(Reading time: 70 - 139 minutes)

“இவர்களுக்கு எப்படி தென்றலை தெரியும்?” மனதில் நினைப்பதாக நினைத்துக்கொண்டு அதை வாய்விட்டே சொன்னான். பயத்தில் அவனே தென்றலின் பெயரை சொன்னான்.

“ஆதி தான் எங்களிடம் சொன்னான். தென்றலையும், குழந்தையும் மற்றும் உன்னை பற்றியும் சொன்னான்” – ரூபன். மகேன் சொன்ன பொய்யை வைத்து இவர்கள் மேலும் கதை விட்டனர் கலைவாணனிடம்.

தான் மாட்டிக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை கலைவாணனால்! இது எப்படி நடந்தது? இவ்வளவு வருடங்கள் இல்லாமல் திடீரென எப்படி இப்பிரச்சனை எழுந்தது? பொறியில் சிக்கிய எலியை போல உணர்ந்தான் அவன். என்ன சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்பதை கூட யோசிக்கமுடியவில்லை அவனால். அர்விந்த் மேல் ஆத்திரம் வந்தது. தன்னை இத்தனை வருடம் ஏமாற்றிவிட்டதால்! 

பல வருடங்கள் மறைந்திருந்த திருடன் இன்று மாட்டிக்கொண்டான். பயத்தின் விளைவால் வியர்வை மழையில் நனைந்து நின்றான் அவன். தலை குனிந்து அவன் நிற்க, உடலில் உள்ள சத்தி எல்லாம் வடிந்து எப்போது வேணும்னாலும் கீழே விழும் நிலையில் இருந்தான்.

மகேன் கலைவாணனின் ஒவ்வொரு அசைவையும் பார்த்த படி நின்றான். மெல்ல அவனை நெருங்கையில் “ஹா ஹா ஹா.. ஆமாடா அது நீயில்லை! நீ இல்லைதான்! ஹா ஹா ஹா.. ஆனா அவன் உன்னை போல இருப்பான்!” திடீரென்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

அதை கேட்ட நொடியிலிருந்து கலைவாணனின் முகம் மாறியது. அதுவரை கண்களில் மட்டும் இருந்த பயம் இப்போ முகத்திலும் அப்பட்டமாக தெரிய, அவனின் உடலில் நடுக்கம் தோன்றி நிற்க முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்திட்டான். மகேனுக்கு இந்த குரல் நன்கு பரிச்சியமான குரல் போல தோன்றியது. சற்று யோசித்தவனின் கண்கள் பளிச்சிட்டது அது அந்த பேயின் குரல்!

மகேனுக்கு அவர்கள் தேடி வந்த குள்ளநரி இவன்தான் என புரிந்தது. “இது தென்றலில் குரல் தானே! உன் வீட்டில் தென்றலில் குரல் கேட்குதுனா, கண்டிப்பா உனக்கு இதில் ஏதோ சம்பந்தம் இருக்கு.” அவன் உறுதியாக சொன்னான்.

“இல்.. இல்ல நீங்.. நீங்க இடம் மாறி வந்து இருக்கீங்க” இன்னமும் அவனால் உண்மையை ஒத்துக்கொள்ள முடியவில்லை!

“டேய் எங்களை பார்த்தா உனக்கு கேனையனுங்க மாதிரி தெரியுதா? ஒழுங்கு மரியாதையா எங்க கேள்விக்கு பதில் சொல்லிவிடு. இல்லனா இங்க போலீஸ்தான் வரும்”. ரூபன் கோபத்தில் அவனை அடிக்க போனான்.

“நீ கேள்வி கேட்டா நான் பதில் சொல்லனுமா? சொல்ல முடியாது! யாருடா நீங்க போலீசா? இல்லை தானே. நான் சொல்ல வேண்டியதை எல்லாம் எப்போவோ போலீசிடம் தெளிவா சொல்லியாச்சு. உன்கிட்ட நான் எதுக்கு சொல்லணும்?” அவன் ரூபனின் கையை தட்டி விட்டு கோபத்தில் அவர்களிடம் எகிறினான்.

“இப்போ ஒரு தடவை மீண்டும் சொல்லலாமே” மகேன் தன்மையாக அவனிடம் கேட்டான்

“உனக்கு தெரியனும்னா அங்க போய் கேட்டு தெரிந்துக்கொள்! அதை விட்டு இங்க என்னிடம் சத்தம் போடாத!” கலைவாணன் கோபத்திலும் பதற்றத்திலும் இருந்தான். என்னதான் அவர்களிடம் எகிறினாலும் அவனின் இதயம் பந்தய குதிரையை போல அதி வேகமாக துடித்தது! அவனின் கண்கள் பயத்துடன் எதையோ தேடி இங்கும் அங்கும் அலைபாய்ந்தது.

“சரி நீ சொன்ன மாதிரி நாங்க அங்க போய் கேட்டு தெரிந்துக்குறோம்! ஆனா இப்போ இங்க ஒரு பெண்ணின் குரல் கேட்டதே! அதை மட்டும் சொல்லிடு. அந்த பொண்ணு யார்ன்னு? நாங்க இப்போதே இங்கிருந்து கிளம்பறோம். இங்க நம் மூவரை தவிர வேற யாருமில்லையே. அப்படி இருக்கையில் அந்த சத்தம் எங்கிருந்து வந்தது?” மகேன் அவனின் முக மாற்றத்தை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு கேள்விகளையும் கேட்டான்.

கயவன் 2

ரவிந்தின் கார் எங்கு செல்கிறதென யாராலும் யூகிக்க முடியவில்லை. அவர்கள் முடிந்த வரைக்கும் அவனுக்கு சந்தேகம் வராத அளவிற்கு பின் தொடர்ந்தனர். ஓரிடத்தில் சாலை ஓரத்தில் காரை நிறுத்தி எங்கும் செல்லாமல் சிறிது நேரம் அங்கேயே இருந்தான். பின் காரை ஓர் ஒற்றை அடி பாதையில் பயணிக்க, மற்றவர்கள் அவனை பின் தொடர முடியாமல் அங்கேயே இருந்தனர்.

“இப்போ என்ன பண்ணறது?” – மாறன்

“இது நேர் பாதை நாம் பின்னால் செல்ல முடியாது.” – தீபன்

“நாம் இங்கேயே வெயிட் பண்ணுவோம். அந்த பாதையில் சென்றால் அருகிலுள்ள காடுக்குள் செல்ல முடியும். ஆனால் சமீபத்தில் தான் யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு முற்கள் கொண்ட வெளியை போட்டனர்.” – வினோத்

“உண்மையாகவா? உனக்கு எப்படி தெரியும்?” – தீபன்

“சென்ற வாரம் இந்த பாதையில் தான் ஒருவனை கைது செய்தேன். அவன் தப்பிக்க அந்த காட்டை நோக்கி ஓடினான். அந்த முற்கள் வெளியை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அப்போது தான் எனக்கும் தெரிந்தது. அர்விந்தால் எங்கும் செல்ல முடியாது. அவன் கண்டிப்பாக திருப்பி வந்தாக வேண்டும்”. – வினோத்  

“சரி. நாம் இங்கேயே காத்திருப்போம்” – தீபன்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.