(Reading time: 70 - 139 minutes)

அதே சமாதானம்! மனிதன் இறந்துவிட்டால் ஆத்மாவானபின் ஆக்ரோஷமாக மாறிவிடுகிறான் என்கிறார்கள். ஆனால் உண்மையான நேசம்? மரணத்தின் பின்னும் தொடர்ந்திடுமா? இதோ தொடர்கிறதே. புவியின் புலம்பலை நிறுத்தவே ஆதி அவ்வார்த்தைகளை சொன்னான்.

அவளும் கொஞ்சம் தனிந்தாள். அவளது பார்வை மகளின் மீது படிந்தது. மகேன் குழந்தையை அணைத்துக்கொண்டான்.

“நம்ம பாப்பாவை யாராலும் பிரிக்கவே முடியாதுடா புவி” என்றான் ஆதி.

குட்டி வினிதாவை காரியங்கள் செய்து முடிக்க, அமுதாமும் அமுதனும் கணவன் மனைவி இருவருக்கும் இறுதி மரியாதையை செய்தனர். இருவரின் மனமும் கனத்திருந்தது. அனைவரும் இனி இவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் என பிராத்தனை செய்தனர்.

எல்லாம் முடிந்து அவர்கள் மண்டபத்திற்கு செல்லும் வழியில், “அந்த காரியம் செய்தவரை எப்படி இந்த நேரத்துக்கு அழைத்து வந்த?” மகேன் ரூபனை பார்த்து கேட்டான்.

“குட்டி வினிதாவை வைத்துதான் நெருப்பு வைக்க போறோம். அதான் அவன் வீடுக்கே போயி கடத்திட்டு வந்துட்டேன். ஒழுங்கதான் தான் வர சொல்லி கேட்டேன். அவன் இப்போ முடியாது காலையில வாங்கன்னு என்னை விரட்டுனான். அடிச்சி இழுத்து ஆதியை கொண்டு வந்த ஆம்புலன்ஸ்ல இவனையும் ஏத்தி இங்க கொண்டு வந்துட்டேன்”

“அடப்பாவி. ஏன்டா இப்படி பண்ண?”

“நீதான் இன்னைக்கே எல்லாம் முடிக்கணும்ன்னு சொன்ன. நான் வீட்டுக்கு போயி நல்ல தூங்கனும். இல்லனா காலையிலே என் தூக்கத்தை நீ கெடுத்து இங்க இழுத்திட்டு வந்திருப்ப” ரூபன் சொல்லுவதை கேட்டு அனைவருக்குமே சிரிப்பு வந்தது.

“ஹான். உன் கிட்ட கேட்கணும் நினைச்சேன். எப்படி எனக்கு தெரியாமல் அந்த கட்டையை கலைவாணனின் வீடுல கட்டி வைத்த. அப்பறம் அந்த தப் ரேகொர்ட் எப்படா நீ செய்த. உன் கூட தான் நான் இருந்தேன். நீ ரேகொர்ட் பண்ணதை நான் பார்க்கவே இல்லையே” ரூபன் மதியம் நடந்ததை கேட்க, மகேன் தலையில் அடித்துக் கொண்டான்.

அதற்குள் அவர்கள் மண்டபத்திற்கு வந்து சேர்ந்திட அவன் ஏதும் சொல்லாமல் மண்டபத்தினுள் சென்று விட்டான். ரூபன் மகேனை முறைத்தப்படியே வீட்டிற்கு சென்று விட்டான். அவர்கள் அங்கு வந்து சேரும் வரை ரூபனின் அப்பா இன்னனும் பூஜையில் அமர்த்திருந்தார். விடியும் வரையில் அவர் அப்படியே அமர்த்திருந்தார்.

வினிதா கண் விழித்த பின்னரே அவர் இவ்விடத்தை விட்டு நடர்ந்தார். வினிதாவை பார்த்து “தலை குளித்து வேறு உடை மாற்றிய பின்னர் இப்போது நீ போட்டிருக்கும் உடையை தீயிட்டு கொழித்திடு” என்றவர் அவள் கையில் கட்டிருக்கும் காற்றை கழட்டினார்.

அவர் மண்டபத்தின் வெளியே நடக்கையில் அங்கே இருவர் இப்பதை பார்த்து புன்னைகைத்தார். இனி இவர்களால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பதை அவர்  அறிந்திருந்தார். 

