(Reading time: 70 - 139 minutes)

வினிதாவின் அண்ணியின் கையிலிருந்த குழந்தை தென்றல் தூக்கி நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள். அவளுக்கு தெரிந்தது இது அவளின் அம்மு @ வினிதா என ஆனால் குட்டி வினிதா அவளின் அணைப்பை ஏற்க மறுத்தது. வினிதாவின் அண்ணியுடன் செல்ல துடித்த குழந்தையை இருக்க நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

வினிதாவின் அண்ணி கையை நீட்டி குழந்தை தன்னிடம் தர கேட்க, அது தர மறுத்தது.  “என் மகள் ஓர் விபத்தில் இறந்து விட்டாள். அவள் இறந்த பின்னர் என் உலகம் மாறி போனது. அவளின் நினைவால் நான் செல்லும் இடம் முழுக்க அவளை தேடுகிறேன். என்னிடம் திரும்பி வர முடியாத தூரத்திற்கு அவள் சென்று விட்டாள் என்பதை என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உன் மகளுக்கு யாரும் இல்லை. அவளை என்னிடம் குடு நான் என் மகளாக பார்த்துக்கொள்கிறேன்” கண்களின் கண்ணீர் வழிய, கண்களிலும் ஏக்கத்துடன் தென்றலை பார்த்துக்கொண்டிருந்தார்.

குழந்தையும் இவரிடம் வர செல்ல இருப்பதை தென்றலுக்கு புரிந்தது. அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளின் முகத்தை பார்க்காமல் வினிதாவின் அண்ணியை பார்த்து அவளை தூக்க சொல்லி கையை நிட்டிக் கொண்டிருந்தாள்.

தென்றலின் விழிகள் குழந்தையை விட்டு அகலவில்லை. எவ்வளவு நேரம் அவர்கள் அப்படியே நின்றிருந்தனர் அறியவில்லை. அனைவரின் பார்வையும் தென்றலின் மேல் நிலைத்திருந்த நேரத்தில், அங்கு மரத்தின் மேல் மின்னல் தாக்கியது. நல்ல வேளையாய் அவர்கள் அனைவரும் சற்று தள்ளி இருப்பதால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்தது.

அந்த சமயத்தை ரூபனின் அப்பா பயன்படுத்திக் கொண்டார். அவர் கையிலிருந்த மந்தரித்த தண்ணீரை வினிதாவின் மீது தெளிக்க, தென்றல் வினிதாவின் உடலிருந்து வெளியேறியது. அவர் வினிதாவை நெருங்கும் போதே கவனித்த மகேன் வினிதாவின் பக்கத்தில் சென்று நின்றான். அவள் மயங்கி கீழே விழுகையில் அவனால் இரு வினிதாக்களையும் பிடிக்க முடிந்தது. வினிதாவின் அண்ணி குட்டி வினிதாவை தூக்கிக்கொள்ள, மகேன் வினிதாவை கையில் ஏந்திக்கொண்டான்.

அவர்கள் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். ரூபனின் அப்பா மீண்டும் ஓர் முறை  மந்தரித்த தண்ணீரை வினிதாவின் மேல் தெளிக்க அங்கே ஆக்ரோஷமாக சிரிப்பு சத்தம் கேட்டது.

தென்றலின் ஆன்மா இங்கிருக்கும் வரை அவரால் ஏதும் செய்ய முடியாதென அவருக்கு புரிந்தது. ரூபனின் அப்பா மகேனை பார்த்து “நீங்கள் இடுகாட்டுக்கு போங்க. அவர்களுக்கு யார் இறுதி மரியாதையை செய்யனும் நினைக்காரவங்க போங்க. இங்கே ரெண்டு பேர் வினிதாவிற்கு துணையாக இருங்க. நான் பூஜையில் அமரனும்” என்றார். ரூபனின் அப்பா, சித்ரா,மாறனை தவிர மற்ற எல்லோரும் அங்கே சென்றனர்.

“எனக்கு என் அம்மு வேண்டும்! குடு! அவளை எங்கே தூக்கிட்டு போறீங்க? உங்களையும் நான் விட மாட்டேன்” செல்லும் வழி முழுக்க அவர்களுக்கு தென்றலின் குரல் கேட்டது. யாரும் அதை கேட்டதை போல கட்டிக்கொள்ளவில்லை.

ரூபன் இடுகாட்டில் எல்லா வேலையும் செய்து முடித்திருந்தான். அவனும் சாங்கியம் செய்பவரும் மற்றவர்களுக்காக காத்திருந்தனர். அவர்கள் அங்கு சென்று சேர்கையில் எல்லாம் தயாரான நிலையில் இருந்தது.

அங்கு சென்றவுடன் மகேன் வினிதாவின் அண்ணியிடம் இருந்து குழந்தையை வாங்க அவள் அவனிடம் செல்ல மறுத்தாள். வினிதாவின் அண்ணியிடம் ஓர் அரவணைப்பை அவள் உணர்வதால் மற்றவர்களிடம் செல்ல மறுக்கிறாள். அதை உணர்த்துக்கொண்ட மகேன்   “ஒன்னும் இல்லே டா. பயப்படாமல் என்னுடன் வா” என்றவன் வலுக்கட்டாயமாக குழந்தையை வாங்கிக்கொண்டான்.

அங்கு என்ன நடக்கிறது என்பதை அவளால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை.தோண்டி எடுக்கப் பட்ட புவியின் எலும்புக்கூடு அது துணியால் சுற்றப் பட்டு இருந்தது. மருத்தவமனையில் எடுத்து வரப்பட்டு இருந்த ஆதியின் உடலும் வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்தது. அந்த பிஞ்சு குழந்தையால் அவர்களுக்கு ஈம காரியம் செய்யப்பட்டது. அவளின் பெற்றோர்களுக்கு தான் இதை செய்திறோம் என்பதை அவள் தெரியாமலே அழுதுக்கொண்டிருந்தாள் குட்டி வினிதா.

அங்கே உள்ள அனைவருக்கும் தென்றலின் அழுக்குரல் கேட்டது! யாரும் சத்தம் வரும் திசையை திரும்பிப்பார்க்கவில்லை!

“ஆ..தி.. ஆதி…” தன் கணவனின் அருவத்தை பார்த்து கண்ணீர் வடித்தாள் புவி(தென்றல்). ஒரு கணம் தானும் உயிரோடு இல்லை என்பதையே மறந்துதான் போனாள்.

எதிரில் இருந்தவன், தன்னவன்! தனது ஆருயிர் கணவன் என்ற எண்ணமே வியாபிக்க, அவனை அணைத்துக்கொள்ள முயற்சித்தாள் அவள். ஆதியும் அவளைப் போலத்தான்! அவளை காதலின் வேகத்தோடு நெருங்கினான். இருவருமே தங்களது நிலையை எண்ணி அழுதனர். இருவரின் அழுகுரலும் மற்றவர்களுக்கு கேட்டது.

“நாம என்ன தப்பு பண்ணோம் ஆதி? இப்படி எல்லாம் கலைஞ்சு போச்சே”

“அழாத புவி. வாழும்போது சேர்ந்துதான் வாழ்ந்தோம். செத்தும் ஒன்னாத்தானே இருக்கோம்? இந்த வாழ்க்கை எல்லாருக்கும் அமையுமா சொல்லு?”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.