(Reading time: 70 - 139 minutes)

மகேன் அங்கிருந்த கயிற்றை கொண்டு அவனின் கையும் காலையும் பின்னால் கட்டினான். அவன் சொன்ன இடத்தில் வினிதாவை தேடிசென்றான். அவளின் வாயில் டேப் ஒட்டிருக்க, கையும் காலையும் நாய் சங்கலியால் கட்டிருந்தது. அவளின் காலில் காயத்தினால் ரத்தம் வந்தது. தீபன்உடனே அவளுக்கு உதவி செய்தான்.

கையில் உள்ள சங்கிலியை கழற்ற அது அவளின் காலை சுற்றி இருந்தது. அதையும் கழற்ற பார்த்தான். அந்த சங்கிலியின் முடிவில் பூட்டு போடப்பட்டிருந்தது. கையில் அவளை அள்ளிக்கொண்டு "டேய் இதோட சாவி எங்கே டா"

"காணோம். அதன் கல்லை  வைத்து பூட்டை  உடைக்க பார்த்தேன்" அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலே தீபன் வினிதாவை தூக்கிக் கொண்டு மேலே சென்றான். மேஜை மேல் இருந்த சாவியை போட அந்த பூட்டு திறந்துக் கொண்டது. தீபன் குட்டி வினிதாவை காப்பாற்றிய அந்த நொடியில் ஆதியின் உயிர் அவனின் உடலை விட்டு பிரிந்தது!

வெண்ணிலா அப்பார்ட்மென்

சித்ராவும் வினிதாவின் அண்ணனும் அவர்களின் வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்லுகையில் அவர்களை வரவேற்றது தென்றல் பேய். சோபாவின் மேல் வைக்கப் பட்டு இருந்த நிலை கண்ணாடியில் தெரிந்தது அந்த முண்டத்தின் தலை மட்டும். அது அவர்களை பார்த்து சிரித்தது.

இதை பார்த்த சித்ரா அவ்விடத்திலே சிலையாய் நிற்க “உள்ளே வா. ஏன் எங்கே நிற்குறாய்?” என்றது. அது அவர்களிடம் இப்படி நேரடியாக பேசும் என்பதை எதிர் பார்க்காததால் திரு திருவென முழித்தாள்!

“வினிதாவை தேடி வந்தியா?” அது இவர்களை கேட்க,

“அவளை என்ன பண்ண?” – வினிதாவின் அண்ணன்

“இதுவரைக்கும் அவளை ஒன்னும் பண்ணவில்லை. நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடிச்சாச்சி. நாளை விடியலில் அவள் என்னுடன் இருப்பாள்.”

அந்நேரம் வினிதாவின் அண்ணனின் கைதொலைப்பேசி அலறியது அதை எடுத்தப் பார்க்கையில் ரூபன் அழைத்தான். அதை எடுப்பதா வேண்டாமா யோசிக்கையிலே அது நின்றுப் போனது.  அது மீண்டும் அலறுகையிலே அவர் எடுத்து காதில் வைக்க அதில் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து போனார்!

“என்ன ரூபன் சொல்லறே? வினிதா இங்கே தானே இருக்காள்.”

“என்ன அவள் உங்களுடன் மண்டபத்தில் இருக்காளா?”

“இல்ல. நாங்க வினிதாவை காணோம்ன்னு அவளை தேடி இங்க அப்பார்ட்மெண்ட்கு வந்தோம். ஆனா இங்கே அவளின் அறையில் இருப்பதை பார்த்தோம்.” அவர் சொல்லி கொண்டு இருக்கையில் அது இடி என சிரித்தது.

வினிதாவின் அண்ணன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் சித்ரா வினிதாவின் அறைக்கு சென்றாள். அவர்கள் அந்த வீட்டினில் நுழைகயில் அந்த பேய் ஹாலில் இருக்க, வினிதா அவளின் கட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்தாள். ஆனால் இப்போ அவள் அங்கே இல்லை! சற்று நேரத்துக்கு முன் இங்க இருந்தவள் அதுக்குள்ளே எங்கே போனாள்  என எண்ணி அவள் முழுவதுமாய் அறைக்குள் செல்லவும், அந்த பேயின் சிரிப்பு சத்ததுடன் அந்த அறை கதவும் சாத்திக் கொண்டது.

வினிதாவின் அண்ணன் பயத்திலும் குழப்பத்திலும் அந்த பேயை பார்க்க அது உரக்க சிரித்தது. “உன்னால் முடிந்தால் அவளை நீயே கண்டுப்பிடி! அவள் இங்கில்லை. வேறு இடத்தில் சென்று தேடு” சிரித்துக்கொண்டே இருந்தது!

சித்ரா அந்த கதைவை திறக்க முயற்சித்தாள். அவளால் உள்ளே இருந்து திறக்க முடியவில்லை. “அண்ணா கதவை திறங்க. எனக்கு பயமாக இருக்கு”

“ஹான் உனக்குமா?” தென்றலின் குரல் அந்த அறையில் கேட்டது.

பின்னால் திரும்பி பார்க்காமலே கதவை தட்டினாள். “அது திறக்காது” என்றது. சித்ரா தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்தாள். அப்போ அந்த கதவின் வழியே தென்றலின் உருவம் உள்ளே வந்தது. அது அவளை பார்த்து சிரித்தது. “உன்னை என்னை பார்க்க வைத்து விட்டேன் பார்த்தியா. அதே போல நான் நினைத்ததையும் செய்வேன்” என சொல்லி மறைய அறைக்கதவும் திறந்துக்கொண்டது!

கலைவாணனின் வீடு

ம்புலன்ஸ் அரவிந்தின் உடலை எடுத்து சென்ற பின்னர் தீபனும் அவனது நண்பர்களும் மகேன் இருக்கும் இடத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு செல்லும் போதே கலைவாணனின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீஸ் ஃபார்மலதிஸ் எல்லாம் முடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் அந்த குட்டி காட்டிற்கு சென்றனர். அவர்களுடன் அம்முவும் இருந்தாள்.

இறுதியாக கலைவாணன் சொன்னதை வைத்து, ஓர் இடத்தில் மரங்களை வெட்டி குழி தோண்டினர். சில அடி தொண்டுகையிலே அவர்களுக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. வேகமாக மணலை அள்ளி அதை பார்க்க, ஓர் travelbag இருந்தது. அதை மேலே எடுத்து திறந்து பார்க்கையில் அதனுள் மனித எழும்பு குடு இருந்தது!

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.