ரூபனின் அப்பா சொன்னதை எல்லா வினிதா செய்து முடித்த பின்னர் அவர்கள் அனைவரும் அங்கயே உணவருந்தி சென்றனர். எல்லாம் நல்ல படியாக முடிந்ததில் அனைவரும் தங்களின்  நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பினர். வெண்ணிலா அபர்த்மேன்ட்டை அடைந்த பிறகு வினிதாவின் அண்ணி வீட்டை சுத்தம் செய்ய சொன்னார்.

“வினி சுத்த படுத்தணுமா இல்ல நீ வாடகைக்கு பார்த்திருக்கும் புது வீடுக்கு போக போறோமா? – சித்ரா

“அதான் ரூபனின் அப்பா இனி ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாரே. சோ நாம் வேறு வீடுக்கு போகலை. கிளீன் செய்ய சோம்பேறிப் பட்டு இப்படி கேட்கற தானே நீ” – வினிதா

“க்கும்” கழுத்தை நொடித்தவள் வேறு ஒன்றும் சொல்லாமல் மற்றவர்களுக்கு உதவு செய்தாள். எல்லா வேலையும் முடித்த பின்னர் இது அவர்கள் இருந்த வீடு தானா என்ற சந்தேகம் வந்தது. இதனால் வாராமல் இருந்த சூரிய ஒளி இன்று வீட்டினுள் வந்தது. லைட் வெளிச்சம் இல்லாமலே வீட்டினுள் வெளிச்சமாக இருந்தது அவர்கள் வீடு. பூட்டிருந்த அறை கதவும் திறந்திருந்தது. அவர்கள் அந்த அறையும் சுத்தம் செய்திருந்தனர்.

மதிய உணவுக்கு பிறகு தீபனும் மகேன் அங்கே வந்தனர். அவர்கள் வினிதாவின் அண்ணனிடமும் அண்ணிடமும் குட்டி வினிதாவை பற்றி பேசினர். “குழந்தையை கண்டிப்பாக மனநல டாக்டரிடம் அழைத்து போங்க, நேற்று நான் டாக்டரிடம் பேசி அபாய்ன்மென்ட் வாங்கிட்டேன்.”

“பாப்பாவிற்கு ஏதும் பிரச்சனையா” – வினிதாவின் அண்ணி

“இல்ல. இவ கடத்தப்பட்ட பிறகு அந்த காட்டு வீட்டில் தான் இருந்திருக்கிறாள். பேஸ்மென்ட் ல அடைத்து வைத்திருந்தார்கள். சோ இவ இனி எல்லாத்தையும் எப்படி எடுத்துக்குவான்னு தெரியலை. அதுக்காக தான் சொல்லறோம். பாப்பாவிற்கு DNA டெஸ்ட் செய்ய ரத்தம் எடுத்திருக்கோம். ரிசல்ட் எல்லாம் வந்த பிறகு நீங்க பாப்பாவை முறைப்படி தத்து எடுத்துகோங்க” அவர்கள் மனதில் நினைத்ததை எல்லாம் என சொல்லிக்கொண்டிருந்தனர். 

குழந்தையை தூக்கி வைத்திருந்த வினிதாவின் பார்வை அவளையும் அறியாமல் பால்கனியை பார்க்க, அங்கே இருவர் காற்றில் மிதந்து வந்தனர். அவள் பால்கனியை நோக்கி சென்றாள். அவளின் தோளில் சாய்ந்து உறங்கும் குழந்தை பார்த்தனர். வினிதா மெல்ல அந்த குழந்தையின் காதில் “அவர்களுக்கு எங்கள் மேல் நம்பிக்கை வரும் வரை அவர்களின் நிழல் உன்னை என்றும் தொடர்ந்திருக்கும்” என்றாள். ஆதி-புவி இருவரையும் பார்த்து புன்னகைத்து சென்றாள் வினிதா.

ஹாய் பிரண்ட்ஸ், இது என் முதல் நாவல் எழுதும் முயற்சி. 2014-இல் தொடங்கப்பட இக்கதை எழுதி முடிக்க ரொம்ப அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டேன். கதையை எதுத அனுமதித்த சில்சீ குழுவிற்கும், எல்லா எபிக்கும் கருத்து தெரிவித்த நட்புக்களுக்கும், ஒரு வழியா நான் கதையை எழுதி முடிக்க உதவிய புவி, மது, கீர்த்தனா, சுஜா, மீனு, நித்தியா (யார் பெயராவது மிஸ் பண்ணி இருந்தால் சாரி) அவைவருக்கும் நன்றி.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2018-ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கட்டும். Bye Bye frineds 

 

முற்றும்

Go to episode # 12

{kunena_discuss:753}

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.