(Reading time: 70 - 139 minutes)

ரூபனின் அப்பாவின் கையில் மந்தரித்த தண்ணீர் இருந்தது. ஆனால் அவர் அதன் மேல் தெளிக்க முடியாமல் நின்றிருந்தார். காற்றும் மழையும் அவருக்கு எதிராக சதி செய்தது. மேலும் அவர் தூரத்தில் நின்றுக்கொண்டிருந்தார்.என்ன செய்வது எப்படி வினிதாவை தடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு கை கொடுத்தனர் மகேனும் தீபனும்.

“இல்லை! இது உனது உடல் இல்லை! இந்த உடலின் நீ சிறிது காலம் இருந்தாய் அவ்வளவுதான்” – மகேன். அது அதை மறுத்து ஏதும் சொல்லவில்லை. அமைதியாய் ஆனால் கோபத்துடன் நின்றது.

தீபனின் கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு அந்த பாலத்தில் அருகே வர, மகேன் அவர்களுக்கு குடை பிடித்திருதிருந்தான். அவர்கள் மெல்ல ஆற்று பலத்தின் நடந்தனர். குழந்தை பயந்தது தீபனின் கழுத்தை இருக்கக் கட்டிக்கொண்டாள். “ஒன்னும் இல்லடா. பயப்படாத! நாங்க உன்னுடன் தான் இருக்கிறோம்” என்றவன் குழந்தையை தன் மேல் சாய்த்துக்கொண்டான்.

இவர்கள் வருவதை பார்த்த அது பலத்தின் மேலிருக்கும் கம்பியில் ஏற முயற்சித்தது. “மேல ஏறாத!. இங்க பார் நாங்க யாரை கொண்டு வந்திருக்கிறோம்” – மகேன்

தீபன் குழந்தை கீழே இறங்கினான். அவள் பயத்தில் இறங்க மறுத்ததாள். மண்டியிட்டு அமர்ந்தவன் குழந்தையை மடியில் அமர்த்திக்கொண்டான். குளிரில் அவள் நடுங்க மகேன் தனது ஜாகிட்டை கழற்றி குழந்தையின் மேல் போற்றுவிட்டான்.

“இங்க பாரு. இவள் தான் உன் அம்மு@ வினிதா. உன் குழந்தை!” – மகேன்

அது குழந்தையை உற்றுப் பார்த்தது. பின்னர் “நீ பொய் சொல்லற. என் அம்மு.. அம்மு” சொல்லிக்கொண்டே கத்தியது அது!

“இல்ல நாங்க பொய் சொல்லலை! அவர்கள் உன் குழந்தையை ஏதும் செய்யவில்லை. போலீஸ்க்கு பயந்து இவளை ஓரிடத்தில் ஒழித்து வைத்திருந்தனர்” – தீபன்

“இல்ல. இவள் என் குழந்தை கிடையாது! அவர்கள் அவளை கொன்றுவிட்டனர்” மிகவும் கோவமாய் தென்றல் கத்த, ஆற்றில் ஓடும் தண்ணீர், இடியுடன் கூடிய மழை தென்றலின் கோப கத்தல் குழந்தையை அழ வைத்தது. குழந்தையின் மழலை குரலில் “அம்மா பயமா இருக்கு. மாமா போலாம் மாமா” தீபனை கட்டிக் கொண்டு அவள் அழுதாள். அந்த குரல் தென்றலை அசைத்தது. எப்போதோ அவள் கேட்ட அதே குரல் போல இருந்தது. மெல்ல குழந்தையின் அருகே அவர, குட்டி வினிதா பயத்தின் இன்னும் வேகமாக சத்தமிட்டு அழுததாள்.

அதன் கண்கள் குழந்தையை அளவெடுத்து. குழந்தையின் கண்கள் அவளுக்கு பரிச்சியமான கண்களை போல இருந்தது. தென்றல் இன்னும் அருகே நெருங்கினாள் குழந்தைக்கு மிக அருகே அவளின் முகம்.

“வேண்டா. போ. பயமா இருக்கு மாமா” பயத்தில் அழ, அச்சத்தம் வினிதாவின் அண்ணியை குழந்தையை நோக்கி செல்ல வைத்தது. தென்றல் குழந்தையை தொட்டுப்பார்க்க அதன் கையை அருகே நீட்டிய நேரத்தில் வினிதாவின் அண்ணி தீபனின் மடியிலிருந்த குழந்தையை தூங்கிக்கொண்டார்.

“இல்லமா இல்லமா. பாப்பாவுக்கு ஒன்னும் இல்ல. அழாதிங்க. இதோ அம்மா வந்துட்டேன் இனி பாப்பா அழாதிங்க” நெஞ்சோடு அந்திருந்த குழந்தையிடம் வினிதாவின் அண்ணி  சொல்லிக்கொண்டிருந்தார். அதை கண்ட தென்றலுக்கு மேலும் கோபம் வந்தது.

குழந்தையின் கண்கள் ஆதியின் கண்களை போல இருக்க, அவளின் குரலின் அம்முவை நினைவுப்படுத்தியது. அன்று அவள் தொலைத்த தன் செல்வதை தொட்டுப் பார்க்க துடித்தாள்  “குடு அவளை என்னிடம்” தென்றல் கத்த, அதன் சத்தம் அவ்விடம் முழுக்க எதிரொலித்து.

வினிதாவின் அண்ணி கொடுக்க மறுத்தார். “முடியாது. இனி இவள் என் மகள். அவளை உன்னிடம் குடுக்க முடியாது! சென்று விடு! இந்த உலகத்தை விட்டு சென்று விடு!”

“அவ என் அம்மு மாதிரியே இருக்காள். இல்ல இது என் அம்முவேதான். எனக்கு தெரியும். குடு நான் தூக்கணும்!” தென்றலின் குரல் ஏக்கமாக ஒலித்தது.

வினிதாவின் அண்ணி அம்முவை தர மறுக்க தென்றலின் விழிகளில் கோவம் குடிக்கொண்டது. குழந்தையின் அருகே வந்த போது அதன் முகம் மென்மையாக மாறி இருந்தது. இப்போதோ கொஞ்சம் கொஞ்சமாக அகோரமாக மாற, அந்த ஆற்று பாளம் ஆடியதில் மண் சரிந்தது.

“ஏன் இப்படி எல்லாத்தையும் கொல்ல துடிக்குற. அதான் உன் குடும்பத்தை சீர்குலைத்தவர்களை தேடி உன் பலித் தீர்த்துக்கொண்டாயே! இன்னும் ஏன் குழந்தையும் வினிதாவையும் கொல்ல துடிக்குற?”

“இது இவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஓர் உலகம். என்னுடன் இருப்பது தான் அவர்களுக்கு பாதுகாப்பு” வினிதாவின் அண்ணியிடம் சொன்னாலும் அதன் பார்வை குழந்தையின் மேலே தான் நிலைத்திருந்தது.

அந்த பார்வை வினிதாவின் அண்ணியை மனம் இளகியது. பயம் ஏதும் இல்லாமல் குழந்தையை தூங்கிக்கொண்டு தென்றலின் அருகே சென்றார். நெஞ்சோடு அணைத்திருந்த குழந்தை அவளிடம் நிட்டினார். தென்றல் குழந்தையை வாங்க கையை நிட்ட, “எனக்கு இவளை திரும்ப தருவேன்னு வாக்கு குடு! அப்போதான் இவளை உனக்கு தருவேன்” என்றார்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.