(Reading time: 70 - 139 minutes)

“நீயும்! அவனுக்கு துணையா இருந்திருக்க. துரோகி உன்னையும் விட மாட்டேன்!” என்றது. அதன் குரலில் இருந்த வெறி அங்கு ஏதோ நடக்கவிருக்கும் ஆபத்தை உணர்த்தியது அவர்களுக்கு!

வினிதாவின் கண்களை சுற்றி ரத்த கலராய் மாறியது. வெள்ளை விழிகள் இப்போது அடர் சிவப்பு நிறத்தில் இருந்தது! அவளின் முகம் வேறொருவரின் முகத்திற்கு மாறியது. அதன் கழுத்திலிருந்து ரத்தம் வழிந்தது!

கயவன் 2

யாரின் குழந்தையை?” அதன் பின் அவன் ஏதோ சொல்ல வந்தான். ஆனால் சொல்லி முடிக்கவில்லை. எதிர்பார்க்காத நேரத்தில் அவனுக்கு விழுந்தது முதல் அடி. 

“ஒழுங்கா உண்மையை சொல்லிட்டால் அடி விழுவது குறையும். எப்படி வசதி? என்ன சொல்லறியா?”– வினோத்

“என்ன சொல்லணும்?” பயந்து ஒலித்தது அவனின் குரல்.

“இந்த கிரிமினல் வேலைக்கு உனக்கு யார் உதவியது? எப்படி ஆதி ஹாஸ்பிட்டலில் இருக்கும் விபரம் யாருக்கும் தெரியாமல் போனது? – தீபன்

“எங்களுக்கு யாரும் உதவில்லையே” பின்னாலிருந்த வினோத் அவனின் முட்டிக் காலில் ஏத்த கீழே விழுந்தான் அர்விந்த்.

“நாங்க எல்லா பக்கமும் விசாரித்து தான் உன்னை தேடி வந்ததே! மகேன் அங்கே கலைவாணனின் வீட்டில் இருக்கிறான். அதனால் எங்களுடைய கேள்விக்கு பதில் சொல்லிவிடு” எச்சரித்தனர் அவனை.

அர்விந்திற்கு இனி இவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என புரிந்தது. “எங்களுக்கு ஆதியின் குழந்தை தேவை அதனால் கடத்தனோம். அவன் எப்படியும் போலீஸ்க்கு போவான்னு தெரியும்! அதனால் முதலிலேயே அந்த ஏரியா போலீஸ்காரனிடம் பேசி பணம் கொடுத்திருந்தோம். கலைவாணனுக்கு பண பலம் நிறைய இருக்கு அதை வைத்து அந்த போலீஸ்காரனுக்கு பணத்தாசை காட்டி எங்களின் வழிக்கு கொண்டு வந்தோம்”

“அவ்வளவு தானா. இன்னும் நிறைய இருக்கே! ஆதியை ஹாஸ்பிட்டலுக்கு சேர்த்தது யாரு?”

“நான் தான். தோப்பா முடி, தாடி வைத்து அங்கே சென்று அவனை சேர்த்து விட்டு வந்துட்டேன். நாங்க பணம் குடுத்த போலீஸ்காரனுக்கு அந்த ஹாஸ்பிட்டலில் வேலை செய்யும் டாக்டர் ஒருவரை தெரியும். அதை பயன்படுத்துக்கிட்டோம்.

“ஏன் அப்படி திருட்டு தனமா செய்திங்க?” – வினோத்

“ஆக்சிடண்ட் பற்றி நியூஸ்சில் வந்தால், என்னுடன் வேலை செய்பவர்களுக்கு தெரிந்து விடும். அவர்கள் யாராவது வேறு எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால் நாங்கள் மாட்டிக்கொள்வோம். அதற்கு பயந்து தான் ஆதியை மருத்துவமனையில் சேர்த்தது! ஆனா.. “ என்றவன் அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் அமைதியானான்.

“ஆனா என்ன?” தீபன் கேட்க கொஞ்ச நேரம் அர்விந்த் அமைதியாக இருந்தான். மூவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, மாறன் கீழே உடைந்து கிடந்த கிளையை எடுத்தான். அரவிந்தை அடிப்பது போல கையை ஓங்கினான்.

“ஆனால் கலைவாணனுக்கு ஆதி உயிருடன் அந்த மருத்துவமனையில் இருப்பது தெரியாது!கலைவாணனிடம் எப்போதும் பணம் வாங்கி ஹாஸ்பிட்டல் பில் கட்டுவோம்.”

“அப்பறம் எப்படி அவன் நீங்க பணம் கேட்கும் போது எல்லாம் குடுத்தான்?”– வினோத்

“மிரட்டுவோம்! தென்றலை கொலை செய்யும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை! ஆனால் அன்றைக்கு எங்களை மீறி எல்லாம் நடந்து முடிந்தது! அவளின் உடலை மறைக்கவே நாங்க ரொம்பவே கஷ்டப்பட வேண்டிருந்தது. கேஸ் ரொம்ப மோவ் ஆகாமல் இருக்க நிறைய பணம் செலவு பண்ணனோம்! எங்களுக்கு பயந்தும் அவனுக்கு நிறைய பணத்தாசை காட்டியும் எங்களின் காரியத்தை சாதித்துக் கொண்டோம்!

“எதுக்கு எப்படி எல்லாம் பண்ணிங்க”– தீபன்

கயவன் 1

ங்கே அவர்களுக்கு “த்ர்.. த்ர்... த்ர்... தப்...” சத்தம் மட்டுமே கேட்டது. அது என்ன ஏது என்பதை அவர்கள் உணரும் மூன்பே அங்கிருந்த ஒவ்வொரு ஜன்னலும் உடைந்தது சிதறியது! அப்பொழுது தான் மகேன் அதை கவனித்தான். அந்த பேய் தன் நகத்தால் பல முறை சுவற்றை சுரண்டிய பின்னர், ஒரு முறை அதை தட்டுகையில் அதன் அதிர்வினால் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு கண்ணாடி பொருட்களூம் உடைந்து சிதறியது.

அவர்கள் நிற்கும் இடத்தை சுற்றி ஒரு இன்ச் கூட நகர முடியாத அளவிற்கு கண்ணாடி துண்டுகள் சில் சிதுளாய் சிதறி இருந்தது.அவர்கள் என்ன செய்வது தென தெரியாமல் நின்றனர்.

ஜன்னல்கள் உடைந்து சிதறுகையில் அவர்கள் மேல் பட்டதில், முவருமே ரத்த காயத்தில் இருந்தனர். ரூபனுக்கு காலில் கண்ணாடி குத்தி அதிலிருந்து ரத்தம் வர, அதை வெளியே எடுக்க முடியாமல் நின்றான்.

காலில் குத்திய கண்ணாடியால் அவனுக்கு மிகவும் வலித்து. “உனக்கு என்னதான் வேண்டும்?. இவனை விட்டு விடு! நாங்கள் இவனை போலீசிடம் ஒப்படைக்குறோம். சட்டம் இவனுக்கு சரியான தண்டனை தரும்” வலியில் அந்த பேயிடம் பேரம் பேசினான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.