(Reading time: 70 - 139 minutes)

மாறன் எழ முடியாமல் தரையில் சரிய, அர்விந்த் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினான். அவர்களுக்கு பின்னால் வந்த வினோத் உடனடியாக மாறனை நெருங்க, அப்போ அங்கே அவர்களுக்கு ஓர் பெண்ணின் குரல் கேட்டது! சப்தமும் நடுங்கிப் போனது அவர்கள் முவருக்கும்.

“ஓடு! ஓடு! சீக்கிரம் ஓடு! இன்னும் எவ்வளவு தூரம் ஓடுவாய் நீ? ஹா ஹா ஹா. இப்படி தானே எங்களை ஓட வைக்க நினைத்தாய் நீ! ஆனால் இப்போ நீ ஒடறியே!” அர்விந்த் முதல் முறை உருவமில்லால் வெறும் குரலை மட்டும் கேட்டான். கேட்ட நொடியிலே அவனுக்கு அது யாரின் குரல் என புரிந்து போனது. அரவிந்தை விரட்டியது அந்த குரல்.

இறந்து போனவளின் குரல் மட்டும் அங்கே கேட்க அவனுக்கு அடுத்த அடியை எடுத்து வைக்க பயமாக இருந்தது. அவன் போகும் திசை முழுக்க அக்குரல் அவனை துரத்தியது! அவனுக்கு முன்னால் உருவமில்லா ஓர் குரல் கேட்க, பின்னாலில் மாறனும் வினோத்தும் நடத்து வந்தனர்.

எங்கே செல்ல வேண்டும் அவன். எல்லா பக்கமும் பார்த்துக்கொண்டு அவன் பயத்தில் நடக்கையில் திடீரென மரக்கிளை விழுந்தது அவன் மேல்! அது அவன் மேலிருக்க நகர முடியவில்லை அவனால். மாறனும் வினோத்தும் அந்த மரக்கிளையை நகற்றி அர்விந்த்தை அங்கிருந்து வெளியே இழுத்தனர். அவனுக்கு நெஞ்சு வலித்தது. நெஞ்செலும்பு உடைத்து போல இருந்தது. அர்விந்த் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டான்.

“ஹா ஹா ஹா! வலிக்குதா? உனக்கு வலிக்குதா? நம்ப முடியலயே! இந்த வலி உனக்கு போதாது. உனக்கு இன்னும் வலிக்கணும்! இப்படித்தானே என் அம்முவுக்கும் ஆதிக்கும் வலித்திருக்கும். அதை போல நீ அனுபவிக்கணும்” என்றது.

“நீ யாரு? எங்கிருந்து பேசற? – மாறன். பதில் இல்லை அதனிடம். அது அரவிந்தனிடம் மட்டுமே பேசியது.

அவ்விடத்தில் கனத்த அமைதி நிலவியது. அங்கு வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை! அரவிந்தின் நிலையை கண்டு வினோத் ஆம்புலன்ஸ்க்கு அழைத்தான். அவர்களுக்கு அவன் உயிருடன் வேண்டுமே! மாறன் அவ்விடத்தை சுற்றி பார்த்தான்.

அவர்களும் அர்விந்தனும் அந்த காட்டை விட்டு வெளியே வந்து விட்டனர். இன்னும் சில தூரமே அர்விந்த் தனது காரை பார்க் பண்ணிருந்தான். இவர்களின் கவனுமும் தன் மேல் இல்லை என்பதை செய்தவன் அடுத்த  நொடியில் அர்விந்த் எழுந்து ஓடினான்.

கயவன் 1

தன் கண்கள் கலைவாணனின் மேல்தான் இருந்தது. அவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லையென உறுதி செய்த பிறகு அதனிடம் சிரிப்பு சத்தம் வந்தது. வெற்றியை கொண்டாடும் சிரிப்பு அது. இப்படியொரு சிரிப்பை அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. எதை சாதித்துவிட்டாள் என இப்படி ஒரு சிரிப்பு அவளுக்கு?

அது தன் முகத்தை தீவிரமாக வைத்திருக்க, கண்கள் மட்டும் அங்கும் இங்கும் அசைந்தது. அசைந்த கண்கள் ஒரு இடத்தில் நிலைத்திருக்கையில் வினிதா மயங்கி சரிந்தாள்! அவள் அந்த கண்ணாடி துண்டுகளில் விழுந்தாள்.

ரூபன் வினிதாவை காருக்கு தூக்கி சென்ற பின்னர் மகேன் தீபனுக்காக வீட்டு வாசலில் அமர்ந்தான். அவனின் மனதில் அவர்கள் இருவரையும் ஆபத்தில்லாமல் சற்றுமுன் கீழே தள்ளி விட்டது யார் என்ற கேள்வி இருந்தது. அது குட்டிமாவாக  இருக்ககூடும் என்ற  முழு நம்பிக்கையும் இருந்தது. மெல்ல பின்னால் திரும்பி “குட்டிம்மா நீ என் கூட இங்கே இருக்கியா? காலையில் நீ தான் என்னுடன் பைக்கில் வந்தியா? கேட்கையில் அங்கு மெல்லிய சத்தம் எழுந்தது.

“எனக்கு ஒன்னும் இல்லே டா. நான் நல்ல இருக்கேன். சின்ன காயம் தான். சீக்கிரம் குணம் ஆகிடும்” சொல்லிக்கொண்டு இருக்கயில் ரூபன் யாருடனோ பேசிய படி மகேனை நோக்கி வந்தான்.

மகேனின் கைத்தொலை பேசி சத்தமிட்டது! வந்த செய்தியை கேட்டு அதிர்ந்தான். ரூபன் அவனின் முகத்தை பார்த்து என்னவென்று கேட்க “ஆதி இறந்துவிட்டான்” சொன்னான்.

கயவன் 2

ன்னால் ஓட முடியாது. இங்கேயே இரு!” – மாறன்

“ஆமாம் உன்னால் என்னிடம் இருந்து ஓட முடியாது! ஹா ஹா ஹா! இதோ பார் உன் பின்னால் தான் நான் வருகிறேன்” என்றது அது!

அர்விந்த் இரு கைகளாலும் வயிற்றையும் நெஞ்சையும் பிடித்துக்கொண்டு ஓடினான். பயத்தில் அவன் பின்னால் திரும்பிக் பார்க்கவில்லை!

“முடியுமா? உன்னால் முடியுமா? என் கண்ணிலிருந்து உன்னால் தப்பித்து சென்ற விட முடியுமா?” கேள்விகளை கேட்டு அவனை விரட்ட அவன் “முடியும். நான் உன்னிடம் இருந்து சென்று விடுவேன்” அர்விந்த் சொன்னான். அந்தநொடியில் எங்கிருந்தோ வந்த லாரி ஒன்று அவன் மீது ஏறி சென்றது. உடல் நசுங்கி இறந்தான் அர்விந்த்!

“ஹா ஹா ஹா! உன்னால் தப்பிக்க முடியாது சொன்னேனே நான்” வெறிப்பிடித்த சிரிப்பு சத்தம் மட்டுமே அவ்விடத்தில் சிறிது நேரத்துக்கு கேட்டது!

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.