன்கிட்ட சிக்கினவங்க .. செத்தாண்டா சேகருன்னு அலறி அடிச்சுட்டு ஓட வச்சிடுவான்..”

இதை கேட்டு மலர் சிரிக்க, அப்போது அங்கே வந்த செழியன்

“என்னடா.. என்னைய பத்தி போட்டுக் கொடுக்கிற போலே ?”

“தெரிஞ்சுருச்சா. நீ அந்த பக்கம் தானேடா திரும்பி இருந்த ? நான் சொன்னது சரியா போச்சா.. சிஸ்டர்.. இவன வச்சி குப்பை கொட்ட போற அந்த பொண்ணுதான் ரொம்ப பாவம் .. “ என,

அதை கேட்ட மலரின் முகம் சிவக்க, அவளையே பார்த்துக் கொண்டு இருந்த செழியன் முகம் மலர்ந்தது..

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்த செந்தில் ‘ ஹ்ம்ம்” என்று தொண்டையை செரும, இருவரின் பார்வையும் பிரிந்து விலகியது..

“டேய்.. செழியா.. எனக்கு எதுக்குடா தனி ரூம் கொடுத்த.. நான் உன்கூடவும், என் வொய்ப் சிஸ்டர் கூடவும் தங்கிப்போம்ல..

“இருக்கட்டும்டா. பர்ஸ்ட் டைம் அவங்கள நம்ம கூட கூட்டிட்டு வந்துருக்க.. ரெஸ்ட்லெஸ்சா பீல் பண்ணுவாங்க.. நீ கூட இருந்தா.. அவங்களுக்கு ஈஸியா இருக்கும்.. இப்போ அவங்கள தனியா விட்டு என்ன பண்ற..? போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ரெடி ஆகி வாங்க..”

“சரி .. நீ வரலையா..?”

“இதோ .. நானும் வரேன்.. நீ முன்னாடி போ”

அதற்குள் மலரும் மாடி ஏற ஆரம்பித்து இருக்க, செந்தில் சற்று முன்னால் சென்றான். செழியன் மலரோடு பேசிக் கொண்டு நடந்தான்..

“மலர் .. உனக்கு என்ன ஹெல்த் ப்ரோப்ளம் இருக்கு..?’

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லியே”

“நான் ஊட்டி மலை ஏற ஆரம்பிச்சப்பவே கவனிச்சேன்.. நீ ரெஸ்ட்லெஸ்சா இருக்கிறதா பார்த்தேன்.. என்ன பிரச்சினை.. ட்ராவல் சிக்னெஸ் இருக்கா ?”

“அது எல்லாம் ஒன்னும் இல்லை.. கொஞ்சம் வீசிங் ப்ரோப்லேம் இருக்கு.. அது மலை ஏற ஆரம்பிச்ச உடனே .. ஸ்டார்ட் ஆயிடுச்சு “

“ஓ.. காட்... இப்போ என்ன மருந்து வச்சுருக்க.. ஸ்ப்ரே எல்லாம் வச்சுருக்கியா .. எதுவும் வேணும்னா.. மெடிக்கல் ஷாப்லே வாங்கிட்டு வரட்டுமா..”

“ஒன்னும் வேண்டாம்.. கையில் எல்லாம் இருக்கு.. மிட்டாய்லேர்ந்து எல்லாமே வச்சுருக்கேன் .. சோ டோன்ட் வொரி..”

“ஹ்ம்ம்.. சரி.. எதுக்கும் மப்ளர் எடுத்து காதை மறைக்குமாறு போட்டுக்கோ.. அது கொஞ்சம் ரீலீப்பா இருக்கும்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.