(Reading time: 18 - 36 minutes)

நேற்று இரவு கேட்ட அந்த சத்தமும், திடீரென அந்த வீட்டில் சூழ்ந்த குளுமையும் இருட்டும் அவளால் என்றுமே மறக்க முடியாத ஒன்றாகி போனது. அந்த சூழ்நிலையும் ஓட முடியாமல் நடக்கவும் முடியாமல் தவித்தது தான் அவளுக்கு இன்னும் கடுப்பாகியது.. டாக்டர் சொன்னது போல கொஞ்சம் கொஞ்சமாக நடக்க முயற்சித்தாள் தான் சீக்கிரம் குணமாகிட முடியும். இல்லையெனில் கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமல் இருக்கும் ஆபத்திடமிருந்து எப்படி தப்பிப்பது?அதே யோசனையுடன் கைகள் ஊன்றி எழுந்து நின்று நடக்க முயற்சித்தாள் அவள்.

ன்னொருபக்கம், உடைந்து கிடந்த கண்ணாடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் கதிரவனும் பிரபஞ்சனும். அவர்களுக்கு உதவிடும் நோக்கம் கொஞ்சம் இல்லாமல் ஆழ்ந்த சிந்தனையில் சிக்கியவன் போல பாவ்லா செய்தான் கார்முகிலன்.

“பிரபா, குப்பை தொட்டியை எடுத்து வந்துருக்கலாம்ல டா? இதையெல்லாம் தூக்கிட்டு போயி கொட்டுறப்போ சிந்திடுச்சுனா?” என்று கதிர் கேட்கவும், அதுக்கு ஏன்டா குப்பை தொட்டி ? அதான் கார்கி வாயி இருக்கே!” என்ற பிரபா கார்முகிலனை கிண்டலாய் பார்க்க, அவர்களின் இருவரின்ன் பேச்சையுமே சட்டைசெய்யாத விதத்தில் உச்சு கொட்டினான் கார்கி.

“ ச்ச இப்படி ஏமாந்து போயிட்டேனே டா” என்றான் கார்முகிலன்.

“போச்சு இவன் இந்த பூமிக்கு ஏதோ சொல்ல வரான்போல”- கதிரவன்.

“தயவு செஞ்சு என்னனு கேட்டுரு மச்சான்.. இல்லன்னா அதுக்கு வேற தனியா பேசி சாவடிப்பான்..” என்று பிரபா எடுத்துகொடுக்க சிரிப்பை அடக்கிக் கொண்டு, “என்னடா ஏமாந்து போயிட்ட?” என்றான் கதிர்.

“அதாவது மச்சி, லீலா நம்ம வீட்டுல இருந்தால் பேய் தொல்லை இருக்காதுனு நினைச்சேன்.. ஆனா அது இல்லனு ப்ரூவ் ஆகிடுச்சு பாரு” என அந்த கண்ணாடித் துகள்களைக் காட்டினான் கார்முகிலன்.

“எரும,உயிர் காப்பான் தோழன்னு சொல்றதை உயிர் எடுப்பான் தோழன்னு நான்  மாத்துறதுக்குள்ள என்னனு சொல்லி தொல்ல..”

“ஹீ ஹீ அது வந்து பிரபா, நாம மூணு கன்னி பசங்க இல்லையா? அதுனால நம்மள டிஸ்டர்ப் பண்ணத்தான் பேய் வருதுனு நினைச்சேன்..”

“ஆஹான்..”

“ஹான்.. அதான் லீலா நம்ம வீட்டுல இருந்தா ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மாதிரி பேயே யாரிந்த பொண்ணுனு கன்வியுஸ் ஆகிடும்னு நினைச்சேன்” என்று அவன் சொல்லவும்

“த்தூ.. உன்னையெல்லாம் புத்திசாலினு இந்த உலகம் நம்புதே.. ச்சை.. காலக் கொடுமை கதிரவா..” என சலித்துக் கொண்டான் பிரபஞ்சன்.

