(Reading time: 70 - 139 minutes)

எங்கிருந்து வந்தது அந்த லாரி. அங்கு லாரி சென்றததுக்கு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது. அதே போல அரவிந்தனின் உடலிலும் லாரியுன் டயர் எரியதிற்கு எந்த தடயமும் இல்லை! வினோத் தீபனுக்கு அழைத்து சொல்ல, அவன் மாறனை அங்கே இருக்க சொல்லி வினோத்தை தான் இருக்கும் இடத்திற்கு வர சொன்னான். 

அந்த வீட்டினுள் செல்ல முடிவெடுத்து உள்ளே நுழையும்போது அவனுக்கு மகேனின் அழைப்பு வந்தது. ஏதாவது முக்கியமான செய்தியோ நினைத்து அதை உடனே எடுத்தான். தீபன் மகேனிடம் பேசினாலும் அவனது கண்கள் அந்த வீட்டினுள் செல்ல வழியை தேடியது. எதார்த்தமாக கதவின் மீது சாய அது திறந்துக்கொண்டது.

படுசுத்தமாக இருந்தது அந்த சின்ன வீடு. ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வந்தவனின் கைபேசியில் வந்த சத்தம் அதை எடுத்து பார்க்க வைத்தது. அவன் மட்டும் அங்கு தனியாக இருக்கிறான். அதனால் கைபேசியை அப்போது எடுக்க வேண்டிய நிலையில் இருந்தான். வாட்ஸ் அப்பிள் மகேன் அனுப்பிய தகவலை பார்த்து எச்சரிக்கையனான். வீட்டில் யாரும் இல்லை! ஆனால் உள்ளறையிலிருந்து சங்கலியின் சத்தம் மட்டும் வந்தது! தீபன் அந்த அறையை நோக்கி சென்றான்.

தீபன் அந்த அறையினுள் நுழைந்தான். சின்ன அறை அது. அந்த அறையில் உள்ள தரையில் பேஸ்மெண்ட்க்கு செல்லும் பாதை ஒன்று இருந்தது. மற்ற நேரத்தில் அங்கொரு பாதை இருப்பதை மறைக்கும் விதமாக கார்பெட் போட்டு அதற்கு மேல் கட்டில் ஒன்று போடப்பட்டு இருந்தது.

தீபன் பார்வையை சுற்ற விட்டான். அறையில் சில பூஜை பொருட்கள் பிளாஸ்டிக் பையில் இருந்தது. முக்கோண மேஜையில் சின்ன பிரேம் ஒன்று இருந்தது. மெல்ல நடந்து அதை எடுத்துப் பார்த்தான். அது ஆதியின் குடும்பப்படம். அது ஏன் இங்கிருக்கிறது? அதன் பக்கத்தில் ஓர் சாவி இருந்தது. அது எதனுடைய சாவி? அவன் நடக்கும் பொது "ஷ் ஷ் சத்தம் வர கூடாது" ஓர் ஆணின் குரலும் அதன் பின்னர்  "ம்ம்ம் மாமா" சிறு குழந்தையின் சத்தமும் கேட்டது. அவன் கீழே செல்லவில்லை.

பூஜை பொருட்கள் இருந்த பையை எடுத்துப் பார்த்தான். பில்லில் இன்றைய தேதி இருந்தது.  ஆக சற்று முன்னர் தான்  இப்பொருட்கள் வாங்கப்பட்டது.  தீபன் தனியாக கீழே இறங்க யோசித்தான். அங்கே அவனுக்கு என்ன காத்திருக்கிறதென தெரியாது. பேக்கப்க்கு யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தான்.

எது நடந்தாலும் பரவாயில்லை என நினைத்தவன், கீழே குனிந்து பேஸ்மெண்ட் எட்டிப்பார்த்தான். விளக்கு வெளிச்சத்தில் இடம் தெளிவாக தெரிந்தது. ஆனால் கீழே இருப்பவர்கள் யாரென தெரியவில்லை. ஒவ்வொரு அடியாய்  எடுத்து வைத்தான். மெல்ல படிகளில் இறங்கினான்.

சற்று முன்னர் இங்கே பேச்சு குரல் கேட்டது. ஆனால்  எங்கு ஒளிந்திருக்கிறார்கள்? அவனின் கண்களில் மூலையில் அங்கே சிறுவர்கள் படுக்கும் அளவில் ஓர் கட்டில் இருப்பது தெரிந்தது. எச்சரிக்கை உணர்வுடன் அதன் அருகே சென்று பார்த்தான். அதன் பக்கத்தில் கழிவறை இருந்தது. கட்டில் பக்கத்தில் உள்ள நாற்காலியின் மின்விசிரியும் இருந்தது.

தீபன் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனின் முன்னால் நிழல் விழுந்தது. அவனை பின்னாலிருந்து  அடிக்க போவது போல ஓர் உருவம் வந்துக் கொண்டிருந்தது. அதை பார்த்து சுதாகரித்தவன், அது எதிர்க்கும் முன்னர் திரும்பி அடித்தான்.

இதை அந்த புதியவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். நன்றாக அடித்து துவைத்த பின்னரே அவனிடம் "யார் நீ? எதுக்கு என்னை அடிக்க வந்தாய்? நீ தானே காட்டிலிருந்து இங்க ஓடி வந்தது?"

"அ.. ஆமா. நான் தான் ஓடி வந்தேன்?

"எதுக்கு எங்களிடம் இருந்து ஓடி வந்தாய்?"

"நீங்க அரவிந்த அடித்து கேள்வி கேட்டதை நான் பார்த்தேன்"

"ஆக அவங்களின் கூட்டத்தில் நீயும் ஒருத்தன்?"

'இல்ல. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. அவன் சொன்னதை மட்டும் தான் நான் செய்தேன்"

"என்ன செய்த? ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லிடு"

"அர்விந்த் எனக்கு பணம் குடுத்து ஆதியின் குழந்தை வினிதாவை கடத்த சொன்னான்"

"அம்மு தானே அவள் பெயர்"

"இல்லே. அது அவர்கள் கூப்பிடும் பெயர். உண்மையில் அவளின் பெயர் வினிதா. அரவிந்த் இந்த வீட்டை குழந்தையை கடத்தும் முன்பே கட்டிருந்தான். கடத்திய பிறகு அவளை இங்கு கொண்டு வர சொன்னான். வினிதா ரொம்ப அழுதாள் ஆதியின் குடும்ப படத்தை காட்டி அம்மா வந்து விடுவார்கள் என சொல்லி ஏமாத்த சொன்னான். வினிதாவை கடத்திய அன்றிரவு  நாங்கள் எதிர்பார்க்காதது எல்லாம் நடந்திருச்சி. கொஞ்ச காலம் இவளை இங்கேயே பத்திரமாக வைத்திருக்க சொன்னான். எனக்கு மாதா மாதம் பணம் குடுப்பான். அவ்வப்போது வினிதாவை வந்து பார்ப்பான். அவன் சொன்னதை மட்டும் தான் நான் செய்தேன். எனக்கு வேற ஏதும் தெரியாது."

"வினிதா எங்கே?"

"படிக்கட்டு பின்னால் இருக்கிறாள்"

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.