(Reading time: 70 - 139 minutes)

அங்கிருந்த போலிசிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிக போர்மளிதிஸ் ஏதும் இல்லாமல் சீக்கிரமாக அவர்களுக்கு தென்றலின் உடல் வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதன் பின்னரே மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அதே மருத்துவமனையில் ரூபனும் மகேனின் தங்களின் காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டனர். தீபன் குட்டி வினிதாவை குழந்தைகளின் மருத்தவரிடம் தூக்கி சென்றான். அவளின் தற்போதிய மன நிலைமை மற்றும் டின்யே (DNA) டெஸ்ட்க்கு ரத்தம் எடுக்கப்பட்டது. இவள் ஆதி தென்றலின் தம்பதியினர் குழந்தை என நிருபிக்க அது அவர்களுக்கு தேவைப்பட்டது. ரூபனும் மகேனின் உடலை வாங்க வேறுறோரு மருத்துவமனைக்கு சென்றான். அவனின் வேண்டிக்கொள் இணங்க டின்யே (DNA) டெஸ்ட்க்கு தேவையானைதை மருத்துவர்கள் எடுத்தனர்.

போர்மல் ரிப்போர்ட், டின்யே (DNA) டெஸ்ட்,பில் செடேல்மென்ட்,அது இது என்று ஒருவழியாக அவர்களுக்கு தென்றல் ஆதியின் உடல் கிடைக்க நள்ளிரவானது! தென்றலுக்கு வெறும் எழும்புகள் என்றாலும் அதற்கு தகுந்த மரியாதையை செய்ய நினைத்தர்கள். அவர்கள் இருவரின் உடலையும் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ரூபனின் வீடு

ரவு நள்ளிரவை தாண்டியது. காலையில் சென்றவர்கள் இன்னும் அங்கு வந்து சேராமல் இருந்தனர். மதியத்திலிருந்து அவர்கள் வினிதாவை தேடினர். ஆனால் அவள் இன்னும் கிடைக்கவில்லை என்ற பயத்தில் மற்றவர்கள் இருந்தனர். மழை காற்று விசியது. மெல்ல ஆரம்பித்த மழை, நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கியது.

வினிதாவின் அண்ணனும் அண்ணியும் இனி எல்லாம் முடிந்தது என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர். வினிதாவை இனி பார்க்க முடியாதென சத்தமின்றி அழுதனர். அவர்களுக்கு துணையாக சித்ராவும் அமுதாவும் அமுதனும் அமர்திருந்தனர். மூவரின் மனமும் கலங்கி இருந்தது. ஒவ்வொவரும் எந்த ஒரு ஆபத்தில்லாமல் வினிதா நல்ல படியாக கிடைக்க வேண்டும் என மனதில் வேண்டினர்.

ரூபனின் அப்பா பூஜையில் அமர்த்திருந்தார். அவருக்கு தெரியும் வினிதா அவர்களின் அருகே தான் இருக்கிறாள். ஆனால் அவள் அந்த பேயின் கட்டுப் பாட்டில் இருந்தாள். அது அவருடன் கண்ணாம்பூச்சி ஆடியது. மனதை ஓர் நிலைப் படுத்தி அவர் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

“யாரும் அழ வேண்டாம். வினிதா இங்கு அருகில் தான் இருக்கிறாள்” என்றவர் கையில் ஒரு கிண்ணத்தை வைத்திருந்தார். அதில் மந்தரித்த தண்ணீர் இருந்தது. இன்னொரு கையில் குடை பிடித்துக் கொண்டு அந்த கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மண்டபத்துக்கு அருகே இருக்கும் ஆற்றை நோக்கி சென்றார்.

அவர் அப்படி திடீரென செல்லுவதை பார்த்தவர்கள்,அவர்களும் அங்கிருந்த குடைகளை எடுத்துக்கொண்டு அவரின் பின்னால் சென்றனர். அவர் ஓரிடத்தில் நின்று எதையோ உற்று பார்ப்பதை கண்டு, அவர்களும் அந்த திசையை பார்த்து உரைந்த்து நின்றனர்.

மழை வெளுத்து வாங்கியது. வினிதா ஆற்றின் இரும்பு பாலத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். அவள் ஆற்றில் ஓடும் நீரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அடை மழையின் காரணமாக ஆற்றில் நீர் அதிகரித்து வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. அவள் எப்போது வேணும்னாலும் ஆற்றில் குதிக்கலாம். அப்படி அவள் குதித்தால் அவளை அவர்களால் காப்பாற்ற முடியாது.

ரூபனின் அப்பாவின் வருகையை அவள் உணர்ந்தாள். அவளின் முகம் கொஞ்ச கொஞ்சமாக மாறி வேறோவரின் முகமாக தெரிந்தது. அதன் கண்களில் வெறுப்பு, நிராசை, ஏக்கம் எல்லாம் மாறி மாறி வந்து போனது. ஆசையாக வாழ்ந்த வாழ்க்கை கண்முன்னே தோன்றியது. அதன் தாக்கத்தில் அவள் வாய் விட்டு கதறி அழுதாள்.

சோவென பெய்யும் அடை மழையும் அவள் கதறி அழும் சத்தமும் அங்கிருப்பவர்களுக்கு கேட்டது. ரூபனின் அப்பா அவளை நெருங்க முயற்சித்தார். அவள் கோபம் கொள்ளும் விழிகளோடு அவரை பார்த்து முறைத்தாள்!

அவர் அங்கேயே நின்றுவிட்டார். அதனுடன் பேச ஆரம்பித்தார் “வினிதாவை விட்டு விடு!” என்றார். அது மாட்டேன் என்பது போல அதை அசைத்தது.

“உன்னை கொன்றவர்களை நீ பழி வாங்கிவிட்டாய்! அவளை விடு! அவள் மேல் அன்பு கொண்டவர்களை நோகடிக்காதே!அவளுக்கும் உன்னை போல வாழ வேண்டும் ஆசை இருந்திருக்கும்.” – ரூபனின் அப்பா

“இவள் என் வினிதா. என்னுடன் இருப்பது தான் இவளுக்கு பாதுகாப்பு” என்றது அது!

“இல்லை! நாங்கள் சொல்லுவதை கேள்! அவளை விடு. அவள் உனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. உன் குடும்பத்தை சீர்குலைக்கவில்லை. பின்னர் நீ ஏன் அவளின் உயிரை எடுக்க துடிக்கிறாய்?”

“எனக்கு அவளை ரொம்ப பிடித்திருக்கிறது. நான் சொல்லவது எல்லாம் அவள் கேட்டு, எனக்கு உதவுகிறாள்!”

“அவள் எப்போது உனக்கு உதவி செய்தாள்? நீ அவளை உன் கட்டுக்குள் வைத்திருக்கிறாய். உன்னால் செய்ய முடியாததை, அவளின் சரீரத்தை கொண்டு செய்து முடித்து விட்டாய். இனி அவளின் உடலிருந்து வெளியேறு!”

“முடியாது! இது எனது உடல்!”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.