(Reading time: 70 - 139 minutes)

மூவரும் அரவிந்தனின் வருகைக்காக காத்திருக்க, அங்கே அரவிந்தனோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான். “ச்ச.. இந்த பாதையை எப்போது மூடினார்கள். போன தடவை இங்கு வந்தபோது நல்லாதானே இருந்தது. இது தான் குறுக்கு பாதை வேற. இப்போ இப்படி அங்கு செல்லுவது”. காரை விட்டு இறங்கி வெளியின் அருகே சென்று பார்த்தான். உள்ளே செல்லும் சிறு வழி கூட அங்கே இல்லை.

“இவன்கிட்ட ஃபோனில் பேசும்போதுகூட இவன் ஏதும் சொல்லலயே. என்ன பண்ணுறது இப்போ?”. கோபத்தில் காரின் டயரை எத்தினான். பயம் மட்டுமே இப்போது அவனை ஆட்சி செய்தது. தனக்கு இப்போ வேறு வழியே இல்லை என உணர்ந்தவன். சுற்று பாதை வழியாக செல்ல முடிவெடுத்தான்.

சீறிப்பாய்ந்தது அரவிந்தனின் கார். எவ்வளவு சிக்கிரம் செல்ல வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் அவன் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவனை காரை வேகமாக செலுத்த வைத்தது. காற்றை கிழித்துக்கொண்டு சென்றது அவனின் கார். அவன் வர வேண்டிய இடத்துக்கு நெருங்கி விட்டான். சிக்னல் போட்டு வளையும்போது தான் அவனின் பின்னால் மூன்று கார்கள் வருவதை பார்த்தான்.

யார் இவர்கள் எவ்வளவு நேரம் தன் பின்னால் வருகிறார்கள் என தெரியாமல் அடுத்து என்ன செய்வது என யோசித்தான்.அர்விந்த் காரின் வேகத்தை குறைத்துக் கொண்டே அவன் பின்னால் வரும் காரையும் பார்த்தான்.

தீபன் அதை கவனித்திடவே “அவன் நம்மள பார்த்துவிட்டான். வரும் முதல் வளைவில் நான் செல்லுகிறேன். நீங்க கவனமாக அவன் பின்னால் வாங்க”  என சொல்லி காரை வேறு பக்கம் செலுத்தினான்.

தீபனின் கார் வேறு பக்கம் சென்றதை பார்த்த அர்விந்த்க்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால் அவனுக்கு பின்னால் இரு கார்கள் வருவதை பார்க்க கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. அர்விந்த் காட்டை நோக்கி செல்லும் ஒற்றை அடி பாதையில் செல்ல இருப்பதை புரிந்துக்கொண்டவர்கள் வேறு பாதையில் பயணித்தனர். அதை பார்த்த அர்விந்த் நிம்மதி பெருமுச்சி விட்டான்.

அவர்களுக்கு அவன் காட்டை நோக்கி செல்லுகிறான் என தெரிந்ததால் தீபன் வெளி வழியாக சென்றான். தீபன் சென்றது குறுக்கு பாதை என்பதால் அவன் அவர்களுக்கு முன்னே சென்று காரை ஓர் ஓரம் நிறுத்தி அவர்களுக்குகாக காத்திருந்தான்.

மற்றவர்களுக்காக காத்திருந்த தீபனின் மனதில் சில கேள்விகள் தோன்றியது. அர்விந்த் ஏன் இங்கு வர வேண்டும். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றால் கலைவாணனின் வீடுக்கு சென்று விடலாம். அப்படியானால் இவனுக்கு அங்கு செய்ய வேண்டிய வேலை ஏதாவது இருக்க வேண்டும். அதன் பின்னர் அவன் கலைவாணன் வீடுக்கு செல்ல நினைத்திருக்கலாம். ஒரு வேலை அவன் அங்கு செல்ல இருந்தால் கண்டிப்பாக ரூபனிடம் தெரிவிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

இடத்தை நெருங்கியவன் காரை ஓரிடத்தில் பார்க் செய்து காட்டினுள் நடந்தான். அவன் அங்கே தான் வர வேண்டும் யுகித்திருந்தவர்கள் மரத்தின் இடையே ஒளிந்திருந்தனர். அவர்களின் பார்வை அவனின் மேல் தான் உறுதி செய்தனர். அர்விந்த் சுற்றும் முற்றும் பார்வை இட்டவன் இவர்கள் இருப்பதை தெரியாமல் வேக நடையுடன் முன்னேறினான்.

கயவன் 1

.. என்.. என்ன சத்தம்? எனக்கு அப்படி ஒன்னும் கேட்.. கேட்கலியே..” என்றவன் உடனே “நீ.. நீ.. நீ போடா இங்கிருந்து! உனக்கு என்ன பைத்தியமா எது.. எதையோ” அவன் சொல்லி முடிக்கவில்லை. எங்கோ இருந்து பறந்து வந்தது ஒரு கட்டை! அது சரியாய் அவனின் தலையில் விழுந்தது! வலியுடன் தலையை கையால் பிடித்துக்கொண்டு தரையில் சரிந்தான் கலைவாணன்.

மகேனுக்கு மட்டும் அது தென்றலாக இருக்கும் என மனதில் தோன்ற “இன்னும் வேகமா அடி கொடு அப்போவது இவன் உண்மையை சொல்லறானான்னு பார்ப்போம்” என்றான். அவனின் குரலில் அவ்வளவு கோவம் இருந்தது.

“இல்ல! இல்ல அடிக்காத! நான் சொல்லறேன். முன்பு எனக்கு அங்கே ஓர் வீடு இருந்தது. ஆனா அதை எப்பவோ நான் ஒருத்தரிடம் வித்துட்டேன்” கலைவாணன் அவ்விடத்தை சுற்றி பார்த்த படி பயத்தில் சொல்லிக் கொண்டிருக்கையில் ரூபன் அதிமுக்கியமான ஆராய்ச்சியில் இருந்தான்.

எங்கிருந்தது அந்த கட்டை? யாரு அதை எடுத்து வந்தது. ஆனா இங்கு எங்களை தவிர வேறு யாரும் இல்லையே! ஒருவேளை நான் தண்ணி எடுக்க போகும் போது இவன் அக்கட்டையை கயிற்றில் ஏதும் கட்டி வைத்து இருந்தானா? அவன் பலமான சிந்தனையில் இருந்தான்.

“அப்படி வா வழிக்கு” என சொல்லி ரூபனை பார்த்தவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. உடனே “டேய் இங்க இவன் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளு” என்றவன். கலைவாணனை பார்த்து “அந்த வீட்டில் இருந்த ஆதி, தென்றல் அப்பறம் அந்த சின்ன பொண்ணு எல்லாம் எங்கே?” என அவனின் அடுத்த கேள்விகளை கேட்டான்.

சுற்றி முற்றியும் பார்த்துக் கொண்டே “எனக்கு தெரியாது. என்ன எதுனு சொல்லாமலே அவர்கள் எல்லாம் திடீரென வீட்டை காலி செய்து விட்டார்கள்” என்று சொல்ல “ஆமாம்! நாங்க ஓடி தான் போனோம். ஆனா எங்களை அங்கிருந்து துரத்தனது நீ! நீயேதான் என்னை அவர்களிடம் இருந்து பிரித்து தனியாக அனுப்பினாய்!” மீண்டும் அந்த பெண்ணின் குரல் கேட்டது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.