“இரு மச்சான் அவன் இன்னும் சொல்லி முடிக்கல.. மொத்தமா கேட்டுட்டு சேர்ந்தே துப்புவோம்” – கதிரவன்.

“ அதாவது மச்சி, பொண்ணுன்னா பேயே இறங்கும்னு சொல்லுவாங்களே.. லீலா நம்ம கூட இருந்தா அவளை பார்த்து பேய் மனசு மாறிடும்னு நினைச்சேண்டா.. அதான் மனசே உடைஞ்சு போச்சு” என்று கார்கி சொல்லி முடிக்கவும் கையில் வைத்திருந்த துடப்பத்தை தூக்கி மிரட்டினார்கள்.

“கிறுக்கு.. பொறக்கும்போதே நீ இப்படித்தானா மச்சி.. பேசாம ஒன்னு பண்ணலாம்.. நாங்க உன்னை கொன்னுடுறோம்..நீ எல்லா பேய்க்கிட்டயும் டீலிங்க் பேசி எங்களை காப்பாத்து” என்றான் பிரபஞ்சன். அவன் சொல்லி முடிக்கும்போது லீலா அங்கு வந்திருந்தாள்.

“என்ன பேய்? யாரு பேய்?” என மூவரையும் பார்த்து கேட்க,

“நீ எப்படி நடந்து வந்த?” என்றான் கதிர்.

“கால் சுலுக்குகு மருந்து தந்துருக்காங்க..கஷ்டப்பட்டாவது கொஞ்சம் நடக்க சொன்னாங்க.. அதான் கொஞ்சம் நொண்டி அடிச்சு, கொஞ்சம் சுவரை புடிச்சிட்டு வந்தேன்.. வந்ததும் நல்லதா போச்சு.. என்ன பேய்னு பேசிட்டு இருந்தீங்க? ஒன்னும் இல்லனு சமாளிக்காதீங்க. கார்கியோட குரலு பக்கத்து தெருவுக்கே கேட்டுது!” என்று அவர்களை பொய் சொல்ல வேண்டாம் என்பதை மறைமுகமாக எச்சரித்தாள் லீலா.

மூவரும் பதில் பேசாது இருக்கவும், “நேத்து நைட்டு என்னமோ உடையுற சத்தம் கேட்டுச்சுனு உங்க மூணு பேரையும் கூப்பிட்டேனே.. ஏன் வரல?” என்று கூர்மையான பார்வையும் நோக்கினாள் அவள்.

அன்று காலை லீலா எழுந்திருக்கும் முன்னரே மூவரும் என்ன சொல்லுவதென்று முடிவெடுத்து இருந்தனர். லீலா சில நாட்களுக்கு சுயோதசேனாவில் இருக்கும் பட்சத்தில் முடிந்த அளவு அவளிடம் பொய்களை அடுக்கடுக்காக சொல்ல வேண்டாம் என்றிருந்தான் பிரபா. அவளுக்கு சந்தேகங்களை அதிகரிக்க வைத்தால்,அவளை அங்கிருந்து அனுப்புவது சிரமம்.மேலும், அவளைக் கடத்தியது யார்? என்ற உண்மையை அறிய அவளின் நம்பிக்கையும் அவசியம் தானே? இப்போது கடத்தியது யாரென கேட்டால் கொஞ்சமும்யோசிக்காமல் மூவரையும் கைக்காட்டிவிடுவாள் லீலா. அதனால் அவளுக்கு போதுமான சுதந்திரத்தையும் உண்மையையும் வழங்கவே நினைத்தனர். அதனால் என்ன சொல்லவேண்டும் என்ற குழப்பமின்றி அவளை தெளிவாய் பார்த்தனர் மூவரும்.

“ நம்ம வீட்டுக்கு பின்னாடி என்ன இருக்குனு தெரியுமா லீலா?” என்றான் கதிரவன்.

“இதென்ன கேள்வி? பீச் இருக்கு.. என்னை அங்க இருந்து தூக்கிட்டு வந்த்தாக தானே கதை சொல்லிட்டு இருக்கீங்க.. அது எப்படித் தெரியாமல்போகும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.