(Reading time: 70 - 139 minutes)

அவர்கள் நிற்கும் இடத்தில் இருந்த படியே ஹாலில் உள்ள ரெடியோவில் ரெகார்ட் பண்ணின டேப் ஏதும் ப்ளே பண்ணி இருக்கிறதா என ரூபன்  அதையே உற்றுப் பார்துக்கொண்டிருதான். ஆனால் ரேடியோவின் சுவிச்ட் அடைக்கப்பட்டு இருந்தது. இது ரூபனுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.

அவனை புரிந்துக் கொண்டது போல, “ஹா ஹா. நான் தான் பேசறேன். எங்க இருக்கேன் மட்டும் கண்டு பிடி!” என்றது. அங்கே மீண்டும் சிரிப்பொலி கேட்டது ஆனா எதற்கு என்பது தெரியவில்லை. அது தன் பங்குக்கு ரூபனை மேலும் குழப்பிவிட்டது.

“இங்கே பாரு எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. ஒழுங்கா நீ சொல்லிவிட்டால் உனக்கு நல்லது. எப்படி அவர்கள் போனதை யாரும் பார்க்காமல் இருப்பாங்க?”. அங்கே ஓர் பெண்ணின் குரலை கேட்டது போல மகேன் காட்டிக்கொள்ளவில்லை.

பதில் சொல்ல முடியாமல் எச்சிலை முழிங்கினான் கலைவாணன். முகத்தில் முத்து முத்தாய் வேர்வை துளிகள். சொல்லி விடலாமா வேண்டாமா என்ற பாவனையில் அவனின் முக மாற்றங்கள். கண்களில் மட்டும் பயம் இருந்தது. வேர்வைகளை துடைத்துக்கொண்டவன், அங்கிருந்த தண்ணீரை அருந்தினான்.

மனம் மட்டும் ஒரே சிந்தனையில் சிக்கி தவித்தது. கடந்த சில நாட்களாக அங்கு நடக்கும் பல நிகழ்வுகள் எல்லாம் அவனுக்கு மிகுந்த அச்சத்தை கொடுத்திருந்தது. என்ன ஏதென்று புரியாமலே அவனின் மனைவியும் பிள்ளைகளும் அந்த வீட்டை வீட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் அவர்கள் யாரும் அங்கு வரவும் இல்லை. காரணம் தெரியாதனால் அவனின் குழப்பம் அதிகரித்தது தவிர குறையவில்லை.

கலைவாணனின் குடும்பத்தினர் அந்த வீட்டை விட்டு சென்ற பின்னர் ஓர் பெண் அந்த வீட்டையே சுற்றி சுற்றி வருவதும், திடீரென வீட்டின் பின் புறத்தில் கேட்கும் அழும் சத்தமும் அவன் சற்று பயந்துதிருந்தான். இப்போ எங்கிருந்தோ வந்த அந்த கட்டையும் சிரிப்பொலியும் திடீர் திடீரென தங்களுடன் பேசும் சத்தமும் அவனை மேலும் பய முறித்தியது.

“அது.. அது..” அவன் திக்கி திணற அவனே சொல்லட்டும் என அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். “எங்களின் மிரட்டலையும் மீறி ஆதி பாப்பாவை காணவில்லைன்னு போலீசிடம் கம்ப்ளைன்ட் செய்தான். அவன் வேகமாக பைக்கில் வீடுக்கு  திரும்பிக் கொண்டிருகையில், நாங்கள் காரினால் அந்த பைக்கின் பின்னால் மோத தடுமாறி ரோட்டில்  விழுந்தான்.”

“அப்பறம்” – ரூபன்

“அவன் போட்டிருந்த ஹல்மெட் கழற்றி அதை வைத்து அவனை நாங்க சரமாரியாக அடித்து போட்டு அங்கிருந்து சென்று விட்டோம். நாங்கள் அங்கிருந்து போகும் பொது அவன் மயக்கத்திலும் உயிருடன் இருந்தான்”

“ஏன்?”  மகேனின் ஒற்றை கேள்வியில் தேங்கிருந்த கோபமும் முகத்தில் தெரிந்த வெறுப்பும் அவனுக்கு அடுத்து சொல்ல வேண்டிய வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கிக் கொண்டது போல இருந்தது.

“அது... அது வந்து...”

“என்ன செய்திங்கன்னு மறந்துட்டியா”? – ரூபன்

“அவன் சொல்ல மாட்டான்! ஏன்னா அவன் என் ஆதியை கொன்னுட்டான்!” ஓர் பெண்ணின் குரல் அழுகையுடன் கேட்டது

“இல்ல.. நான் இல்ல.. எங்களுக்கு அந்த பாப்பா மட்டும் வேணும். நாங்க ஆதியிடம் பேரமும் பேசினோம். அவன் ஏதுக்கும் ஒத்துக்கவில்லை, மிரட்டிப் பார்த்தோம் அவன் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டான். என் கூட்டாளி தான் அவன் உயிருடன் இருந்தால் நமக்கு ஆபத்து அதனால ஆதியை கொன்று விடலாம் என்ற ஐடியா குடுத்தான்” என சொல்லிக்கொண்டு இருக்கையிலே அவனுக்கு விழுந்தது ரூபனின் முதல் அடி. வழியை தாங்காமல் சுருண்டு கீழே விழுந்தான் கலைவாணன்.

“அவன் பேரு என்ன?” -  மகேன்

“அர்விந்த்”

“நினைச்சேன் அவனாதான் இருக்கும் என்று, அவன் ஆதியோட ப்ரண்ட் தானே?”. ஆம் என அவன் தலை அசைக்க, மகேன் அவனின் சட்டை காலரை பற்றிக்கொண்டான்.

கயவன் 2

வர்களும் எந்த சத்தமும் இல்லாமல் பின் தொடர்ந்தனர். மூவரின் போனும் சைலென்ட் மோட்டில் இருந்தது. சத்தமில்லாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மாறனின் கவன சிதறலால் கீழே உடைந்து கிடந்த ஒரு கிளையில் மிதித்து, தடுமாறி மரத்தின் வேரில் கால் இடறி கீழே விழந்தான்.

அந்த சத்தம் கேட்டு பின்னால் திரும்பிப்பார்த்த அரவிந்த் ஓட்டம் பிடிக்க, மற்றவர்கள் அவனை தூரத்தினர். கண் மண் தெரியாமல் ஓடியவன் இறுதியாக அவனும் மரத்தின் வேரில் கால் மாட்டி இடறி கீழே விழந்தான். அவர்கள் மூவரும் அவனை சுற்றி வளைத்தனர்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.