(Reading time: 18 - 36 minutes)

“நீ கோடி தடவை சொன்னாலும் நாங்க உன்னை கடத்தல அதான் உண்மை. இதை நாங்களே அடிக்கடி வாய் வார்த்தையா சொல்லுறது விட எங்களை புரிஞ்சுக்கிட்டா உனக்கே தெரிய வரும்னு நம்புறோம்..”

“அது மட்டுமில்ல, உன்னை கடத்தினவங்க எங்களுக்கு சம்பத்தப்பட்டவங்களோனு நான் சந்தேகிக்கிறேன்.. சோ நீ இங்க இருக்குறதுதான் நல்லது.. உனக்கு ட்ரெஸ்ஸு, ஃபோனு இன்னும் என்ன  என்ன வேணுமோ யோசிச்சு வை, சாயங்காலம் உன்னால நடக்க முடிஞ்சா,இல்லனா நாளைக்கு நான் கூட்டிட்டு போயி வாங்கிதரேன்” என்றான் பிரபஞ்சன். மற்ற இருவருமே அதை ஆமோதிப்பது போல தலைஅசைத்தனர்.

“நான் உங்க கூட வரமாட்டேன்..கதிர் கூடத்தான் போவேன்”என்றாள் லீலா.

பொதுவாக கதிர் வீட்டை விட்டு அதிகம் வெளியில் செல்பவன் இல்லை.அதற்கான காரணங்களை பிரபாவும் கார்கியும் அறிந்திருந்தாலுமே அவர்களுக்கும் அதில் உடன்பாடு இல்லை.அதனால் மௌனித்திருந்து, கதிரை பேச வைத்தனர். கதிரவன் மறுத்திட, லீலா அதை எதிர்க்க, இறுதியில் அவளே வென்றாள்.

“அப்பறம் இன்னொரு விஷயம், எனக்கு இப்போதைக்கு ஃபோன் வேணாம்.. “ என்றாள்.

“ஏன்?” என மூவருமே கேட்க,

“ஃபோன் கையில் இருந்தால் வீட்டுக்கு பேசத் தோணும்.. அட்லீஸ்ட் குட்டிமாகிட்ட பேசனும்னுநினைப்பேன்..அவ இப்போத்தான் புது வாழ்க்கையை ஆரம்பிக்கபோறா.. எனக்கு என்ன நடந்துச்சுனு அவளுக்கு தெரிய வந்தாலது அவளோட வாழ்க்கையை சேர்த்து பாதிக்கும்..இப்போதைக்கு நான் கடத்தப்பட்டவ மாதிரியே ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு போறேன்” என்று லீலா வார்த்தைகளால் வாள்வீசிட, வீசிய வாளை குண்டூசி போலதூக்கி எரிந்துவிட்டு,

“குட்டிமான்னா,உன் தங்கச்சியா? தங்கச்சி மேல அவ்வளவு பாசமா உனக்கு?” என்றான் பிரபஞ்சன்.

“பின்ன? தங்கச்சி என்ற உறவே ஸ்பெஷல்தானே? இதுக்குத்தான் யாருக்காச்சும் அண்ணனாக இருந்துருக்கனும்..” என்றதும் பிரபாவின் முகம் விழுந்துவிட்டது. அககண்ணில் தன் குடும்பத்தாரின் முகங்களே வந்து போயின.

“ஹேய்.. கொஞ்சம் பார்த்துபேசும்மா” என்று எரிச்சலாக எச்சரித்தான் கார்கி.எங்கே அவன் கோபமாகி விடுவானோ என்று பயந்த பிரபா,

“அட விடு மச்சான்..சின்ன பொண்ணு” என்றான். “உன் கோபம் எல்லாம் என்னை என்ன செய்துவிடும்? என்பது போல” லீலா கார்முகிலனைப் பார்த்தாள். ஆனால் தான் கேட்ட ஒரே கேள்வியில் முகம் மாறி போய் அதைமறைக்க முயற்சித்த பிரபஞ்சனை பார்க்கத்தான் என்னவோ போல இருந்தது. அவன் மன்நிலையை மாற்றிட நினைத்தாள்.

“ஆமா, எனக்கு நிக்நேம் வெச்சுட்டீங்களா?” என்று ஆர்வமாக லீலா கேட்க, சின்ன புன்னகையுடன் ஆமேன தலையசைத்தான் பிரபஞ்சன். மற்ற இருவரும் கூட அவனை ஆர்வமாக பார்க்க,

“பொம்மாயீ” என்றான் பிரபஞ்சன். அருந்ததி படத்துல வர்ற வில்லனைப்போலவே குரலை மாற்றி அவன் சொல்ல லீலாசலித்துக் கொண்டாள்.

“அய்யெ என்ன பேரு இது? உவக்..” என்றாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னை நான் நம்பலனு சொன்னதும் உன் கண்ணுல ஜ்வாலை வந்திச்சே..அதுல உருவாகின பேரு அது.. இனி நான் அப்படித்தான் கூப்பிடப்போறேன்.. நீ முடியாதுனு சொன்னா அப்போ பிரசன்னானு சொல்லித்தான் கூப்பிடுவேன்.. எப்படி வசதி?”என்றான் பிரபஞ்சன்.அவன் அறியாமலேயே அவனது வார்த்தைகளில் ரசனை வெளிப்பட்டது. அதை கவனிக்க வேண்டியவர்கள் கவனித்து வைத்தனர்.

“அய்யே மூஞ்சிய பாரு.. ஒருவேளை கல்யாணம் கில்யாணம் பண்ணி அப்பா ஆகிட்டீங்கன்னா, உங்க பிள்ளைக்கு பேரை வெச்சிடாதீங்க..பாவம் அது..ஆளைப்பாரு.. பொம்மாயீயாம்.. விட்டா பொம்மைனு வைப்பாங்க” என்று சலித்துக் கொண்டே திரும்பி நடந்தாள் லீலா.பாதி தூரம் தத்தி தத்தி நடந்தவளின் முகத்தில் புன்னகை மலர, “பொம்மாயீ!!” என்று யாருக்கும் கேட்காத வண்ணம் சொல்லிப் பார்த்தாள். அதே நேரம் பிரபஞ்சனின் இதழ்களிம் மென்னகையுடன் வளைந்தன.. “இப்புன்னகை நிலைக்குமா? பார்ப்போம்.

றுநாள், காலை சூரியன் பல் இளிக்க, போர்வையில் முகத்தை மூடிக் கொண்டு தூங்கியவளின் போர்வையை லேசாய் விலக்கி சிரித்தான் பிரபஞ்சன். சூரிய வெளிச்சத்தில் அவன் முகத்தை பார்த்து கனவா என கண்களை கசக்கிய பிரசன்னலீலா படாரென எழுந்தாள்.

“ஹேய் ரிலாங்க்ஸ் பொம்மாயி”

“லூசு.. ஒரு பொண்ணு ரூம்ல இப்படியா வரது?”

“ஏன் ?நான் என்ன பண்ணேண்.. கார்கியை கூட நாங்க இப்படித்தான் எழுப்புவோம்..”

“ அவங்க பையன் நான் பொண்ணு” என்று லீலா சொல்ல,

“சோ வாட்? “ என்று பிரபஞ்சன் புருவத்தை உயர்த்த,

“அட ஆறடி பிரபஞ்சா உன் மூளையில் வெறும் பஞ்சா?” என்று மைண்ட் வாய்சில் திட்டினாள் லீலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.