(Reading time: 70 - 139 minutes)

அதனுடன் பேசினாலும் ரூபனின் கண்கள் அந்த வீட்டையே அலசியது. அனைத்து கண்ணாடி பொருட்களும் உடைத்த நிலையில் இவள் ஏன் இன்னும் சுவறை சுரண்ட வேண்டும்.அவனின் காதுகளில் நகத்தினால் சுவற்றை சுரண்டும் சத்தமும் அதனுடன் இன்னொரு சத்தமும் கேட்டது. அது என்ன? எங்கு இருந்து வருகிறது? ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் அதிர்ந்து “டேய் மகேன் சிக்கிரம் அந்த இடத்தை விட்டு நகர்த்து போ” என்றவன் மேலே பார்த்து கத்தினான்.

மகேன் மேலே அண்ணார்ந்து பார்த்து திகைத்து போனான். அவர்கள் தலைக்கு மேலிருந்த சரவிளக்கு ஊஞ்சலாடியது. அது கிரிஸ்டல் கற்கள் நிறைத்த அலங்கார விளக்கு. அது அவர்களின் மேல் விழுந்தால் கண்டிப்பாக இருவரின் ஒருவருக்கு மரணம் உறுதி!

மகேன் அதை பார்த்துக் கொண்டிருக்கையிலே, வினிதாவின் உருவத்திலிருந்த அந்த பேய் தன்னை மிக சிறிய உருவத்திற்கு மாற்றிக்கொண்டது. அது அந்த சரவிளக்கு மேல் அமர்ந்து மெல்ல ஊஞ்சல் ஆடியது. அது அதன்மேல் அமர்ந்ததும் அந்த சரவிளக்கு இன்னும் வேகமாக ஆடியது.

அதை பார்த்த மூவருக்கும் அதிர்ச்சியே! எப்படி ஒரு மனிதனால் இப்படி தனது உருவத்தின் அளவை மாற்றிக் கொள்ள முடியும்.

தங்களின் முன்னால் இருப்பது வினிதாவா? அல்லது அன்று வீட்டில் வித்தை காட்டியது போல் இன்றும் அதே போன்ற இன்னொரு வித்தையை காண்பிக்கிறதா அது.எதை நம்புவது இங்கு தங்களின் முன்னால் இருப்பது யார்? விடை தெரியாத கேள்விகளை தங்களுக்குள் கேட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து நின்றனர். பாவம் அது வினிதா ரூபத்தில் இருக்கும் பேய்யேன மறந்து போயினர்.

சரவிளக்கு இன்னும் வேகமாக ஆடியது. அவ்விளக்கில் இருந்த சின்ன சின்ன கிரிஸ்டல் கற்கள், சங்கலிகள் சுவற்றிலிருந்து கீழே விழுந்தது! அதை அவர்கள் உணரவும் இல்லை! ரூபனின் எண்ணம் முழுக்க அந்த சிறிய உருவத்திலே இருக்க, மகேன் தன் தலைக்கு மேலிருக்கும் ஆபத்தை மறந்து போனான்.

சரவிளக்கு கொஞ்சம் கொஞ்சமாக சுவற்றிலிருந்து கழண்டது. மகேன் கலைவாணனை தன் பக்கம் இழுக்க முயற்சித்தான். அதற்குள் அது கீழே விழுகையில் ரூபன் மகேனின் பக்கம் செல்ல அதற்குள் அவர்களை யாரோ பின்னாலிருந்து தள்ளி விட்டது. இதை எதிர்பார்க்காததால் இருவருமே தடு மாறி தரையில் விழுகையில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தரையில் விழுந்ததில் இருவருக்குமே கண்ணாடி துண்டுகள் குத்தியது. கை காலை ஊன முடியாமல் இருக்க, உடலில் வேறு அங்கங்கே சின்ன காயங்கள். வலியை பொறுத்துக்கொண்டு உடலிலும் காலிலும் குத்திய கண்ணாடி துண்டுகளை அகற்றி அந்த கயவனை பார்த்தனர்.

அந்த சரவிளக்கு முழுவதும் கலைவாணனின் மேல் விழுந்து இருந்தது. அவனிடம் இருந்த ஒரு அசைவும் இல்லை. ஆனால் நெஞ்சு பகுதி மட்டும் மேலே ஏறி கீழே இறங்குவதை வைத்து அவனுக்கு இன்னும் உயிர் இருப்பதை தெரிந்துக் கொண்டனர்.

கயவன் 2

ர்விந்த் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவனுக்கு தெரியும் அடுத்தது சொன்னால் அவர்கள் அவனை உண்டுயில்லை என ஆக்கி விடுவார்கள் என்பதை உணந்த்திருந்தான். ஆகையால் அவன் வாயை திறக்கவில்லை. மாறன் அந்த கிளையை கொண்டு அரவிந்தை அடிதான். வலியில் கத்தினனே தவிர ஏதும் சொல்ல மறுத்தான்.

வலியை பொறுக்க முடியாமல் “ரொம்ப வலிக்குது ! அடிக்காதிங்க” மாறனிடம் கெஞ்சினான்.

“நாங்க உன்னை அடிக்காமல் இருக்கணும்னா உண்மையை சொல்!” மாறன் அடித்ததில் அர்விந்தின் உடலில் அங்கங்கே ரத்த காயங்கள். பயந்துக் கொண்டே ஒவ்வொரு வார்த்தையும் தேடி உண்மையை சொல்ல அதை கேட்ட மூவருமே அதிர்ந்தனர்!

“ஏன்டா இப்படி நடந்துகறீங்க. உன்னை தூக்கி நெருப்பில் போட்டால் நீ தீப்புண் காயமின்றி வந்திடுவியாடா? படிச்சவன் தானே நீ. கொஞ்சம் கூடவா அறிவில்லாமல் இருந்திருக்க. பாவம் சின்ன குழந்தையை போய்.” மூவரும் அவனை சரமாரியாக தாக்கினர்.   

“தீபன் இவனை கஸ்டடிக்கு கொண்டு போகலாம். இவனுக்கு பின்னால் இருக்கும் கும்பலை பற்றி தெரிந்துக் கொண்டு அவர்களையும் கைது செய்யணும்”

மனம் ஆற மறுத்தது மூவருக்கும். இதை எப்படி இவர்களால் செய்ய முடிந்தது. பல கேஸ்களை பார்த்து இருந்தவர்களுக்கு இந்த குழந்தையை கடத்தி கொலை செய்ததை ஏத்துக்கமுடியவில்லை. சில நேரங்களில் நினைப்பது இவர்களை எல்லாம் நடுரோட்டில் சுட்டு தள்ள வேண்டும் என்று. அதை இப்போது செயல் படுத்தினால் என்ன தோன்றிய அடுத்த நொடியே இவனுக்கு பின்னால் ஒளிந்து இருப்பவரை பிடிக்க வேண்டும் என கடமை உணர்த்தியது.

“அவனுங்க எங்க இருகாங்க”– தீபன்

“யாரு”

“அந்த போலீஸ்காரனும் டாக்டரும்” – தீபன்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.